நிஜமல்ல, கதை-3!
Part 1 Part 2
நிஷா இப்போதெல்லாம் உதயின் வழியலுக்கெல்லாம் பயப்படுவதில்லை போல உதய்க்கு தோன்றியது. அவளே இப்போதெல்லாம் காஃபி குடிக்கப் போலாமா? எனக் கேட்டு உதய்க்கு இன்ப அதிர்ச்சி குடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல படியா போயிட்டு இருக்கு, இப்படியே ஒரு ஆறு மாதம் என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் மெதுவா கேட்டுப் பார்க்கலாம். சரின்னு சொன்னா பிக்கப் இல்லைன்னா டிராப். வாழ்க்கையில இவ்வளவு சிம்பிளா எல்லாம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.
உதய் என்ற நிஷாவின் தேன் குரலுக்கு எஸ் மேடம், சொல்லுங்க என்ன விஷயம்? என உதய் வேகமாக திரும்பினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். இல்லை, உங்கிட்ட நான் பேசணும் என நிஷா உதயின் முகத்தைப் பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு பேசினாள். மச்சான் உதய், எங்கேயோ ஒரு மச்சம் இருக்கக்கூடாத இடத்துல இருக்கு போல இருக்கு. இப்போத்தான் ஆறு மாசம் வெயிட் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தாய். பாரு, அவள் உன் கண்ணைப் பார்த்து, உன்னைப் பார்த்து பேச கூட வெட்கப்படறா எனற் உதயின் மனசாட்சி DTS எபெக்டில் திரும்பத் திரும்ப உதயின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போத்தான் ரொம்ப கவனமாக இருக்கணும், இல்லைன்னா சொதப்பி சின்னாபின்னமாயி சொந்தத்துல சூனியம் வெச்ச மாதிரி ஆயிடும், ரிலாக்ஸ் என மனசாட்சி அவனை உஷார் படுத்தியது. சரி, வா காஃபி சாபிட்டே பேசலாம் என்றான். இல்லை, இல்லை இதெல்லாம் ஆபீஸ்ல பேசற விஷயம் இல்லை, நாம வேணா இன்னைக்கு ஒன்னா வீட்டுக்கு போலாமா? என நிஷா கேட்க உதயால் சீட்டில் உட்கார முடியவில்லை. அதேதான் இது அதேதான் என உள்ளுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான்.
"சரி, அப்போ இப்போவே கிளம்பலாமா?" என கேட்ட உதய் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட், அது இது என எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தான். 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நானும் வர்றேன் என நிஷா சொல்லிவிட்டு சீட்டுக்கு ஓடினாள். "நான் உதய், மாசம் 50000 சம்பளம். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சா மட்டும் வேலைக்கு வந்தா போதும். அவுட்டர் ரிங் ரோடுல ஒரு வீடு வாங்கிரலாம். பெண் குழந்தைன்னா உங்க பாட்டி பேரு, ஆண் குழந்தைன்னா எங்க தாத்தா பேரு. அப்புறம்..." என உதய் யோசித்துக் கொண்டிருந்த போது "என்ன உதய், பயங்கர யோசனை" என்று கேட்டபடி நிஷா வந்தாள். "இல்லை, வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்ன்னு நடக்குதா? அதான் அதையெல்லாம் எப்படி சமாளிக்ககிறது"ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்று கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு பேசினான். ஆமாம், எனக்கும் அதே பிரச்சினைதான் என நிஷா சொன்ன பொழுது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என உதய் காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.
உதய் என நிஷா கூப்பிட்ட பொழுது, வானத்தில் பறந்து கொண்டு இருந்த உதய், "ம், சொல்லு நிஷா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன்" என உளறினான். "இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை உதய். உங்கிட்ட இதை எப்படி சொல்லறது"ன்னு பயமா இருக்கு என வார்த்தைகளை மென்று முழுங்கி பேசினாள். நம் வாழ்க்கைத் துணைவி இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த உதய், "நிஷா, நான் உன்னோட... உன்னோட ஃபிரெண்டுன்னு நினைச்சிக்கோ. அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை... அப்புறம் நீ பண்ண வேண்டிய அந்த டாக்குமெண்ட் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விடலை" என அவளுக்காக தான் பண்ணிய அளும்புகளைப் பட்டியல் இட்டான்.
இந்த பதிலகளால் சாமதானமாகியது போல தோன்றிய நிஷா, நான் இதை முதன் முதலில் உங்கிட்டதான் சொல்லேறென் என்றாள் நிஷா. "நிஷா, சில விஷயத்துக்கெல்லாம் வக்கீல் வைக்கக் கூடாது. நீ மனசில நினைச்சிருக்கிறதை அப்படியே சொல்லு. நீ என்ன சொல்லப் போறெங்கறதும் எனக்குத் தெரியும், கமான்" என ஆர்வத்தை அடக்க முடியாமல் சீட்டின் நுனிக்கு நகர்ந்திருந்தான் உதய். "எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க" என நிஷா வெட்கத்துடன் சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். இங்க பார்ரா... இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்த உதய் ரோலர் கோஸ்ட்டரில் உச்சியைப் பார்த்து போவதைப் போல உணர்ந்தான். கையில் ஒரு ரோஜா இருப்பதை போலவும், அதை MGR ஸ்டைலில் முகர்ந்து பார்ப்பது போலவும் மூக்கில் கையைத் தேய்த்து விட்டு "சஸ்பென்ஸ் போதும், முழுசா சொல்லிடு... நான் சொர்க்கத்தை சீக்கிரமே பார்க்கணும்" என்றான் உதய்.
"அவர் அமெரிக்காவில இருக்கார். போன வாரம்தான், பொண்ணு பார்த்துட்டு போனார்" என நிஷா சொன்னபோது ஒரு டின் நிறைய ஐஸ்கட்டியை தலை மேல் கொட்டிய ஃபீலிங் இருந்தது உதய்க்கு. அந்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஓ, சும்மாதான் பார்த்துட்டு போயிருப்பாங்க, இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க. பாரு, நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க" என இப்பொழுது டிபென்ஸ் ஆட்டத்துக்கு மாறி இருந்தான் உதய். "இல்லை... இல்லை அவர் ரொம்ப நல்லவர்... நானும் அவரும் 2 நாள் காஃபி சாப்பிடப் போனோமே" என்றாள் முகத்திலிருக்கும் வெட்கம் கொஞ்சம் கூட கலையாமல்."அட, எங்கூடவும்தான் நீ தினமும் காபி சாப்பிடுற. இதெல்லாம் சும்மா. நீ வேணா பாரேன், அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போறானா இல்லையான்னு" என இப்பொழுது தாக்குதல் ஆட்டத்துக்கு தயாரானான். " ஆமாம், அடுத்த வாரம் அவர் அமெரிக்கா போறார். அதுக்கு முந்தின நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம்" என்றாள் நிஷா. "பாரேன், அவன் நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் திரும்பி வரவே மாட்டான்" என இப்பொழுது கொஞ்சம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
"உதய், ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் ரொம்ப நல்லவர். உண்மையா, அது எங்க ரிஜெஸ்டர் மேரேஜ். H4 விசாவுக்கு கல்யாண போட்டோவும், திருமண சான்றிதழும் வேணும் இல்லையா, அதுக்காக... இந்த ஐடியா எல்லாம் அவர்தான் குடுத்தார். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் 6 மாதம் விசாவுக்காக வெய்ட் பண்ண வேண்டி வரும். இப்பொவே அப்ளை பண்ணிட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா கூட்டிப் போயிடலாம்ன்னு இந்த ஏற்பாடு." என நிஷா முகமெங்கும் பூரிப்பாக சொன்னாள். "அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கண்ணுக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ரோஜாப் பூ தெரியுது" என மனதுக்குள் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான். "உதய், இன்னும் ஒரு வாரத்தில அவரு அமெரிக்கா திரும்பி போயிடுவார். நீ எனக்கு உண்மையிலேயே நல்ல பிரெண்டுன்னு எனக்குத் தெரியும். நீ, என் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விட்டுட்டின்னா நான் நிம்மதியா அவர் கூட ஊர் சுத்துவேன்,பிளீஸ் உதய்" என செல்லம் கொஞ்சினாள். உதய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்திருந்தான். அதற்க்கப்புறம் நிஷா மட்டும் வழவழவென எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். "இதெல்லாம் நாளைக்கு ஆபிஸில் பார்த்துக் கொள்ளலாம், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என உதய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள்.
கில்லி விஜய் மாதிரி வலம் வந்து கொண்டிருந்த உதய், எங்கே செல்லும் இந்த பாதையில் வரும் சேது சீயானாய் மாறி கொஞ்ச நாள் சுற்றியதாகக் கேள்வி. விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி.
~முற்றும்.
கதையில் என் பெயரை வைத்தால் கூட விளங்க மாட்டேங்குது. ரொமாண்டிக் ஹீரோ கூட தண்ணியடித்து விட்டு இருமிக் கொண்டே பாடும் நிலைமைக்கு போயிடறாங்க. யாராவது பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். தேன்கூடு போட்டிக்கு "உறவுகள்" தலைப்பில் கதை எழுத சொன்னார்கள். அதுக்கும் இந்த கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
17 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
// வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். //
// வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள். //
:))))
// ~முற்றும். // ?!?! என்னா முற்றும்? அப்பறம் விஜயலச்சுமி கதைய யாரு எழுதறது?
உதய்.. கதை(!?) கலக்கல்!
மிஸ்டர் மொள்ளமாரிப்பயலே,
நீ அடங்கவே மாட்டியா? ;) ;) ;)
//அப்பறம் விஜயலச்சுமி கதைய யாரு எழுதறது?//
//நீ அடங்கவே மாட்டியா? ;) ;) ;) //
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
நல்லா எழுதியிருக்கீங்க நிஜமா ரசிக்கற மாதிரியிருந்தது. அடுத்த கதை எப்போ?
அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க.
//அப்பறம் விஜயலச்சுமி கதைய யாரு எழுதறது?//
நீங்க வேற இளவஞ்சி, இதுவே என்னோட கதைன்னு நிறைய பேரு (ஏன் நீங்கள் கூடதான்) 200% நம்பிட்டு இருக்காங்க. சும்மா இருந்த வாயிக்கு அவல் குடுன்னு கேப்பீங்க போல இருக்கு.
//உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் //
ராசா, கலக்கீட்டீங்க...
//நீ அடங்கவே மாட்டியா? ;) ;) ;) //
சுவாமி, நான் எப்போ ஆடினேன், அடங்கறக்கு ;)
உதய்,
என்ன அதுக்குள்ள முற்றும் பொட்டுட்டீங்க???
இதை நாங்க ஒத்துக்க மாட்டோம். எங்களுக்கு விஜயலச்சுமி கதையும் வேணும்...
///அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை...
இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க
இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க.///
:-) KALAKKAL! :-)))
நன்றி பாலா!!!
வெட்டி, முற்றும் அப்படிங்கறதுக்கு அப்புறம் கொஞ்சம் எழுதிருக்கேன். அதையும் படிங்க... என் பேரு வைச்சா எதுவும் உருப்படறது இல்லை.
//விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி//
அப்பறம் எப்படி உங்க பேர் வெச்சா எதுவும் உருப்படறதில்லைனு எப்படி சொல்லுவீங்க???
ஒரு பிகர் மிஸ்ஸாகிடுச்சினு கவலைப் படறவங்களா நாம்???
வேணுமுன்னா விஜயலச்சுமிய வெச்சி கதையல்ல நிஜம் ஆரம்பிச்சிடுங்க ;)
உதய்,
தலைப்பு "கதையல்ல, நிஜம்" அப்படினுல இருக்கனும்!
//நீங்க வேற இளவஞ்சி, இதுவே என்னோட கதைன்னு நிறைய பேரு (ஏன் நீங்கள் கூடதான்) 200% நம்பிட்டு இருக்காங்க.//
இது நம்பிக்கை இல்லை, 100% உண்மை.
//அப்பறம் எப்படி உங்க பேர் வெச்சா எதுவும் உருப்படறதில்லைனு எப்படி சொல்லுவீங்க???//
வெட்டி, இதே மாதிரி 3 அத்தியாயம் வரும். திரும்பவும் ஊத்திக்கும். திரும்ப ஒரு மாலாவோ, விமலாவோ... அந்த பையனை நம்பி கதை எல்லாம் எழுத முடியாதுங்க... செக்கு மாடு மாதிரி பொண்ணுக பின்னாடி சுத்தறதும், வாங்கும் ஆப்புகளுக்கும் குறைவே இருக்காது. பாகம் - 2 எல்லாம் வேண்டாம்.
//வேணுமுன்னா விஜயலச்சுமிய வெச்சி கதையல்ல நிஜம் ஆரம்பிச்சிடுங்க ;) //
ஆஹா, ஏன் நான் ஒழுங்கா நடமாடுவது பிடிக்கலையா? "ஆறு" சாரோஜாக்கா மாதிரி யாராவது வந்து காறித் துப்பணும்ன்னு பார்க்கறீங்களா?
உதய்,
சூப்பர்..
விஜயலட்சுமி கதை எழுதறப்போ சொல்லி அனுப்புங்க :))))
//செக்கு மாடு மாதிரி பொண்ணுக பின்னாடி சுத்தறதும், வாங்கும் ஆப்புகளுக்கும் குறைவே இருக்காது. பாகம் - 2 எல்லாம் வேண்டாம்.//
:-). That is what we are looking at. We need all the stories! There is no need to add masala to your stories...
அட படுபாவி!
என்னோட ஆளு பேரை போட்டு இணையத்தில் என்ன இருக்கு என தேடினா, உங்களோட இந்த பதிவு வருகிறது.
பரவாயில்லை மனதை தேற்றிக்கொள்கிறேன்.
// வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். //
// வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள். //
அதே அதே..இளவஞ்சியின் அதே சிரிப்பு..
Post a Comment