Friday, August 25, 2006

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ

Long Islan

வரலாறு:

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.

செய்முறை:

22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.

*************கட்...கட்...கட்...****************

சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,

நம்பர் 1: அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...

நம்பர் 2: டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...

கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...

நம்பர் 3: புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...

நம்பர் 4: தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: என்னடா வேணும் உனக்கு???

நம்பர் 4: நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...

நம்பர் 2: நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???

நம்பர் 4: என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 1: மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?

நம்பர் 2: சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...

நம்பர் 1: அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 5: இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....

நம்பர் 2: அப்புறம் அந்த சாந்தி ...

நம்பர் 5: சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...

நம்பர் 2: பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...


டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

நண்பர்களுடன் புடை சூழ, ஒரு இளிச்சவாய நண்பனின் தலையில் மிளகாய் அரைக்கும் treat-க்கு போய்வந்த உணர்வை தந்தது இந்த பதிவு.

இப்போ சொல்லுங்க.நீங்க தானே நம்பர் 2?

said...

//நண்பர்களுடன் புடை சூழ, ஒரு இளிச்சவாய நண்பனின் தலையில் மிளகாய் அரைக்கும் treat-க்கு போய்வந்த உணர்வை தந்தது இந்த பதிவு.//

எல்லா பசங்களும் ஒரே மாதிரிதான் இருக்காங்க... உருப்படறக்கான வழியே இல்லை.....

//இப்போ சொல்லுங்க.நீங்க தானே நம்பர் 2? //

அய்யோ... அய்யோ... டிஸ்கி படிக்கலையோ????

said...

//அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.//

நல்லகாலம் இதப் போட்டீங்க. இல்லன்னா நான் கூட உங்களையும் உங்க கம்பெனியையும் பத்தித் தப்பா நெனச்சிருப்பேன்.
:)

said...

//உங்களையும் உங்க கம்பெனியையும் பத்தித் தப்பா நெனச்சிருப்பேன்.
//

அதுதான் அந்த ஸ்மைலி காட்டிக் கொடுத்துருச்சே??? நாங்கெல்லாம் பேசிக்கலி கொஞ்சம் நல்லவங்க...