Tuesday, August 08, 2006

நட்பு எனப்படுவதியாதெனில்.....

போன வாரம் நட்பு வாரம், நட்பு நாள்ன்னு ஆளாளுக்கு சென்டிமெண்ட் போட்டு தாளிச்சிட்டு இருந்தாங்க. நானும் நாலு பேருகிட்ட போயி நட்புன்னா என்னங்க, சூர்யான்னா என்னங்கன்னு கேட்டுட்டு வர்றதுக்குள்ள நட்பு வாரம் முடிஞ்சு போச்சாம்... அதுக்காக கேட்டுட்டு வந்ததை போடாம விட்டா எங்களுக்குள்ள இருந்த நட்பு என்னதுக்கு ஆகிறது.

வாசு, 5-ம் வகுப்பு: கலர் தோட்டத்துல கடலைக்காய் திருடி திங்க நானும் சீனுவும் போன போது எங்களை பார்த்துட்டு நாய் தொறத்துச்சு. அவன் மட்டும் ஓடிப் போகமா என்கூட நின்னு நாய் மேல கல்லை எடுத்து இட்டாம் பாருங்க, அதுதான் நட்பு.

மீனா, 8-ம் வகுப்பு: மாரியம்மன் பொங்கலப்போ சீதா அவளோட குஞ்சத்தை சடையில வைச்சுக்கிறக்கு குடுத்தா, அதுதான் நட்பு.

சசி 9- வகுப்பு: ராகவனோட டிவிஸ் 50 ஐ எப்போ ஓட்டிட்டு தரேன்னு சொன்னாலும் உடனே குடுப்பான், அதுதான் நட்பு.

சுதா 10-ம் வகுப்பு: புதுசு புதுசா ஏதாவது சமையல் பண்ணி எடுத்துட்டு வந்து எங்களுக்கு மத்தியானம் சாப்பிடக் குடுப்பா ராணி, அதுதான் நட்பு.

ராம் 12-ம் வகுப்பு: நான் யாருகிட்ட வேணா போய் லவ் லெட்டர் குடுத்துட்டு வாடான் சொன்னா வாரான் பாருங்க தனபால், அது நட்பு.

சுகன்யா, இளங்கலை முதலாம் ஆண்டு: எப்போ சனிக் கிழமை சினிமாவுக்கு போனாலும் , அம்மா, இன்னைக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு கொஞ்சம்கூட பயப்படாமல் சொல்லும் ஊர்வசியின் நட்புதான் நட்பு

இளங்கோ, இளங்கலை இறுதி ஆண்டு: எப்போ தண்ணி அடிச்சிட்டு பொங்கல் வைத்தாலும், வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு, ஆண்டி, இவனுக்கு தலை சுத்துதுன்னு சொன்னான். கொஞ்சம் இஞ்சி கசாயம் வைச்சுக் குடுங்கன்னு சொல்லும் ராஜாதான் நட்பின் இலக்கணம்.

பெரியசாமி, 2 குழந்தைகளுக்கு தகப்பன்: எப்போ போய் ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் செலவுன்னு கடன் கேட்டு நின்னா கருப்பன் யோசிக்காம காசை எடுத்து வீசுவான். அது நட்பு

இந்திரா, திருமணமானவர்: செல்வியும், கண்மணிக்கும் இருக்கறதுதான் நட்பு. அதாங்க, வளையல்கள் சீரியல்ல வருவாங்கல்ல? 7 மணிக்கு, சன் டிவில? நீங்க பார்க்கறதில்லை??

ஒரு தமிழ் வலைப் பதிவர்: குமுகாயத்தில் அனைவரும் தீவுகளாகி நிற்கிறோம். எதையும் பின்நவீனத்துவ கோணத்தில் சீர் தூக்கிப் பார்க்காமல், ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்து முகம் மறந்து, காலச் சக்கரத்தில் சில நுண்ணியல் கோட்பாடுகளை நிறுவி அதன் மேல் அரியணை அமர்த்தி தூங்கிக் கிடக்கும் மாக்களாகிப் போனோமே? நட்பு எனப்படுவதியாதெனில்.....

9 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

இதை விட்டுட்டீங்களே உதய்,
யாருமே பின்னூட்டமிடாத நம்ம பதிவுக்கு பின்னூட்டுமிடறான் பாரு நம்ம ........., அது தான்யா நட்பு ;)

said...

வெட்டிப்பயல் அவர்களே, இது தங்களுக்கும் எனக்கும் உள்ள நட்பைப் பற்றிய கருத்தா? இல்லை, இந்தப் பதிவில் இதுவும் இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்கிறீர்களா?

மெயிலைப் பார்த்தவுடனே அப்பாடான்னு பெருமுச்சு விட்டு உடனே போட்டாச்சு. ஓட்டறதுன்னா தனியா நம்மளுக்குள்ள ஒட்டிக்க வேண்டியதுதானே, அதுவும் சபையில்... வந்ததே ஒர்ரே பின்னனூட்டம்...

said...

நான் பொதுவா நட்ப பத்தி சொன்னேன்...
இதுல எதுவும் உள்குத்து இல்லனு நான் சொன்ன நீங்க நம்பவா போறீங்க??? :-)

said...

//ஒரு தமிழ் வலைப் பதிவர்: குமுகாயத்தில் அனைவரும் தீவுகளாகி நிற்கிறோம். எதையும் பின்நவீனத்துவ கோணத்தில் சீர் தூக்கிப் பார்க்காமல், ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்து முகம் மறந்து, காலச் சக்கரத்தில் சில நுண்ணியல் கோட்பாடுகளை நிறுவி அதன் மேல் அரியணை அமர்த்தி தூங்கிக் கிடக்கும் மாக்களாகிப் போனோமே? நட்பு எனப்படுவதியாதெனில்.....//

:-))))

said...

:)

பலவகை நட்பையும் அழகாய் வகைப்படுதியிருக்கீங்க..

நல்லாருக்கு..

said...

ovvoruttar parvaiyila ovvonnu natpu...adu ellatukkum adippadai..puridhal dan nu nenaikkaren..unga karutth ennavo natpu patthi

said...

நட்புக்கு இலக்கணம் வகுத்த நட்புத் திலகமே நீ வாழ்க.

இத்தனை பேர் இருக்கும் நாட்டிலே நட்புக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தைத் தனியொரு நண்பனாக நின்று தீர்த்து வைத்த உதய்க்கு எனது வாழ்த்துகளையே பொற்கிழியாக அளிக்கிறேன்.

said...

நட்பு நல்ல விஷயம் தான்.. இதே தலைப்பில் நானும் ஒரு பதிவு இட்டிருந்தேன்... நேரம் கிடைக்கும் போது பாருங்கள்...

said...

அனிதா, இதிலிருக்கும் அத்தனையுந்தான் எந்தன் பார்வை... ஏன் தங்கிlish???