Thursday, August 31, 2006

நானாத்தான் நாறீட்டனா???

என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.

சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.

அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.

உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.


மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.

தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

21 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

நல்ல பதிவு உதய்.
இதுக்குத்தான் உதய் நாங்க இங்க விளையாடுற மாதிரி http://santhoshpakkangal.blogspot.com/2006/03/44_03.html விளையாடனும் அப்படின்னு சொல்றது. அப்படி இல்லாட்டி என்னைய மாதிரி நிரந்தர 12த் மேன் ஆயிடனும் ஒரு பிரச்சனை இல்ல பாருங்க.

said...

:)):))

said...

பதிவு அப்புறம் பொறுமையா படிச்சு பின்னூட்டம் குடுக்கறேன்.. இப்போதைக்கு, உங்க டெம்ப்ளேட் align:justify' கொஞ்சம் எடுத்துவிடுங்க.. நெருப்புநரி'யில எழுத்தே தெரிய மாட்டேங்குது.. :(

said...

ராசா, இப்போ ஒழுங்க தெரியுதுங்களா????

said...

ரைட்டேய்.

said...

நல்லா எழுதிருக்கீங்க. எகத்தாளம் எல்லாம் பேசிட்டு ஆட்டத்துல தோத்து மட்டும் போயிருந்தீங்கன்னு வையுங்க மெய்யாலுமே பதிவோட தலைப்பு உண்மையாயிருக்கும்.
ஜஸ்ட்ல எஸ் ஆகிட்டீங்க.
:)

said...

கைப்புள்ள, அப்ப நானா நாறிக்கலைங்கறிங்க??? அப்படின்னா, கொசுவர்த்தி சுத்த வேண்டாமா???

said...

சந்தோஷ், உங்க கிரிக்கெட் ஆடற அளவுக்கு எங்க ஊரு பெரிய ஊரு கிடையாது. சுத்தி முத்தி மாமன், மச்சான், பெரியப்பா, சித்தப்பா ன்னு வந்துரும். அடக்கி வாசிக்கணும், இலைன்னா நறுக்கிறுவாங்க...

said...

சிவா, ஸ்மைலிக்கு அர்த்தம் என்ன? தலைப்பு உண்மைங்கறீங்களா, இல்லையா???

said...

//அப்படின்னா, கொசுவர்த்தி சுத்த வேண்டாமா???
//
பதிவு போட்டாலும் போட்டு வாங்குறாய்ங்க...கமெண்டு போட்டாலும் போட்டு வாங்குறாய்ங்க...ஒரு மனுசன் என்ன தான்யா செய்வான்? சவுண்டு பார்ட்டி ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்க கொஞ்சம் சொல்லுங்கய்யா...

said...

அட எப்படி ஜெயிக்கறோம் என்பது முக்கியமில்லைங்ண்ணா, ஜெயிக்கறோம் என்பது தான்ங்ண்ணா முக்கியம். உண்மையிலேயே நீங்க கிங்குங்ண்ணா

said...

உதய்... அப்படித்தான் ஆகுது... நானும் பலரை சேரனும்னு இட்ட சில பதிவுகள் சுத்தமா கவனிப்பே இல்லாம போயிருக்கு.. அந்த ரெகுலர் வட்டங்களோட கவனிப்புகூட இல்லாம..

இப்பலாம்.. ஒரு கூட்டணி அமைச்சுகிட்டு, வெட்டியா மாத்தி மாத்தி காமெண்ட் போட்டு.. நல்ல பதிவோ இல்லையோ ஒரு 400 - 500 காமெண்ட் வாங்கி எப்பவும் முதல் பக்கத்துலயே இருந்துறதுதான் டிரென்ட்...

said...

//தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். //

செஞ்சீங்களா இல்லையா? :))))

said...

//சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது.//
அவ்வளவுதான் நாங்க ஜெயிச்சிட்டோம்னு சொல்லி கிளம்பியிருக்கலாம் ;)


//முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.//
ரோசக்காரப்பயனா இருப்பான் போலிருக்கு ;)

அருமையா எழுதியிருக்கீங்க உதய்

said...

நானாத்தான் நாறீட்டனா???"

அந்த சவால் விட்டு தோத்திருந்தாதான் மேல சொன்ன மாதிரி, நீங்கதான்
கெலிச்சிட்டிங்களே!!
ஆமா, மெய்யாவே கெலிச்சிங்களா?

said...

Hmm..Nicely put,

said...

உதய்

அப்பவே சொல்லனு இருந்தேன்..

//நானாத்தான் நாறீட்டனா???" //

"நல்ல தலைப்பு" மிகவும் இரசித்தேன்..சிரித்தேன்..

said...

//"நல்ல தலைப்பு" மிகவும் இரசித்தேன்..சிரித்தேன்.. //

சிவா, திமிரு படத்தில் வடிவேலு சொல்லும் ஒரு டயலாக் இது....

said...

//அந்த சவால் விட்டு தோத்திருந்தாதான் மேல சொன்ன மாதிரி, நீங்கதான்
கெலிச்சிட்டிங்களே!!
ஆமா, மெய்யாவே கெலிச்சிங்களா? //

தம்பி, அந்த வெற்றியை எங்க ஊரு வரலாற்றில் பதிச்சு வைச்சிருக்கோம், வேணும்னா போய் பார்த்துட்டு வாங்க...

said...

எனக்கொரு 'உண்மை' தெரிஞ்சாகணும்.

எந்தக் கடையில் கொசுவத்தி வாங்குனீங்க?

(நம்ம கடைதான் தமிழ்மணத்துக்கு ஹோல்சேல் தெரியுமுல்லெ?)

:-)))))))

said...

//(நம்ம கடைதான் தமிழ்மணத்துக்கு ஹோல்சேல் தெரியுமுல்லெ?)//

தெரியும் தெரியும்... நீங்கதான் ஸ்டாக் இல்லைன்னு போர்டு போட்டு ரொம்ப நாள் ஆச்சே :-)