Thursday, August 17, 2006

அண்ணனும் அண்ணியும்...



அண்ணனுக்கு கல்யாணம் என்றதும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா இருந்தது, அதுவும் என் அண்ணியுடன் என்றதும். அண்ணன் ரொம்ப நல்லவந்தான். எங்க பெரியப்பாவுக்கு தப்பாம பொறந்த நல்ல புள்ளை. தொழிலே அமையாமல் சும்மா சுத்திட்டு இருந்தான். அப்பவும் அவனை யாரும் வெட்டிப் பயலன்னு சொன்னதில்லை. பெரியப்பாவின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு உறுதியா நம்புனதோட மட்டும் இல்லாம அண்ணனை வைத்து தொழில் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. அண்ணன் அவனோட விடா முயற்சியால பொழைச்சுக்கிட்டான்.

அண்ணிக்கு என்னை விட 2 வயசுதான் அதிகம். அண்ணியோட கண்ணுல இருக்குற குறும்பை வைத்தே எல்லோரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள். அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்ங்கற மாதிரி அதிர்ஷ்டக்காரி! ஊரே அவள் பின்னால்தான் சுத்தி சுத்தி வந்தது, இன்னும் வந்துட்டுதான் இருக்கும். அவ எங்க போனாலும் ஜோ ன்னு இளவட்டப் பசங்க கூட்டம் கூடிருவாங்க...ஆனா எனக்கு என்னமோ அண்ணியோட குறும்பு பிடிச்சாலும் பின்னாடி எல்லாம் சுத்தினது கிடையாது.

ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம்ன்னு அவங்க கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு பெரியப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் நிறைய பேருக்கு தெரிஞ்சுது. அண்ணன் இப்போ இருக்குற நிலைமைக்கு அண்ணியை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா பெரியப்பா சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு உறுதியா இருந்தான். அண்ணியும் ரொம்ப பொறுமையா காத்துட்டு இருந்தாங்க.


அவங்க ரெண்டு பேருக்கும் கசமுசான்னு ஊருக்குள்ள பேச்சு வந்தப்போ, அவங்கப்பா ரொம்ப நல்லவரு, பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான்னு ஒரு கும்பலும், அண்ணி இருக்கிற இருப்புக்கு இவனை எல்லாம் திரும்பி பார்ப்பாங்களான்னு ஒரு கும்பலும் மாறி மாறி பேசுச்சு. இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு.


கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கலை அதனால வருத்தப்படாதீங்கன்னு சிவகுமார் பெரியப்பா சொல்லிட்டாரு. எங்க தாத்தாதான் சொல்லுவாரு நான் அப்படியே சூர்யா அண்ணன் மாதிரி இருக்கேன்னு. பார்போம் எனக்கு அண்ணி ஜோதிகா மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு...

9 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

நாமக்கல் சிபி said...

udhay,
Ithuvum nijamalla kathaya???

(No Tamil font in this PC... So typing it in English)

Udhayakumar said...

அய்யோ, இது உண்மைங்க... ஆனால் என் கதை இல்லை. சூர்யா அண்ணனுக்கும் ஜோதிகா அண்ணிக்கும் கல்யாணம் ன்னு தெளிவா சொல்லிருக்கேனே...

நாமக்கல் சிபி said...

udhay,
naan kEttathu sUrya unga periyappa paiyananu???

avunga rendu perukkum kalyanamnu Oorukke theriyume ;)

Udhayakumar said...

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!! ன்னு கணியன் பூங்குன்றனார் சொன்னதெல்லாம் படிச்சதில்லையா?

:-D (எதுக்கும் ஒரு ஸ்மைலி.. அடிக்க வந்துடாதீங்க)

நாமக்கல் சிபி said...

:-x

avunga rendu perukum kalyanamnu eppovoa ellarum pathiva poatutaanga... naan vera unga periyappa paiyanoanu yoasichi kathai yellam ready panna aarambichitan ;)

Udhayakumar said...

ஓ, அப்படியா? கொஞ்சம் வேலை அதிகம், அதான் பழசா இருந்தாலும் பரவாயில்லைன்னு எடுத்துப் போட்டுட்டேன்...

G.Ragavan said...

இவங்கதான் உங்க அண்ணனும் அண்ணியுமா...ரெண்டு பேரையும் அறிமுகப் படுத்தி வைக்கிறது. ரெண்டு பேருக்கும் நான் ரெண்டு பேருக்கும் ரசிகன்.

கார்த்திக் பிரபு said...

idhu kadhaiyaal nijam

யாத்ரீகன் said...

nalla karpanai.. kalakunga udhai.. sothika enna.. avunga akka nagma vena irukaanga.. sothika anniyoda.. nerunguna sonthamayidalam.. enna solreenga..