Wednesday, August 23, 2006

கொடுத்தேனா இதுவரை???

டீச்சர் அடித்தார் என
பள்ளியை மாற்றினார்
எனக்கு வந்த காமாலைக்கு
அவர் பத்தியம் இருந்தார்
நான் பரிட்சை எழுத
எனக்கு முன் முழித்தார்


எனக்கெது பிடிக்கும் என
பார்த்து பார்த்து
செய்வதில்
என் அம்மாவுக்கு நிகர்
என் அம்மாதான்
ஊரெல்லாம் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்



நீ இப்படிச் சொல்ல
இதுவரை கொடுத்தேனா
ஒரு வாய்ப்பு???

10 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

wow really nice

said...

நல்லா இருக்குங்க கவிதை

said...

பாஸ், என்ன வர வர அம்மா செண்ட்டிமென்ட் அதிகமா இருக்கு...

கவலைப்படாதீங்க... என் பையன் அமெரிக்காவில சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கான்னு அவுங்களூம் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பாங்க

said...

அனிதா, குமரன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!

ஒரு நாள் அம்மான்னு சொன்னதும் சென்ட்டிமெண்ட்னு சொல்லிட்டீங்க...அம்மா வாரம் பிளான் பண்ணிருக்கேனே, அதை என்ன பண்ண???

said...

இந்தக் கேள்விதான் என்னிடமும் இருக்கிறது. ஆனால் விடையில்லை. இனிமேலாவது விடை தேட முயல்கிறேன். முருகன் துணையிருக்கட்டும்.

said...

nalla kavidhia valthukkal

said...

கவலைப்படாதீங்க உதய்,
கவிதை எழுதுவதில் என் மகனுக்கு நிகர் என் மகன்தான்
என்று உங்கள் அம்மா என்னிடம் கூறினார்கள்.

said...

//நீ இப்படிச் சொல்ல
இதுவரை கொடுத்தேனா
ஒரு வாய்ப்பு??? //

கேள்வியும், கவிதைக்கான கருவும் அற்புதம், வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள் !!

கவிதை நடையை இன்னும் மெருகேற்றலாம் :-)


***

தன் மகனை சான்றோன் என பிறர் கூறக் கேட்கும்போது மகிழ்வாள் பெற்ற தாய் !!

said...

நல்ல கவிதை. நல்ல சிந்தனை.

said...

நன்றி லதா! ஆனா, இதெல்லாம் கவிதையா???