கேமரா கவிஞர்கள்
எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் இங்கே போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.
சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு flickR பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த முகம் நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.
ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.
பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...
4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
இந்த கிறுக்கு சமீப காலமா எனக்கும் புடிச்சிருக்கு. உங்க தோஸ்த் தில்லாலங்கடி போட்டோவை எல்லாம் பாக்குறேன்.
ஹ்ம்ம்ம்...இந்த மாதிரி நமக்கு சிபாரிசு பண்ண நம்ம கூட்டாளிங்க எவனும் போஸ்டு போட மாட்றானுவ.
:(
Sun through the leavesஉம் Milwaukee Art museum படமும் நல்லாருக்குன்னு சொல்லுங்க. flickrலியே கமெண்ட் போடலாம்னா அநியாயத்துக்கு மெதுவா இருக்கு. அப்பால வரேன்.
//பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...//
Flicker ஐ இப்படியும் பயன் "படுத்தலாம்" என்று எடுத்துக் கொ(கெ)டுத்த உதயகுமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் தகும் தகும் !!!
//ஹ்ம்ம்ம்...இந்த மாதிரி நமக்கு சிபாரிசு பண்ண நம்ம கூட்டாளிங்க எவனும் போஸ்டு போட மாட்றானுவ.//
கைப்பு, உங்களுக்குத்தான் நீங்களே பதிவு போட்டுக்கறீங்களே???
Post a Comment