Saturday, October 27, 2007

நிலா நிலா ஓடி வா...




பூமியை நெருங்கிய நிலா என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.


சின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே "நிலாவில யாரு பாட்டி இருக்கா?" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க" என சொல்ல "இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.


யார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா? என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.


அதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான்.
முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!

11 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

Enna achu Udhay ore thathuvama iruku oru nilava paarthathuku ivlo effecta :)

Any how photo nalla iruku ana athu neenga edukalainu ninaikren right :)

said...

நல்ல படம் உதயகுமார்.

said...

//"இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" //

நீரு கேக்கக் கூடிய ஆளுதாம்வே!

said...

தலைப்பு பாத்துட்டு ஓடிவந்தேன். எங்க வீட்டுல நிலாவை தினமும் பாக்கராங்க, அதுவும் ரொம்ப பக்கத்துல

said...

எங்கய்யா போனீரு? ரொம்ப நாளா சவுண்டே இல்லை!

said...

//எங்க வீட்டுல நிலாவை தினமும் பாக்கராங்க, அதுவும் ரொம்ப பக்கத்துல
//

கரெக்டுதான்!
:)

said...

("இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்குவது.)

இப்படி கேட்டிர்களா? :)

said...

//முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!//
ஹிஹி.. நம்பிட்டோம்ல..

படம் அருமை.. ரூம் போட்டு உக்காந்து படம் புடிப்பாய்ங்களோ? :P

said...

நனைந்து கொள்ள,நினைந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மூன்றாம் பிறை.

அடிக்கடி இது மாதிரி போட்டுத் தாக்கும் ஓய்...

said...

ஃபோட்டோ சூப்பர் உதய்!

said...

இனி அடிக்கடி இப்படி கதை சொல்லுங்க.. சரியா? ;-)