Wednesday, April 18, 2007

அழகென்றால்...

அமிழ்து (பேரே அழகா இருக்கு) அன்பாய் அழைத்ததால் இந்த அழகுப் பதிவு

கருப்பு

பெரும்பாலும் கருப்பு என்பது ஒவ்வாத, ஒதுக்கப்பட்ட, துக்க நிறமாக பலர் கருதினாலும் நளினம், அந்தஸ்து என வரும் பொழுது கருப்பு நிறம் முக்கியமான இடத்தில் உள்ளது. உதாரணமாக, லிமோசின், டக்ஸீடோ என வரும் பொழுது கருப்புதான்... என் தாத்தா எப்போதும் கருப்பு மையில்தான் எழுதுவார். பரிட்சை பேப்பர் கருப்பில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என சொல்லிய காலம் தொட்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...
ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.

நினைவுகள்

8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் ஓட்டிய பழைய சைக்கிள் என நினைத்தவுடன் மனதினுள் குபுக் என ஒரு மகிழ்ச்சி பொங்கும் பாருங்கள், அதுவும் ஒரு அழகுதான்.

பயணம்

பகல் நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது அழகோ அழகு. செம்மண் காடாக இருக்கட்டும், வறண்ட காற்று முகத்திலறைவதாகட்டும் அதன் சுகமே தனிதான். பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...

காலைக் கனவு

மெத்தையில் துயில் கொண்டாலும், கயிற்றுக் கட்டிலில் படுத்தாலும் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து கொள்ளாமல், படுத்து புரண்டபடியே காணும் கனவுகளில் விண்ணைத் தொடுகிறேனோ இல்லையோ, நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் அழகுதாம்...

கடைசியா, என் கம்ப்யூட்டரிலிருந்து ரொம்ப நாளாய் என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் அசினும் அழகுதான் :-)சில பேரை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை. அவர்களை திரும்ப பார்க்க வேண்டுமானால் இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பினால்தான் உண்டு போல...  1. இளவஞ்சி

  2. குப்புசாமி

  3. சுதர்சன் கோபால்

15 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

உதய்,

// 8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் //

ஏனய்யா 15தோட நிறுத்திட்டீர்?!

// நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் // --- //என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் அசினும் //

மேற்படி விசயங்களை இப்படி அடுத்தடுத்து போட வேண்டியது! அப்பறம் நாங்களா புரிஞ்சுக்கிட்டு ஏதாவது கேட்டா எங்களை "கெட்ட பசங்க" அப்படிங்க வேண்டியது..

ஹிம்.. நடத்துங்க... :)))

அழைப்புக்கு நன்றி! எப்ப முடியுதோ அப்ப வரேன். கோச்சுக்காதீங்கப்பு...

said...

பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணம் செல்வது மிக மிக மிக ஆனந்தமான அழகான விசயம். அதற்கு இணை ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
அசின் அழகான முகம் சரி சரி பாவ்னாவுக்கு இன்னும் நீங்க மாறலயா?

said...

//ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.//

Appadiyaa? appa ippa?!

said...

//ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.//

Appadiyaa? appa ippa?!

said...

ungaleen karuthu marukka mudyathathu...

karuppu ink la exam elthunu aalula nanum oruthan.....

ella paper answermm blue inkla erukka yen pape mattum karuppu inkla different stylela erukkum..

athanaleyeee matter ellamal mark vanguna alula nanum oruthan....

athe pola KPN bus travelling unmayalume nalla erukkum..

salem to chennai travel ennala marakka mudeyalaaa........

ungaleen sinthanaikku valthukkal....

madenthu pona nenaivugalai mayileragaal varuduvathu pol solle erukkum ungal sinthanai paratukku uruyathu........

said...

//'அழகு' பதிவு போடுமாறு விடுத்திருந்த அழைப்பை நான் காணாமல் விட்டது பெரிய தவறு என்றார் உதயகுமார். அசின் படத்தோடு முடிந்ததென நினைக்குமாறு பிரசுரித்தது அவர் தவறுதான்:-)//

போட்டாச்ச்ச்சுசு..
http://karaiyoram.blogspot.com/2007/04/blog-post_21.html

said...

ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.

I know the reason for this?!

said...

ம்.. சவுண்ட் எல்லாம் பெரிதாத்தான் இருக்கிறது.. அது என்ன


//ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.//
;-) ;-)நாங்க எல்லாம் சின்னப் பொண்ணுங்க சொன்னால்த்தான்பா.. புரியும் :-)

அழகாய் இருக்கிறது.. பதிவு

நேசமுடன்..
-நித்தியா

said...

//பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...//

உதய், என்ன ஒற்றுமை! எனக்கும் மதியம் KPN-ல் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்ல ரொம்ப பிடிக்கும்.

said...

இளவஞ்சி, வந்து நல்லா மேய்ஞ்சுட்டு போயிருக்கீங்க :-)


//ஏனய்யா 15தோட நிறுத்திட்டீர்?!//

15 வரைக்கும் பண்ணுனது அழகு, அதுக்கப்புறம் பண்ணுனது எல்லாம் அலும்பு... அதைப் போட்டா மானம் கப்பலேறி சிலோன் போயிடும்.


//நாங்களா புரிஞ்சுக்கிட்டு ஏதாவது கேட்டா எங்களை "கெட்ட பசங்க" அப்படிங்க வேண்டியது.. //

நீங்க, நான் அப்படின்னு பிரிச்சு பேசிட்டு... நாம எல்லோரும் கெட்டவங்கதானே?

said...

அனு, அசின் தான் இப்போதைக்கு. பாவனாவை மெதுவா தரிசிக்கலாம் :-)

said...

//Parthiban said...
//ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.//

Appadiyaa? appa ippa?!
//

இம்புட்டு நல்லவனாடா நீ???

said...

தியாகு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

said...

//நாங்க எல்லாம் சின்னப் பொண்ணுங்க சொன்னால்த்தான்பா.. புரியும் :-)
//

நித்தியா, அப்படியே சைடுல நீங்க சின்ன பொண்ணுன்னு விளம்பரம் குடுத்துட்டீங்க :-) வருகைக்கு நன்றி!!!

said...

கருப்பும் அழகுதாங்க. பனம்பழம். குயில். ஆனை. நாவல். எத்தனை வேணும்? பொதுவா எந்த நிறமும் அழகே. அது பொருத்தமான எடத்துல இருக்கும் பொழுது ரொம்பவும் அழகு.

பெங்களூர்ல இருந்து மதியம் ஊருக்குக் கெளம்புவீங்களா? வெள்ளிக்கெழமை ராத்திரியே போறதுக்காக்கும்? எலக்ட்ரானிக் சிட்டியில பஸ் ஏறனும்னா...தாராளமாப் போகலாம். அது சரி...நீங்க ராஜா. ராணி யாரு?

இளவஞ்சி, ஓமப்பொடி, குப்புசாமி ஆகியோர் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.