Friday, August 04, 2006

நிஜமல்ல, கதை-2!

Part 1 Part 3

நிஷா, நேத்து நைட் உன்னை ஈஸ்ட் என்ட் சர்க்கிள்ல பார்த்தேனே, அங்கேயா தங்கிருக்க? என்று மெதுவாக நூல் விட ஆரம்பித்தான் உதய். ஈரோடையே திருவனந்தபுரத்துக்கு பக்கம்ன்னு சொன்னவன் இதுக்கு என்ன சொல்வானோ என நினைத்து இல்லை இல்லை நான் 9த் பிளாக், ராகி குட்டா பக்கம் என்றாள். நிஷா, நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னமோ இருக்கு, நானும் அங்கதான் என டன் டன்னாய் வழிந்துவிட்டு சாப்பாடெல்லாம் எங்க? என்றான். வீட்டில்தான் என்றவள் எதற்கு சொன்னேன் என்று நாக்கை கடிப்பதற்க்குள் அப்போ எப்போ சாப்பிடக்கூப்பிடப் போற? என அடுத்த ஜொள்ளாஸ்திரத்தை ஏவினான்.

எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லறேன், அவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வரான் என அழுவது போல் சொன்னாள். சொல்லவே இல்லை, உங்க அண்ணன் கூடத்தான் இருக்கியா? நிதானமா கேட்டு சொல்லு ஒன்னும் அவசரம் இல்லை, நான் இங்கேதான் இருப்பேனெ என இடத்தைக் காலி செய்தான். இவளை கரெக்ட் பண்ணறதுன்னா இங்க கம்பெனியிலேயேதான் பண்ணனும் போல இருக்கு, ரொம்ப கஷ்டமாச்சேய்யா! சரி முன் வைச்ச காலை பின் வைக்கிறதில்லைன்னு அடுத்த திட்டத்துக்கு தயாரானான். அய்யோ என நிஷா தலையில் கைவைத்துக் கொண்டு சேரில் தொபுக் என சரிந்தாள்.

நிஷாவை அடிக்கடி சீட்டுக்கு கூப்பிட்டால் வந்து கையை கட்டிட்டு நிக்கறா, கொஞ்ச நஞ்சம் யோசிச்சு வைச்சு இருக்கற ஐடியாவும் மறந்து போகுது. நாமதான் இனிமேல் சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிக்கணும், இனிமேல் அவ சீட்டுக்கு போயிட வேண்டியதுதான் என திட்டம் போட்டுப் போனால் அங்க சரவணன் சைடுல பெஞ்ச் மேல உக்கார்ந்து வறுத்துக் கொண்டிருந்தான், இவளும் கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன நடக்குது இங்க, நிஷா நான் ஒரு டிசைன் டாக்குமெண்ட் பிரிண்ட் பண்ணிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றான் உதய். சரி நான் கிளம்பறேன் என சரவணன் கிளம்பினான்.

டேய், நீ நில்லு. எங்க வந்த, எதுக்கு வந்த, நான் வந்தவுடனே கிளம்பறே? நல்லாயில்லை இதெல்லாம்... நானெல்லாம் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்கடி, உன்னோட ரேட்டிங் எங்கையில இருக்குன்னு தெரிஞ்சும் இந்த ஆட்டம் ஆடுற? மகனே, அடுத்த தடவை ஆட்டறதுக்கு குடுமி இருக்காது, சொல்லிட்டேன் என்று உதய் சொல்லும் போது நிஷா வேகமா வந்து பிரிண்டர்ல ஒரு டாக்குமெண்ட்டும் இல்லையே என டென்ஷனாக சொன்னாள். ஓ, நான் பிரிண்ட் குடுக்கலை போல. சரி, இப்போ குடுக்கறேன், போய் எடுத்துட்டுவா என சாதாரணமாக என்றான்.

தலை, தெரியாம பண்ணிட்டேன். என்னோட கன்பெர்மேஷன்ல கை வைச்சிராதீங்க. நான் என் சீட் விட்டு இனிமேல் எந்திரிக்க மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்க்கும் நிஷா வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது. நிஷா, கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில ஷாருக்கான் மாதிரி இருக்கே என சரவனன் சத்தமாக சொல்லி முடித்தவுடன் எல்லோரும் நிஷாவை திரும்பி பார்த்தார்கள். அவள் கண்கள், கரை புரண்டோடும் கபிணி டேம் மாதிரி இருந்தவுடன் உதய்க்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம். மூதேவி, நீயும்தான் ப்ளொரசண்ட் பச்சை சட்டை, புளூ பேண்ட் போட்டுட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க. பொம்பளை புள்ளைகளை இப்படியெல்லாம் அவமானப் படுத்தறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா என சொல்லி விட்டு நிஷாவின் கையிலிருந்த டாக்குமெண்டை வாங்கி அவன் கையில் திணித்து இதை படிச்சிட்டு என்ன இருக்குன்னு சொல்லு, வா இப்போ இடத்தைக் காலி பண்ணு என்று நகர்ந்தான்.

தலை, என்னைய பத்தி அவ தப்பா நினைக்கனும்ன்னுதான் அப்படி சொன்னேன். ரேட்டிங்ல குத்தீறாதீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்றான் சரவணன். என்னையப் பத்தி நல்ல விதமா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்றான் உதய். தலை, அப்போ நாளைக்கு நடக்குற கலாச்சர தின சிறந்த ஆடை அணிபவருக்கான ஓட்டை அவளுக்கும், உங்களுக்கும் போட்டுறேன், சரியா? , நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இனிமேலாவது தெரிஞ்சுக்க. அவளுக்கு ஓட்டு போட்டு அவ ஜெயிச்சா எல்லோரும் நம்புவாங்க, நான் ஜெயிச்சா காறித் துப்ப மாட்டாங்க, ஒழுங்கா அவளுக்கு மட்டும் ஓட்டுப் போடு என சொல்லிவிட்டு நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம் என யோசனை செய்யத் தொடங்கினான்.

அடுத்த நாள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சைட் அடிக்க லைசென்ஸ் குடுத்தது மாதிரி இருந்தது உதய்க்கு. தளமெங்கும் இருந்த வண்ணக்கோலங்களை பார்த்துவிட்டு சார், நீங்க யாருக்கு சார் ஓட்டுப் போடுவீங்க என பயல்கள் வழிய வந்து கேட்க, அதெல்லாம் நாங்க ஜெயிக்கறவங்களுக்குத்தான் போடுவோம், நீங்க, உங்க ஓட்ட ஒழுங்கா போடுங்கடா வென்ட்ரு பசங்களா என சிங்கம் மாதிரி கர்ஜித்தான்.

சாயங்காலமாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் நிஷா ஜெயித்திருக்கவில்லை. டென்ஷனாக போட்டி நடத்திய வனிதாவிடம் போய் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும் என சத்தமாக சொன்னான் உதய். உன் ஆளுக்கு எவ்வளவு ஓட்டுன்னு தெரியணுமா, யார்கிட்டையும் சொல்லாதே இல்லைன்னா எல்லோரும் வந்து கேப்பாங்க. சரி அந்த துரதிர்ஷ்டக்காரி பேரை சொல்லு என்றாள். பேரைக் காதில் சொன்னதும் அடப்பாவி, அவ இன்னைக்கு சாதாரண சுடிதாரில் வந்திருந்தாள், அவளுக்கும் என 5 பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்க, ரொம்ப பரிதாபமாய் 5 ஓட்டுதான் விழுந்திருக்கு. பரவாயில்லை, உனக்கு இப்போ போட்டி ரொம்ப கம்மியில்லை என சிரித்தாள். எங்க அந்த சரவணன் என உதய் வெடித்துக் கிளம்பினான். வனிதா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சரவணன் சாகவாசமாக புதிதாக சேர்ந்த ஃபிகருடன் சாகுபடி செய்து கொண்டிருந்தான். உதயைப் பார்த்ததும், தலை என தெறித்துக் கொண்டு ஓடி வந்தான். தலை, இப்படி ஆயிப்போச்சே தலை என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். இப்போ நீதான் ஆயி போகப் போற என்று சரவணனை மேலிருந்து கீழாய் முறைத்தபடி பார்த்தான். நான்கூட நிஷாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் தலை என்றான். 1986 தமிழக உள்ளாட்சி தேர்தல்ல எங்க பங்காளி கவுன்சிலருக்கு நின்னாரு. அப்போ எனக்கு 6 வயசு. அப்போவே நான் 10 ஓட்டு போட்டிருக்கேன் மிஸ்டர் சரவணன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலை என சரவணன் புரியாமல் கேட்டான். நிஷாவுக்கு விழுந்தது 5 ஓட்டு, இப்போத்தான் வனிதாகிட்ட கேட்டுட்டு வரேன். அப்போ இன்னும் 3 பேரு யாருங்க என அப்பாவியாய் கேட்டான் சரவணன். அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா என சரவணன் கழுத்தை உதய் பிடிக்கப் போக சரவணன் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். இன்னும் சரவணன் கம்பெனிக்கு திரும்பி வரவில்லையென்று கேள்வி...

~தொடரும்.

6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உதய்,
தலைப்பு தப்பா இருக்கு :-))))

எனக்கு என்னுமோ கதையல்ல நிஜம்னு தான் தோனுது ;) (இதை பற்றி உங்க பிராஜக்ட்டில் விசாரிக்க ஒரு படை தயார் செய்தாகிவிட்டது)

said...

ம்ம்ம்... நடத்துங்கையா.. நடத்துங்க...

:)))

said...

நல்லா எழுதறீங்க உதை. அப்டியே எத்தனை உதை வாங்கினீங்கனும் எழுதீருங்க. :)

said...

வெட்டிப்பயல், இது கதைங்க... தயவு செஞ்சு நம்புங்க...

இளவஞ்சி, எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்:-)

அனுசுயா, வெட்டிப்பயலுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். நான் அடிவாங்கின கதை எழுதறதுன்னா நிறைய நேரம் ஆகும். அவ்வளவு இருக்கு.

said...

//அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா //

:-))))super(star) dialogue.
post is infused with wits. great comical writing. LOL

said...

Desperado, தங்கள் வரவு நல்வரவு ஆகுக! இப்போத்தான் ஆரம்பிச்சிருக்கீங்க போல, உங்க ஆட்டத்தையும் ஆரம்பிங்க.