Thursday, July 20, 2006

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -2

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -1

இதையே போய் கலைஞரிடம் போய் சொன்னா முரசொலியில் தம்பிக்கு கடிதம் எழுதி உனை எங்க பார்த்தாலும் தோலை உரிச்சி உப்புக் கண்டம் போடுங்க, திராவிட காக்கைக்கு உணவாகட்டும்ன்னு சொல்லுவார். ன்னு சொல்லிட்டே 3வது குலக் கொழுந்து என்ட்ரி குடுத்தது. ராமன் ஆரியன், ஹிட்லர் அவன் வம்சாவழி, அப்போ ராவணன் ஒரு யூதர்!!! மக்கா, நாம 3 பேரும் ஒரு பெரும் உண்மைய கண்டு பிடிச்சிருக்கோம். சாயங்காலம் எல்லோரும் பியர் அடிச்சு கொண்டாடிருவோம் ன்னு அவன் காரியத்துல குறியா இருந்தான்.

பின்னாடியே வந்த ஒரு கப்பி பய, என்னையும் சேர்த்துக்கங்க, நாம இன்னொரு உண்மையையும் கண்டுபுடிச்சிருக்கோமேன்னான். என்னடா உஷார் பண்ணின பியருக்கு பங்கு வந்துருச்சேன்னு 3வது குலக் கொழுந்து கொஞ்சம் யோசித்தது. என்ன சொல்லித் தொலைன்னு வேண்டா வெறுப்பா கேட்டான்.

கலைஞர் அவர் மகனுக்கு ஸ்டாலின்னு பேரு வைக்க காரணம் அவர் ஒரு ரஷ்யர். அவர் கொண்டாடும் ராவணன் ஒரு ஜெர்மனியர், இவங்களெல்லாம் சேர்ந்து எதிர்ப்பது 10 ஜன்பத் சாலையில் இருக்கும் இத்தாலி நாட்டு மக்களின் இந்திய அரசியல் பிரவேசத்தை. இது வரை நீங்கள் இதை ஒரு இந்திய பிரச்சினையாக பார்க்கிறீர்கள், ஆனால் இது ஒரு சர்வ தேச பிரச்சினை. ஐ நா சபை மட்டுமே இதை தலையிட்டு தீர்க்க முடியும். என கப்பி பயல் சொல்லி முடித்தான்.

குலக் கொழுந்து 1: 0 கண்டு பிடிச்சது இந்தியர்கள். ராவணனுக்கு (யூதர்) 10 தலை, தசரதனுக்கு(ஆரியர்+ஜெர்மானியர்) 10 ரதம்... அப்போ எல்லொரும் ஆரியர்கள்.

குலக் கொழுந்து 2: குரங்குக்கும்தான் 10 விரல் இருக்கு, அப்போ அதுவும் ஆரியர்களா?

கொடாக் கண்டன்: ஹரியானா காரங்கதான் உண்மையான் ஆரியர்கள் ஏன்னா hariyana வில ஹ வை எடுத்துப் பாருங்கள், ஆரியன்னு வரும்.

விடாக் கண்டன்: wait wait... அப்போ ஹரியானா காரங்க எல்லாம் குரங்குங்கறியா???

குலக் கொழுந்து 2: சமஸ்கிருதத்துல ஆர்யான்னா ஆசிரியர்ன்னு அர்த்தம். ஆகவே சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் திராவிடர்கள்.

குலக் கொழுந்து 3: இல்லையே , இது சரி வரலையே... உன்னுடைய தியரி சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் ஆரியர்கள் இல்லைன்னுதான் சொல்லுது. திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

குலக் கொழுந்து 2: நான் சொல்ல வரதும் கிட்டத்தட்ட அதுதான்... எனக்கு சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குக இல்லைன்னு நிருபிக்கணும்... என் வீட்டு ஓனர் பொண்னை நாங்கெல்லாம் வரிசையா டாவடிக்கறதால அவர் சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குன்னு உறுதியா சொல்லிட்டு திரியறார்.

மேனேஜர்; நீங்க ஆரியனா? திராவிடனா? ஜெர்மானியனா? ரஷ்யனா? குரங்கன்னா என்னால சொல்ல முடியாது. ஆனா வெட்டிப்பசங்கன்னு உறுதியா சொல்ல முடியும்.... காலையிலிருந்து எவனும் ஒரு துரும்பையும் அசைக்காம, கேள்வி கேட்டவனே மறந்து போயிட்டான். 3 நாளா இதையே பேசிட்டு, போயி வேலையை பார்க்கறீங்களா, கண்ணுகளா???

3 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//மேனேஜர்; நீங்க ஆரியனா? திராவிடனா? ஜெர்மானியனா? ரஷ்யனா? குரங்கன்னா என்னால சொல்ல முடியாது. ஆனா வெட்டிப்பசங்கன்னு உறுதியா சொல்ல முடியும்.... காலையிலிருந்து எவனும் ஒரு துரும்பையும் அசைக்காம, கேள்வி கேட்டவனே மறந்து போயிட்டான். 3 நாளா இதையே பேசிட்டு, போயி வேலையை பார்க்கறீங்களா, கண்ணுகளா???//

அடடா. இதை நான் சொல்லலாம்ன்னு நெனைச்சேனே. இன்னொருத்தர் முந்திக்கிட்டாரே. :-)

said...

குமரன், இது 7 வருடத்துக்கு முன்னால் நடந்த விவாதம்... நீங்கள் எதை நினைத்து சொல்கிறீர்களோ அதைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. நீங்கள் உங்கள் பங்குக்கு போட்டுத் தாக்குங்கள்!!!

said...

Hi,
Really a nice article.
Cheers,
Siva