Saturday, July 26, 2008

ராமர் பாலமா? மணல் திட்டா?

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.

பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.

இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!
'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.

'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.

இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.

இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.

தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.

சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.

ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.

'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.

இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.

ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?

தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?

ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?

'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.

ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?

ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)

லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.

இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.

கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.

பாஜக இந்தப்பிரச்சினையில் ராமன் பெயரைச் சொல்லி தனக்கெனெ ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்க முயல்கிறது. ஏற்கெனெவே கரசேவையை ஆதரித்த, மோடிக்காக பரிந்து பேசிய ஜெயா இக்கும்பலுடன் ஐக்கியமாகாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம். ஏற்கெனவே, கிறித்துவ மீனவர்கள் வலை காயவைக்கும் பாறையை விவேகானந்தர் பாறை எனக் கைப்பற்றி கன்னியாகுமரியில் காலூன்றியது போல் இவ்விசயத்தையும் இக்கும்பல் கையில் எடுத்துள்ளது.


நன்றி:-
செந்தில்குமார்.

தட்ஸ்தமிழ்.காமில் கமெண்ட் பகுதியில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது மட்டுமே அதிகமாக இருக்கும். ஒரு மாறுதலுக்காக, செந்தில்குமார் என்ற பெயரில் ஒருவர் எழுதிய கருத்து இது. அரசியல் வாதிகளைப் பற்றிய அவர் கருத்தும் என் கருத்தும் ஒன்று என்பதால் அதை மட்டும் ctrl+c, ctrl+v செய்து விட்டேன். முழுக் கட்டுரையும் வாசிக்க
தட்ஸ்தமிழ்.காம் செல்லவும்.

Sunday, July 13, 2008

அன்பே என் அன்பே - தாம் தூம்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ வர நதியலையாய் ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனான்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ?
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ?
அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலினே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்

[அன்பே என் அன்பே]

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தினை ஜெயிப்பேனே?
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே?
எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

[அன்பே என் அன்பே]

<p><a href="undefined?e">undefined</a></p>

கமல் உலக நாயகனா?


http://youtube.com/watch?v=6dnyHOYeyz0

தாசவதாரத்தை எல்லோரும் இணையத்தில் துவைத்து காய வைத்த போது
அதைப் பற்றி பேசினாலே சலிப்பு வந்துவிட்டது. ஆசிப் மீரானின் இந்த பதிவைப் பார்த்து ஒரு கமல் ரசிகர் உலக நாயகனின் படம் வேறு, இந்த படம் வேறு ; இதை ஒப்பீடு செய்வதன் மூலம் அவர் வக்கிரம் வெளிப்படுவதாக சொல்லி ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு விளக்கம் கேட்டு கமெண்ட் போட்டால் அந்த பதிவின் சுவடே இப்போது இணையத்தில் எங்கும் இல்லை.

எதோச்சையாக சதிலீலாவதி படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்த போது இந்த கிளைமாக்ஸை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்த பொழுது பஞ்ச தந்திரத்தில் இதே மாதிரி இருக்கே என நகர்ந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து பின் மண்டையில் ஒரு பல்பு எரிந்தது. அவ்வை சண்முகியிலும் அதே அதே கிளைமாக்ஸ். உலக நாயகனுக்கு சரக்கு பஞ்சம் இருக்காது, இந்த இயக்குநர்கள் தான் காரணம் என சொல்லவும் முடியாது. சங்கர் "கமலுடன் பணி புரிவது காலேஜ் புரொபசருடன் வேலை செய்வது மாதிரி, எல்லாம் திருப்தியாக இருந்தால்தான் கேள்வி கேட்க மாட்டார்" என ரூம் மேட் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

கமல் உலக நாயகனா? கேள்விக்கு அப்பாற்பட்டவரா?


Saturday, April 26, 2008

மின்னல் அழகே மின்னும் அழகே

முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.

Wednesday, April 02, 2008

கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.





காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.


கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.




ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.







சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.







பிளைட்ல கொஞ்சம் தண்ணி போறதுக்கு அந்த சவுண்டு வருதேன்னு தலைய உள்ள விட்டுப் பார்த்தவங்களும் இருக்காங்க. பாட்டு பாடுனாத்தான் போவுது, தம்மடிச்சாத்தான் போவுதுன்னு இந்தியாவுல இருந்தப்போ சொன்னாங்கன்னா, புக் இல்லைன்னா போக மாட்டேங்குதுன்னு கைல கிடைச்ச பேப்பர், லேப்டாப்பை பொறிக்கிட்டு போயிட்டு போறவங்களும் இருக்கறாங்க. 'ஆய்'ரம்தான் இருந்தாலும் கம்மாக்கரை மாதிரி வருமுங்கல்லா...அது அதுதான் இது இதுதான்...








குறிப்பு:


இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.

உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பாரா?

சென்னை: பெங்களூரில் தமிழர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்பினர் மேற்கொண்டுள்ள வன்முறையைக் கண்டித்து 4ம் தேதி தமிழத் திரையுலகினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.

பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் ஒன்று திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று நடந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகினர் அத்தனை பேரும் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் சினிமாவில் இனிமேல் நடிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்போது போகஸ் ரஜினிகாந்த பக்கம் திரும்பியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் பிரகாஷ் ரய், அர்ஜூன் சர்ஜா, முரளி, பிரபு தேவா உள்ளிட்ட அனைத்து கன்னட கலைஞர்கள் பக்கமும் இப்போது தமிழக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து, பாரதிராஜா தலைமையில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் ரஜினியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அதில் கன்னட நடிகர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய கலைஞர்கள் ரஜினியைப் போய் பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு வந்தனர்.

இது வேறு மாதிரியான சிக்னலை கர்நாடகத்திற்கு அனுப்பியது. ரஜினி தமிழ் திரையுலகோடு சேர்ந்து நமக்கு எதிராக போராடவில்லை. தனியாகத்தான் இருக்கிறார் என்பது போல அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேலும், நெய்வேலி போராட்டத்தை ரஜினி விமர்சித்தும் பேசினார். உச்சநீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாத பிரச்சினையை இந்தப் போராட்டம் தீர்த்து விடுமா என்று அவர் கோபமாக கேட்டார்.

அத்தோடு நில்லாமல், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்த்தின் அறிக்கையை அப்போது சரத்குமார்தான் செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் தனியாக உண்ணாவிரதம் இருக்கக் காரணம், கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் என்றும் கூறினார் ரஜினிகாந்த். அவர் கூறியதில் நியாயம் இருந்ததும் நிஜம்.இந்த நிலையில் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். இம்முறை ரஜினிகாந்த் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது என்ற மூடில் திரையுலகம் இருப்பதாக தெரிகிறது.

சென்னை திரும்பினார் ரஜினி:

இந் நிலையில் குசேலன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.

உண்ணாவிரதம் குறித்து தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதன் இறுதியல் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ரஜினி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்(ன்) கலந்துகிட்டா என்ன கலந்துக்காட்டா நமெக்கென்ன? அது அவங்க துறை சம்பந்தபட்ட விசயம். ஒதுக்கி வைப்பதும், ஒட்டி உறவாடுவதும் அவங்க பாத்துப்பாங்க. ஊதிப் பெருசாக்கலைன்னா இந்த நான்காவது எஸ்டேட் ஆசாமிகளுக்கு சோறு இறங்காதோ????) அவன் டவுசர் சரியா போடலை, **த்து தெரியுதுன்னு சொல்லியே அதுவரைக்கும் **த்து இருக்கா இல்லையான்னே தெரியாதவனுக்கும் தெரிய வைச்சிடுவாங்க... வாழ்க பத்திரிக்கை சனநாயகம், இந்த திட்டம் நிறைவேறலைன்னா எவ்வளவு கஷ்டம், சேதம்ன்னு எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?

Sunday, March 30, 2008

21

Bringing Down the House என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் இந்த 21. ஏற்கனவே இந்த நாவலின் பெயரில் ஒரு காமெடி படம் வந்துவிட்டதால் 21 என பெயர் வைத்துள்ளார்கள். 21க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் (நான் இந்த நாவலை இன்னமும் படிக்கவில்லை) என மண்டையை குழப்பிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்திலேயே "21 will come only once in your life and enjoy it" "என கதாநாயகனின் அம்மா சொல்வதால் தெரிகிறது. (அடப்போங்கப்பா, இதுக்கா நான் இவ்வளவு நேரம் தலையைப் பிச்சிக்கிட்டேன்?)



MIT-யே பெரும்பாலனவர்களுக்கு கனவாகவும், குறைந்தபட்சம் ஒரு ஃபோட்டா ஆவது அந்த கேம்பஸில் நின்று எடுத்து விட வேண்டும் என என்று நினைக்கும் நேரத்தில் ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் சேர வேண்டும் என நினைக்கும் MIT மாணவனின் கதை. கிளைமேக்ஸின் கொஞ்சம் காட்சிகளை முன்பே காட்டி, பின்வரும் 20-25 நிமிட உரையாடல்களுக்காக மக்களை கட்டிப் போட நினைத்திருக்கிறார் இயக்குநர். பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சாமி வரம் குடுத்தும் பூசாரி வரம் குடுக்காதாது மாதிரி ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் அட்மிசன் கிடைத்தும் முழு ஸ்காலர்ஷிப் கிடைக்க தனித்துத் தெரியும் வாழ்க்கை அனுபவம் வேண்டும் என ஒரு ஆபிசர் (ரொம்ப முக்கியம், வந்துள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி தகுதியுடன் இருப்பதால் இது ரொம்பவே முக்கியம் என சொல்கிறார்) கையாட்டிக் கொண்டே சொல்கிறார். MIT மாணவர்கள் என்றாலே புத்தகப் புழுக்கள் தான்(?) , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் பெண்களைப் பற்றி "பேசி மட்டுமே" மகிழ்ச்சி அடையமுடியும் என ஒரு உள்குத்து வைத்திருப்பதாக தெரிகிறது.

Black Jack கிளப்பில் சேர்வதால் நிறைய பணம் கிடைக்கும் மற்றும் திரில் இருக்கும் என புரொபசர் சொல்லும் போது கேட்காத நாயகன் கதை நாயகி கழுத்தில் டை போட்டு சொன்னவுடன் நாய் மாதிரி பின்னாடியே போவது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கிறது. (வயித்தெரிச்சல் எல்லாம் இல்லை, ஆனால் கொஞ்சம் லைம் சோடா குடித்தால் சரியாகி விடும் என நினைக்கிறேன்).


நாம் இருவரும் Black Jack Club-ல் இருக்கிறோம், நண்பர்கள் என்பதைத்தவிர வேறேதும் இல்லை என நல்ல பிள்ளையாக (MIT மாணவியாக) சொல்லும் நாயகி, வேகாஸில் ஸ்ட்ரிப் கிளப்பில் உக்கார்ந்து கொண்டு நாயகனை பேச்சால் மயக்கி முத்தமிடும் போது வேகாஸின் வாஸ்து சரியில்லை என நினைப்பது தவிர்க்க முடியாததாகிறது.


சேர்த்த பணத்தையெல்லாம் பத்திரமான இடத்தில் வைக்காமல் ரூமிலேயே ஒளித்து வைக்கும் மாணவனின் (எதையும் உணர்ச்சிபூர்வமாக அனுகாமல் நிகழ்தகவின் பட் பார்க்கும் மாணவனின்) லாஜிக் கொஞ்சம் இல்லை ஏணி வைத்து எல்லாப் பக்கமும் உதைக்கிறது.

தோற்பது கூட சறுக்கல் இல்லை, ஆனால் தோற்றபின் நான் தப்பே பண்ணவில்லை என சொல்வதுதான் பெரிய சறுக்கல் என்பது எல்லோருக்குமே பொருந்தும். ஏனோ இந்த டையலாக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 300,000 டாலர் இருந்தால் இதை விட்டு ஓடிவிடுவேன் என ஆரம்பக் காட்சியில் சொல்வதும், எனக்கு ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் இதுதான் பிடிச்சிருக்கு என நாயகிடம் சொல்லும்போது பெண்களை விட பணம் ரொம்ப போதையானது என சொல்லியிருக்கிறார்களா? (எனக்கு ஏனோ சொல்லணும் போல இருக்கு :-) )


வேகாஸ் லாஸ் பிரிவென்சன் ஸ்பெசலிஸ்ட் கொஞ்சம் நேரம் வந்து அடிதடி+ காமெடி பணியிருக்கிறார். கடைசியில் வில்லத்தனமும் கொஞ்சம் சேர்த்து கொடுத்த காசுக்கு நிறைவாக செய்திருக்கிறார்.


இப்படியே எழுதிக் கொண்டே இருந்தால் "21 படத்தில் 21 குறைகள்" ன்னு ஒரு புத்தகம் எழுதிவிடுவேன் என நினைக்க வேண்டாம். ஒரிஜினல் புத்தகத்தை படிக்காததினால் மேற் சொன்னவைகளையும் மீறி என்னால் படத்தை ரசிக்க முடிந்தது. மொத்தமாக அத்தனையும் எழுதி உங்களை குழப்புவதற்கு பதில்


மீதியை வெண்திரையில் காண்க!!!


பி.கு:- இதை எழுதும் போது நான் கோட் சூட் போட்டுக் கொண்டு காலாட்டிக் கொண்டே எழுதவில்லை.

Wednesday, March 26, 2008

ஒரு கைதியின் டைரி...

அக்பர்-பீர்பால் கதை ஒன்னு YouTube-ல பார்க்க வேண்டியதாப் போச்சு. அதுல பெர்சிய மன்னர் அக்பருக்கு பொழுது போகட்டுமேன்னு புதிர் ஒன்னு அனுப்பி வைப்பாரு. பொழுது போகலைன்னா டீக்கடைக்கு போயி 2 போண்டா, பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு மாலை மலர் படிச்சிட்டு வர வேண்டியதுதானே? பக்கத்து வீட்டு குழந்தை சாப்பிட அடம் பண்ணினதால அந்த புதிரை நாங்களும் தீர்க்க வேண்டியதா போச்சு.


*****************************


IT உலகத்துலயே ரெண்டு பேரு பேசரது மட்டும் ஒன்னுமே புரியாது. Solution Architect ன்னு சொல்லிட்டி BPEL, WSDL, XPATH, XLANG ன்னு எழுத்துக்கூட்டிப் படிச்சாலும் புரியாத மொழியில முற்றுப்புள்ளி வைக்காம பேசி பேசி பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு படம் காட்டுவாங்க. துரை இங்கிலீசு எல்லாம் பேசுது என முக்குக்கு முக்கு நின்னு தம் போட்டுட்டு கடைசில எல்லாமே XML தான்டா மாப்பிள என நம்ம டெவலப்பர் மக்கள் 6 மணி நேர பிரவுசிங், 6 மணி நேர கோடிங்ன்னு அவங்க வேலைய பார்க்க ஆரமிச்சிருவாங்க. கடைசியில என்ன ஆகும்ன்னுதானே கேக்கறீங்க? கீழ படத்தை பாருங்க....











ரெண்டாவது இந்த டாப் லெவெல் டேமேஜர்ஸ்...CEO, CFO, CIO, COO என பல பதவியில உக்கார்ந்துட்டு பின்நவீனத்துவ எழுத்தாளர்களே தோத்துப் போகும் அளவுக்கு நாக்கு சுளுக்க பேசுவாங்க... எந்த அளவுக்கு புரியாத மொழியில பேசறீங்களா, அந்த அளவுக்கு பங்கு, சம்பளம், சொம்பு தூக்க ஆட்கள்ன்னு களோபரமா இருக்கும்.



"The business world is being disrupted by the combined effects of growing emerging economies, shifts in global demographics, ubiquity of technology and accountability regulation. xxxxxx believes that to compete in the flat world, businesses must shift their operational priorities."

**********

டிஸ்கி:- இந்த பதிவில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே...யாரையும் புண்படுத்தினால் அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...

Sunday, March 23, 2008

லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு

கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.

இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.

பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.

`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.

பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.

தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.

சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.

-தினமலர்.

Wednesday, October 31, 2007

கற்றது தமிழ்


முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!


பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.


மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.


பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!


காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.


சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.


தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.


சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.


எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.


யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.



கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.

Saturday, October 27, 2007

நிலா நிலா ஓடி வா...




பூமியை நெருங்கிய நிலா என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.


சின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே "நிலாவில யாரு பாட்டி இருக்கா?" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க" என சொல்ல "இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.


யார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா? என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.


அதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான்.
முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!

Monday, July 23, 2007

காதலும் காதல் நிமித்தமும்...

இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)


20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்?

Sunday, July 22, 2007

என் எட்டாத எட்டு...


எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. அனுசுயா வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!

1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன்.


2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.


3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!


4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science & Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.


5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!


6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)


7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!


8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"

Thursday, July 19, 2007

இழக்காதே!!!




நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.


இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு.


இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில்.


சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.


"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."
கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..
"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'


புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம்.


ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.
"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது.


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது.


சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம்.


யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


புத்தகத்தை ஆன்லைனில் பெற http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292

Monday, April 30, 2007

கெத்துதான் எங்க சொத்து!!!

வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?


8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???


Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

Sunday, April 29, 2007

செம ரகளை!!!

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!

பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???

Wednesday, April 18, 2007

அழகென்றால்...

அமிழ்து (பேரே அழகா இருக்கு) அன்பாய் அழைத்ததால் இந்த அழகுப் பதிவு

கருப்பு

பெரும்பாலும் கருப்பு என்பது ஒவ்வாத, ஒதுக்கப்பட்ட, துக்க நிறமாக பலர் கருதினாலும் நளினம், அந்தஸ்து என வரும் பொழுது கருப்பு நிறம் முக்கியமான இடத்தில் உள்ளது. உதாரணமாக, லிமோசின், டக்ஸீடோ என வரும் பொழுது கருப்புதான்... என் தாத்தா எப்போதும் கருப்பு மையில்தான் எழுதுவார். பரிட்சை பேப்பர் கருப்பில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என சொல்லிய காலம் தொட்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...
ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.

நினைவுகள்

8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் ஓட்டிய பழைய சைக்கிள் என நினைத்தவுடன் மனதினுள் குபுக் என ஒரு மகிழ்ச்சி பொங்கும் பாருங்கள், அதுவும் ஒரு அழகுதான்.

பயணம்

பகல் நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது அழகோ அழகு. செம்மண் காடாக இருக்கட்டும், வறண்ட காற்று முகத்திலறைவதாகட்டும் அதன் சுகமே தனிதான். பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...

காலைக் கனவு

மெத்தையில் துயில் கொண்டாலும், கயிற்றுக் கட்டிலில் படுத்தாலும் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து கொள்ளாமல், படுத்து புரண்டபடியே காணும் கனவுகளில் விண்ணைத் தொடுகிறேனோ இல்லையோ, நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் அழகுதாம்...

கடைசியா, என் கம்ப்யூட்டரிலிருந்து ரொம்ப நாளாய் என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் அசினும் அழகுதான் :-)



சில பேரை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை. அவர்களை திரும்ப பார்க்க வேண்டுமானால் இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பினால்தான் உண்டு போல...



  1. இளவஞ்சி

  2. குப்புசாமி

  3. சுதர்சன் கோபால்

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்

தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.

கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.

நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.

பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-
என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.

சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.

Sunday, April 01, 2007

பந்தயக் குதிரை

தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.

அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.






வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...


வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...

இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???

Sunday, February 18, 2007

உலகின்(ல்) உயிர்

மெயிலில் வந்த கவிதை இது.

On 2/18/07, Parthiban Subramanian wrote:

Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.


எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.

கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்

இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.