நிலவின் அருமை
அமாவாசையில்,
வெளிச்சத்தின் அருமை
இருட்டில்.
குடையின் அருமை
வெயிலில்,
மார்கழியின் அருமை
சித்திரையில்.
அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...
சவுண்ட் விட்டது Udhayakumar at Monday, August 21, 2006
கிடங்கு: கவிதை
6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//
:)) அருமையாக உள்ளன கவிதைகள் உதய் :)
//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//
:))...
ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...
நான் தான் பயன்படுத்தறதில்லை... உங்களுக்காவது பயன்படட்டும் ;)
வெளிநாட்டுல இருந்தா என்னவெல்லாம் தோணுது இல்ல...நடக்கட்டும் நடக்கட்டும்..
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒருவகை யாகம்
//ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...//
அய்யோ, நான் நல்லா சமைப்பேங்க. நேத்து ஏதோ கொஞ்சம் சொதப்பிருச்சு, அவ்வளவுதான்.
//'ஒளியின்/வெளிச்சத்தின்' அருமை இருட்டில் சரியாக இருக்குமோ? //
சின்னத்தம்பி, நீங்க சொன்னதுதான் கரெக்ட், நன்றி!!!
கவிதை மட்டுமல்ல, தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ள படங்களும் அருமை.
Post a Comment