Thursday, July 20, 2006

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்!

இது 1999 வருடம் நடந்த உண்மை சம்பவம். சாஃப்ட்வேர் குஞ்சுகளை வெட்டித்தனத்தில் மிஞ்ச யாருமே இல்லை என்பதை நிருபித்த நாட்கள் அவை. நான் அந்த உரையாடலின் போது அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் இதுவரை இதற்க்கு யாரும் காப்பிரைட் கேட்காததால் இதை நான் வலையேற்றுகிறேன். இதில் வரும் கதாபாத்திரங்களை தற்போதைய வலை பதிவர்களுடன் நீங்கள் ஒப்பீடு செய்து அவரா இவர்? இவரா அவர்? என கேட்க வந்துவிடாதீர்கள்.

Who or what is Maithili, in context of Indian literature?

இதுதானப்பா கேள்வி... தெரிஞ்சா சொல்லணும் இல்லைன்னா தெரியலைன்னு நடையைக் கட்ட வேண்டியதுதானே. கேள்வி கேட்டவனுக்கு சொந்தமா சூனியம் வைச்சது தெரியவர 3 நாளு ஆச்சு. ஒரு 3 மணி நேரத்துக்கு ஒருத்தன் கிட்டையும் பதில் இல்லை. கேட்டவனும் சரி வேலையை பார்க்கலாம்ன்னு மூழ்கிட்டான். அப்போதுதான் அல்டா விஸ்டா, கூகுல் எல்லாம் வந்த நேரம். ஒரு அறிவுப்பசி அண்ணாசாமி எங்கேயே தேடி அலைந்து வந்து சொன்ன பதில் கீழே:

மைதிலி என்பது மத்திய பீகாரில் பேசப்படும் ஒரு மொழி. அதற்கென தனியே இலக்கியங்கள் உள்ளன. இது ஒரு பழமையான் மொழி. ஏறக்குறை ஹிந்தி மொழி போல இருக்கும்.

அற்புதம் , அருமைன்னு கேள்வி கேட்டவன் நிம்மதியா சாப்பிட்டு வந்து வேலைய பார்க்க ஆரம்பிச்சான். இன்னொரு கொடாக்கண்டன், அவன் தாத்தா பாட்டிக்கெல்லாம் ஃபோன் பண்ணி ஒரு முக்கியமான் தகவலை சொல்லறென்னு ஊரை கூட்டி கீழே இருக்கறதை சொன்னான்.

மைதிலி பிராமணர்கள் அவர்களின் உணவு வகைகளுக்கு பெயர் போனவர்கள்! ராமாயணத்தில் கூட சீதையின் அப்பா ஜனகன் மிதிலையை ஆண்டதாக வருகிறது. அந்த பகுதியில் பேசப்பட்ட மொழிதான் மைதிலி.

அவன் பங்குக்கு உளறிவிட்டு கணிணியில் தலையை புதைத்துக் கொண்டான்.

அதே இடத்தில் ஒரு விடாக் கொண்டன் இதையெல்லாம் கவனித்து விட்டு கொடாக் கண்டனை வாரிவிட இதுதான் நல்ல சந்தர்ப்பம்ன்னு அவன் பங்குக்கு போட்டுத் தாக்கியது கீழே:

நேத்து (1999 ல்)கூட ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் அந்நியர் பிரதமராகும் பிரச்சினையில், சீதா பிராட்டி கூட அந்நியர்தான் ஏனெனில், அவர் பிறந்த ஜனகபுரி நேபாளத்தில் இருக்கிறதுன்னு சொல்லியிருக்கிறார், நீ பீகாரை ஜனகர் ஆண்டார்ன்னு சொல்லற, என்ன எங்களுக்கு மண்டையில மசாலா இல்லைன்னு நினைச்சிட்டியா? ன்னு தாளிச்சிட்டான்.

ஆபீஸுக்கு ரொம்ப லேட்டா வந்த குலக் கொழுந்து 1 சோனியா விவகாரத்தைத்தான் காலையில் இருந்து பேசி கொள்வதாக நினைத்துக் கொண்டு அப்படியே இன்னொரு குலக் கொழுந்துவிடம் போய்

இவனுக மசாலா இல்லாத பசங்க, சிவ பெருமான் இருக்கறதா சொல்லற கையிலாயம் சீனாவுல இருக்கு, புத்தர் பிறந்த லும்பினி நேபாளத்துல இருக்கு, குரு நானாக் பொறந்த தல்வாண்டி பாகிஸ்தான்ல இருக்கு, பேச வந்துட்டானுக என முனகினான்.

சின்ன வயதில் காளி கோவிலில் தேங்காய் உடைக்கும் போது கரணம் போட்டும் தேங்காய் பொறுக்க முடியாத ஆத்திரத்தில் நாத்திகனாக மாறிய குலக் கொழுந்து 2 குலக் கொழுந்து 1 வின் வாதத்தில் ஒத்துப் போனாலும் கடவுளை பற்றி பேசியதால்

அட, அதையெல்லாம் என்கிட்ட சொல்லாத. அத்வானி பாகிஸ்தான்ல பொறந்தாரு, அமர்த்யா சென் வங்காள தேசத்தில் பொறந்தாரு ந்னு சொல்லு ஒத்துக்கிறேன்.

இப்படி குலக் கொழுந்து 1 அடிக்கடி சாமி பற்றி பேசுவதால் இவன் வாயை அடக்க இதுதான் நல்ல சமயம் என எண்ணி

நீ ராமனை கும்பிடரயே அவரு ஆரியர், ஹிட்லரும் ஆரியர்ன்னு சொல்லிக்கிட்டார், அப்போ ஹிட்லர் ராமர் வம்சம். ஹிட்லர் பண்ண கொடுமையை யாரும் இன்னும் மறக்கலை, புரிஞ்சுக்கோ தம்பி!
ராவ ணனை கொன்னுட்டு புஷ்பக விமானத்திலேறி அயோத்தி வந்த ராமர் அதை நேரா ஃபிராங்பர்ட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாரு. அதுதான் இப்போதைய லூப்தான்ஸா...

பேயறந்தால் கூட கண்ணாமுழி பிதுங்காது குலக் கொழுந்து 1க்கு. ஆனால் இப்போது லேசாக கண்ணாமுழி பிதுங்க ஆரம்பித்திருந்தது.

இதை நீ நம்ப மாட்டேன்னு எனக்குத் தெரியும், புஷ்பக விமானத்தை ஓட்டியது அன்னப் பறவையின் வம்சம், லூப்தான்ஸாவின் சிம்பல் அன்னப் பறவை, இப்போ புரியுதா???

குலக் கொழுந்து 2 ரொம்ப குதிக்கிறான், அவன் வழியிலே போயி அவன் வாயிக்கு பிளாஸ்திரி போடல என் பேரு படையப்பா இல்லைன்னுட்டு

ராவணன் தான் ஜெர்மனிக்காரன். ஏன்னா புஷ்பக விமானத்துக்கு அவந்தான் ஓனர். புஷ்பக விமானத்துல ஒரு தடவை போனதால ராமன் ஜெர்மனிக்காரன் ஆக முடியாதுன்னு

வாதம் பண்ணினான்.

--தொடரும்.

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

anbuselvaraj said...

Good Humour. Keep it up. Continue...

anbuselvaraj said...

Good Humour. Keep it up. Continue...

Udhayakumar said...

வெட்டிப்பயல் ஒரு கமெண்ட் போட்டிருந்தார், அவருக்கு ஆமாம் என்பதை பதிலாக தருகிறேன். வெட்டிப்பயல், உங்க மெயில் ஐடி குடுங்க, விலாவரியா பேசலாம்...

Udhayakumar said...

அன்பு, நடந்ததை சொல்லி இருக்கிறேன். இது சொந்த சரக்கு இல்லை...

நன்மனம் said...

//...அயோத்தி வந்த ராமர் அதை நேரா ஃபிராங்பர்ட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாரு. அதுதான் இப்போதைய லூப்தான்ஸா...//

எத்தன பேருயா கிளம்பி இருக்கானுவ, கொஞ்சம் சொல்லு உஷாரா இருந்துக்கனம் இல்ல!!!!

இப்ப ரொம்ப வெட்டியோ.... பழச எல்லாம் பிசிறு இல்லாம அசை போட்றாப்ல இருக்கு:-)

நல்ல காமெடி பதிவு.

Udhayakumar said...

//இப்ப ரொம்ப வெட்டியோ.... //

:-)

யாத்ரீகன் said...

Just now noticing this post.. :-)) typical s/w engg arattai at work ;-) great that you remembered so exactly... :-D