Wednesday, June 28, 2006

நானும்

Every dog has his day.
ராசா "ஆறு" மேட்டர்ல கோர்த்து விட்டதை பார்த்தட்டு சந்தோஷமா இருந்தப்போ இந்த படம் கண்ணுல மாட்டுச்சு...

Thursday, June 22, 2006

செய்வன திருந்த செய்

செய்வன திருந்த செய், இது பெரியவங்க நெறைய தடவை சொல்லி இருந்தாலும் பட்டாத்தான் புத்தி வருது. பீமா படத்தோட ஃபோட்டோ என் மெயில் பாக்ஸில் பார்த்தவுடனே திரிஷாவுக்கு என் ஜொள் தீபாராதனையை முடித்துவிட்டு யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ந்னு எனக்குன்னு இருக்குற கும்பலுக்கு பார்வார்ட் செய்தேன்.

எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம் உண்டு. இந்த மாதிரி மெயில் பண்ணும் போது BCC போட்டுத்தான் அனுப்புவேன், அதே சமயம் எங்கிருந்து எனக்கு வந்தது என்பதையும் அழித்து விடுவேன். ஆனால் சுப்ஜெக்ட் லைனில் FW என்பதை வைத்திருப்பேன். இது அனைவருடைய பிரைவசிக்கும் பாதுகாப்பு என்பதால்தான்.

இன்னைக்கு இதை பண்ணும் பொழுது கடைசியா இருந்த "WITH LOVE, Rekha" அப்படிங்கறதை அழிக்க மறந்து அனுப்பிட்டேன். உடனே கிளம்பிட்டாங்கப்பா, யாரது யாரதுன்னு. பெங்களூரு BTM லே அவுட்ல கிளம்பர புழுதிய கூட அடக்கிறலாம், ஆனா இதை அடக்க முடியாதுடா சாமி...

பின்குறிப்பு: ரேகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்... ஒரிஜினல் சோர்ஸ் சொன்ன தகவல் இது...

Monday, June 19, 2006

எப்படி? எப்படி?

ரொம்ப நாளாச்சு பிளாக் பக்கம் ஒதுங்கி... எனக்குள்ள இருந்த நல்ல உதயின் குரலால் இந்த போஸ்ட்.

போன வாரம் நல்ல வெட்டித்தனமான மெயில் ஒன்னை மொத்தமா ஒரு கும்பலுக்கு அனுப்பினா அதுல ஒருத்தன் மெயில் பாக்ஸ்ல இருந்து கீழே இருக்கற மெசேஜ் வந்தது.

"I am on PTO and will be back on June 19."

நானும் மண்டையை உருட்டி பொரட்டி PTO ன்னா என்னன்னு ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை. ஒரு அறிவாளி கிட்ட கேட்டா நான் என்ன கேட்டேன் அப்படிங்கறது மறக்கர மாதிரி ஏதேதோ சொன்னான். நண்பன் ஒரு வாரம் லீவுங்கறதால ஆர்வத்தை அடக்க முடியாம அவுட்லுக்-ல ரிமைண்டர் செட் பண்ணி இன்னைக்கு மெயில் பண்ணி கேட்டா "டுபுக்கு, நீயெல்லாம் IT வேலை செய்யறியான்னு டவுட்டா இருக்கு...என்ன இது சின்ன புள்ள தனமால்ல இருக்கு…" அப்படின்னு சொல்லிட்டு PTO - Paid Time Off ன்னு சொன்னான்.

அப்புறம் acronym எதுக்கும் அர்த்தம் தெரியலைன்னா http://www.acronymfinder.com/ பார்துக்கன்னு கரிசனமா உதவியும் பண்ணினான். அங்க போயி பார்த்தா, எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்கு. விதம் விதமா வகை வகையா ஒரே acronym க்கு பல அர்த்தங்கள். (ஆமா, acronym க்கு தமிழ்ல என்ன?)

பின்குறிப்பு:- டேய், என்னைய வச்சு காமெடி எதுவும் பண்ணிடலையேன்னு வடிவேலு ஸ்டைல்ல கேட்டான் பாருங்க... 3 நாளு இத வச்சு அவனை காமெடி பண்ணி எங்களுக்கு வயிறெல்லாம் புண்ணான மேட்டர் சொன்னா முதுகில டின் கட்டிருவான்னு அப்படியே அடக்கி வாசிச்சுட்டேன்...

Thursday, June 01, 2006

திரும்பி பார்க்கிறேன்

இன்றோடு பிளாக் எழுத ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. என் புருஷனும் கச்சேரிக்கு போனான் அப்படின்னு ஆரம்பிச்சது இது. அப்புறம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்குச்சோ அப்படிங்கற மாதிரி ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு பெரிய விஷயம் எதுவுமே நான் எழுதலை... இருந்தாலும் நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

1. செந்தில். நான் பிளாக் ஆரம்பிப்பதற்க்கு காரணமே இவன் தான். இவன் தான் எனக்கு பிளாக் அறிமுகப்படுத்தியது.
2. சுவாமி. நிறைய பிளாக்குகளை அறிமுகப்படுத்தியது இவன் தான். அப்புறம் சில டெக்னிகல் டிப் எல்லாம் குடுத்து என் சைட்டை பார்க்கற மாதிரி மாத்தியதும் இவன் தான்.
3. கிருஷ்ணா. அங்க அங்க அடி வாங்கி நின்னா வந்து உதவி பண்ணி எழுத வைத்தவன்.
4. தமிழ்மணம். மொத்த குழுவுக்கும் நன்றி. என் பிளாக்கை நிறைய பேருக்கு கொண்டு போய் சேர்த்த பெருமை முழுவதும் தமிழ்மணத்துக்கே.
5. துளசி அக்கா. மறு மொழி மட்டுறுத்தலின் அவசியத்தை சொல்லி பின்னூட்டம் போட்டாலும் போட்டார் வருகை புரிகிறவர்களின் எண்ணிக்கையும் பின்னூட்டம் பதிபவர்களின் எண்ணிக்கையும் எகிறி விட்டது.
6. நண்பர்கள். பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தியவர்கள் நிறைய பேர். நிறைய பேர் பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து படித்து எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

நிறைய படித்து தெரிந்து கொண்டேன். கற்றது கல்லளவு கல்லாதது உலகளவு என எனக்கு திரும்ப திரும்ப நினைவூட்டுகிற பலர் இங்கே எழுதிக் கொண்டுள்ளார்கள். ஆல மர நிழலில் வளரும் புல் நான்... தொடர்ந்து எழுதுவேன்.