IT மக்கள் அசுரர்களா?
IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்! என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.
=========
அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.
1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????
2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???
4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.
5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.
35 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
super. This is my view too.
ஐடி துறையில் தொழில் சங்கம் அமைக்க அழைப்பு விடுத்து அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் போனதன் விளைவுதான் காம்ரேடுகளின் ஐடி துறை மீதான பாய்ச்சல். சங்கம் வைத்து சந்தா வசூலித்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை:-)
மற்றபடி சம்பளபணத்தை குடித்தே தொலைப்பது மில்தொழிலாளிகள் துவங்கி ஐடி தொழிலாளர் வரை காணப்படுகிறது.அதனால் பாமரனின் விமர்சனத்தை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்.
ஐடி துறையில் தொழில் சங்கம் அமைக்க அழைப்பு விடுத்து அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் போனதன் விளைவுதான் காம்ரேடுகளின் ஐடி துறை மீதான பாய்ச்சல். சங்கம் வைத்து சந்தா வசூலித்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை:-)
மற்றபடி சம்பளபணத்தை குடித்தே தொலைப்பது மில்தொழிலாளிகள் துவங்கி ஐடி தொழிலாளர் வரை காணப்படுகிறது.அதனால் பாமரனின் விமர்சனத்தை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம்.
நீங்க சொன்னது 100க்கு 100 உண்மை...
மாசம் மாசம் வீட்டுக்கு காசை கொடுத்துட்டு கூட இருக்கற ஃபிரெண்ட்ஸ்க்கும் 3 வருஷம் செலவு பண்ற பசங்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கேன்...
அருமையான பதில் உதயக்குமார்.
ரெம்ப அருமை.
வாழ்த்துக்கள்.
பலருக்கும் பொறாமையாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.
சிலர் நல்லெண்ணத்தோடும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பதாயும் இல்லை.
சரியான மறுப்புக் கருத்துக்கள்!
சவுண்ட் பார்ட்டி அய்யா,
அது எப்படி எல்லா IT தொழிலாளிகளும் அசுரர்களாக முடியும்?உயர உயர பறந்தாலும்,ஊர்க்குருவி பருந்தாகுமா?எங்க தலைவர் அசுரன் அய்யா தான் உண்மையான அசுரன்.சந்தேகம் வேண்டாம்.
பாலா
அனானி, வருகைக்கு நன்றி!
செல்வன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!! சமூகத்தில் நிறைய இது மாதிரி நடந்தாலும் ஏதோ தவறு இங்கே மட்டுந்தான் என சொன்னதால்தான் இந்த பதிவு. மற்றபடி நானும் காம்ரேட்களின் சில கருத்துக்களில் முழுதாக ஒத்துப் போவேன்.
வெட்டிப்பயல், சூர்யான்னா என்னனு தெரியுமா?ன்னு யாரவது உங்ககிட்ட கேட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன் :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
Arguing with them is waste of time. They are in the hallucination world. Their (Russia) on India is gone over. They are trying to regain it. However, historical mistakes never return. They will talk like anything for anything.
முட்டாள்களிடம் முல்லா பேசினது போலதான் அவர்களிடமும் விவாதம் செய்வதும்.
பட்டாசு கெளப்பிட்டீங்க உதய்....
எல்லாத்துக்கும் காரணம் பொறாமைதான்...
இவ்வளவு பேசுற அவரு, பிற்காலத்துல அவரது பேரப்பிள்ளைகளை ITலதான் சேப்பாரு பாருங்களேன்....
கொஞ்சூண்டு பேர் செய்ற தப்பான செயல்களால மொத்த சமூகத்தையும் குத்தம் சொல்லும் குறுகிய புத்தி உடையவர்கள்...
அவிங்க எழுதுறதுக்கு எதுவும் இல்லைன்னு ஏதாச்சும் எழுதணும்னு கண்டதையும் எழுதுவாய்ங்க... அதையும் பதிவு பண்ணி போடுவாய்ங்க...
பனமரத்து பக்கத்துல ஒக்காந்து பால குடிச்சாலும் கள்ளாதான் நெனப்பாய்ங்க.. ஏனா, அது அவிங்களுக்கு கெடக்கலையேன்னு ஒரு வவுத்தெரிச்சல்தான்..
செல்வன் சொல்ற மாதிரி இதெல்லாத்தையும் கண்டுகிடாதிய...
சிறில், இந்த குற்றச்சாட்டுக்களை நான் முழுதாக மறுக்கவில்லை. மரத்தில் காய்க்கும் அனைத்தும் பழமாவதில்லை, சிலது அவசரப்பட்டு வெம்பி விடுவதும் உண்டு. அப்படியிருக்க அந்த கட்டுரை குறைகளை மட்டுமே பட்டியலிட்டதால்தான் இந்த எதிர் வினை.
நன்றி சிபி!!! ஒரு வழியாக கோவை (பத்திரமாக) சென்று விட்டீர்கள் போல இருக்கிறதே :-)
பாலா, அய்யா போடும் அளவுக்கு நான் பெரியவனில்லை. தனி மனித தாக்குதல் வேண்டாமே இங்கே? வருகைக்கு நன்றி.
//இவ்வளவு பேசுற அவரு, பிற்காலத்துல அவரது பேரப்பிள்ளைகளை ITலதான் சேப்பாரு பாருங்களேன்....//
இப்ப மட்டும் அங்க என்ன வாழுதான்..
//மரத்தில் காய்க்கும் அனைத்தும் பழமாவதில்லை, சிலது அவசரப்பட்டு வெம்பி விடுவதும் உண்டு//
தத்துவம் நல்லா இருக்குங்க. IT மட்டும் இல்ல எல்லா துறையிலும் நல்லவங்களும் உண்டு கெட்டவங்களும் உண்டு. காந்தி காலத்திலயே கள்ளுக்கடை வேண்டாம்னு போராட்டம் நடத்தற அளவு நம்ம மக்கள் சிறந்த குடி மக்கள இருந்திருக்காங்க. :)
நல்லா சொன்னீங்க சார்....அசுரன் இப்படியெல்லாம் எழுதுவாரு, அப்புறம் எந்த கம்யூனிஸ்ட் அரசு கணினி வேண்டாம் என்கிறது,டாலர் வருமானம் இல்லாமல் மக்களுக்கு நன்மை செய்கிறது என்று கேட்டால், கல்கத்தா, கேரளா எல்லாம் கம்யூனிஸமல்ல, அதனை நான் கம்யூனிஸமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பார்....சரி சீனா?, அதுவுமில்லை...வெறு என்னதானய்யா என்றால் புரட்சி, புண்ணாக்கு என்று பேசுவார்....என்ன செய்வது இதெல்லாம் பொறாமையால் விளையும் நக்ஸ்லிஸம்.
i am aasath
Why all of you jumping from earth to sky ?
Did you understand that Union has for collecting money only ? or. if we start a Union at IT, shall it any immoral.
In india, forthcoming New Democratic Revolution has not the photocopy of Russia/China. But IT employees and their dreamful Abroad culture has changing as Xerox Copy. Shall we need Fitzaa, Car instead of Bus, Tie, American Accents, Weekend Parties at firms.etc
This is not the stomack-fire of Crs. In colonial india, many ICS officer, Judges, Professors whom got salary from English Govt. had resigned to join the freedom struggle. Subash Chandra Boss is one example. I can't accept his political view. that has different ground. On that day, continued at the high-salaried work from Company had changed to the Ugly to peoples. Now ... tell be frank....
Nowdays Bose has ready to write the Program to destroy his Country by the name of Software which has derived by NASA also. Is it Patriatic approach...
MAny of them are wealthy while Vidharbaas' Farmer Suicides...
We can't accept individual helps. They are not bekkers. If you acept that it is their rights, you should come and join with their struggle.
பாமரனின் கட்டுரையை ஒரு எதிர்ப்பாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு அக்கரையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம் தான். ஆனால், சொல்பவரை பார்த்தால் தான் அப்படி தெரியவில்லை.
IT துறைக்கு வரும் ஜங்க் மெயில்களில் பல IT துறையினரை கிண்டல் செய்வதே வரும். அதனை, நாமே IT துறையில் இருக்கும் நாமே மற்றவருக்கு ஃபார்வார்டு செய்வதில்லையா? அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதில் தவறில்லை தான். அவர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிந்தித்தால் நலம்.
IT துறை பற்றிய ஒரு ஜங்க் மெயிலை இத்துடன் அனுப்பியிருக்கிறேன்...
Hi,
(below email "Save the IT People from Debts" was wonderful and we should go through it and also forward to all our friends)
Real Estate price hike is known open robbery from IT guys by brokers / whoever it is and it's not only Flats / Real Estate, IT guys undergo open robbery from all rich shop owners / a person who wanted to become rich as fast as possible...
The salary whatever we get, it's our hard-earned money, most of the times sitting in the night, away from family functions, friends, etc...but all our money or most of the money are going to someone who just takes advantage of our stressful life (both mentally and physically) and our new western life style.
I do not find anything wrong in having a US / UK life style, but many open thieves (starting from Ministers to our local Restaurant owner) just swindling all our "legal money" and as we do not have any other choice becoming poor / debtor day by day.
Well most of the price hikes are just unbelievable and there is absolutely no justification (few examples given below).
Chicken Biriyani (Karaikudi 3 weeks back) - Rs. 65
Today (since last 2 weeks) same Karaikudi Chicken Biriyani (believe me, there is absolutely no change) - Rs. 78, there is no justification for such a big increase.
Pop Corn (Sathyam Complex) previously (month and half back) - Rs. 20
Today (almost the same quantity) - Rs. 30 (again, i do not find any justification)
Corn in Garuda Mall previously (month back) – Rs20 Small, Rs 30 Medium and Rs 40 High
Now, No "actual" small and real small has become 35 now and 45 for high... [Are they the farmers who have given their blood to grow this ]
(In Sathyam complex, many price hikes are really too much for no reason...)
Chips packet (Gangotree) previously (three months back) - Rs. 15
Since last two Months the same packet costs - Rs. 20 (again, I do not find any justification)
Room Clean (just once) - Rs. 200, that's bcos they cleaned IT guys room.
(The moment you say that you are from Software company, the price automatically increases...)
We guys already pays big taxes from our salaries and goes on paying other taxes too (starting from Hotel Sangeetha "Vadai" to Scotch in a bar), it's time to think and pledge ourselves that we stop spending just for one month...
Reason(s) why we should stop spending alteast for a month:
1. 70% of the IT guys occupies the restaurants.
2. 80-90% of the IT guys goes to coffee shop, hang around places, bakeries, etc.
3. Most of the IT guys goes to Sathyam complex, Movies
If we stop going / spending just for a month, their business automatically goes down and they would have no other choice except to bring down the price, that's what happened when IT industry was down three years back.
Somehow directly or indirectly we are responsible for this unjust price hike and now, only we could prevent this open robberies, please add your comments or experiences and keep forwarding this email to all your known people, I am sure even if 25% of us realizes and acts accordingly, it could and would make lot of difference to us. (let's try and prevent unjust price hike)
Save the IT People from Debts
* Property market in Year 2001 -2004 was quiet Ok , People were able to buy Flats in reasonable rates .
*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom, flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800
Q: Are there any additional facilities ?
--> No Same Scheme/Area , Flat sold at 10 Lacks Now selling at 25 Lacks .
Q: Why Property increased so High ?
--> IT people competition to buy sweet home ..
Q: Who is going to Benfit from this Property Boom ?
--> Only Builders and some of the Politicians
Q: How is the Bank's support on Home Loans ?
--> Last Year , Bank gave the loan's at flexible mimimum rate,Now Banks has sufficient number of customers ,
(Trap) Slowly Banker's increasing interst at % 0.5 every month .
IT People Who bought house for 22 Lacks for 20 Yrs , Now became 23 Yrs with raise of 0.5 %
Q. How some IT people can face the problems in Future ?
--> Companies are Project Based , If Projects are not there then People will not be there .
Q. IT salaries are high in Market , How much actually IT-people getting in Hand ?
--> People, Who bought house of 22 Lacks to 40 Lacks They need to pay EMI 15,000 to 35,000 for 20 Yrs. If Bank keeps same interst rates .
Suppose Salary is 35- 40 K Per Month, 20K will be the EmI
Q. Is there any "Terms & Condition or Processes to increase rates" ?
--> No , Depends on Buiders Greediness . Every builder follows the different strategies
Builder sold one flat 1500 Per Sqft in Morning and 1800 Per Sqft in the Evening ,
There are no records maitained ..
Q. Who made builders smart & greedy ?
--> Greedy IT people ..
No body is asking , Flat was sold at 12 Lacks , Why now 24 Lacks ?
Q. Is Corporation water & MESB available to all schemes ?
--> Some of the area don't have the Corporation water at all , People surviving on Water Tankers.
** MESB .. Under Table ,can be managed easily .
Q. What will be the condition If We are not able to Clear the Loan ?
--> Depends on individual capabilities
Q. What wiil be the actual 'area of living' or carpet area if the builder proposes 1000 sft?
....> The actual carpet area will be 800-850 sft only. The common area is also included in the proposal.
If two flats are in the same floor, then the builder cheats both the residents by collecting
How do Builders cheat buyers? ... Let us see with a simple example
Builder XXXX proposes a flat in a decent residential area.
Rate ( Unit Price ) - Rs. 3500 sft.
Registration - Rs. 40 per sft.
EB and drainage - Rs. 50,000
Covered Car park - Rs. 1,25,000
Corpus fund - Rs. 50000.
For a 1000 sft flat ( 850 sft carpet area ), the approximate cost will be Rs.37,65,000. In the same plot area ( measuring 2 grounds) the builder would have constructed 8 or 10 flats.
Let us see how a builder earns his profit
Total sales for the builder - 37, 65,000 *10 = 3, 76, 50000 ( 3.76 crores)
Cost of the land - Rs. 40 laks per ground
1) Total cost of the land - 80 lakhs for two ground ------- A
Total builtup area for 10 flats - 10*1000 sft = 10,000 sft
Construction cost per sft ( for normal specification) = Rs. 900 per sft
2) Total construction cost - 10,000 * 900 = Rs.90,00,000 -------------- B
3) Other expenses for the builder - Rs. 20 per sft = Rs.2,00,000 ................. C
Total expenses for the builder = A+ B+C
= Rs. 80,00,000 + Rs.90,00,000 + Rs. 2,00,00
= Rs. 1,72,00,000 ( 1.72 crores approx)
Total Sales = Rs. 3.76 crores - Rs. 1.72 crores
Total profit of the builder = Rs. 2.04 crores.
Let us see the share of each resident
1. Cost of land = Divided share among the other 10 residents
= Rs. 80,00,000 / 10
= Rs. 8,00,000
2. Construction cost = Rs. 900 * 1000
= Rs. 9,00,000
3. Other expenses = Rs. 2,00,000 ( approx)
Total = Rs. 19,00,000 ( Nineteen lakhs)
The total share for each resident is Rs. 19,00,000 ( Nineteen lakhs only ) but he pays Rs. 37.5 laks for the flat.
Q. How We can stop Builders -Property Boom ?
1) IT People should think about buying flats for atleast next 1-2 Yrs .
2) Onces rates are reasonable , With some legal process get the Booking .
3) Check Facilities, Convince, Road Approach, schools & Mainly co-operation water
4) Ask Questions If I buy 1/2 BHK at 12 to 30 Lacks , Do I get reasale value in future?
5) Today you are capable for paying 1000 -3000 maintains per month ? Will will be the same case after 20-30yrs after retirement.
6) In All, Don't stretch more to get the more & more loans other wise it will create unnecessary pressure and tension .
7) Read the above mentioned calculation carefully, when you are about to buy a flat pls keep this in mind.
Please read this carefully € € Send it to all you know € € Act quickly € ..Save them from debts € € .We can stop the inflation € .
நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை.. :-)
ஆசாத் அய்யா, IT பத்தி பேசினா சுதந்திர போரட்டத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்க. நீங்க சொன்ன அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இருக்கும் போடும் இரவு கொட்டங்கள் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்றைக்கு அன்னியர்கள் சும்மா நம் உழைப்பை சுரண்டினார்கள். இன்று உழைப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்களே, அதை மறக்கலாமா?
அப்புறம் சீனாதான் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.
சவுண்ட்,
நல்ல மறுப்பு கருத்துகளை வைச்சு இருக்கீங்க :)
உதயகுமார், நல்ல பதில் அசுரன் கூட ஐ.டி யில் வேலைப்பார்ப்பவராக இருக்கலாம்.
ஐ.டியில் வெற்றி ஒன்றும் சுலபமாக வருவதில்லை. தற்கால இளைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள் அனுபவிக்கிறார்கள். ஐ.டி வருவதற்கு முன்னால் விலைகள் என்ன ஆணி அடித்து ஒரே நிலையில் இருந்தனவா? ஏறிக் கொண்டுதான் இருந்தது. அப்போது வெகு சில பணக்காரர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது பணக்காரர்களின் கூட்டம் அதிகம் ஆகி விட்டது. அனைத்துப் பணக்காரர்களும் குடித்தா ஆட்டம் போடுகிறார்கள். தன்னை சார்ந்த மக்களுக்கு அவர்கள் புரியும் சேவை மகத்தானது. மாதம் $200 ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும். காப்பாற்றப் படும் குடும்பங்கள் எத்தனை என்பது அசுரருக்கு தெரியுமா?
//தனி மனித தாக்குதல் வேண்டாமே இங்கே? வருகைக்கு நன்றி//
சவுண்ட் பார்ட்டி அய்யா,
இது என்ன அபாண்டம்? எங்க தலைவனை உயர்த்தி சொன்னால் அது எப்படி மற்றொரு தனிமனிதனை தாக்கின மாதிரி ஆகும்?
பாலா
சீனு, முழுதாய் படித்து முடித்து விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
ஜீ மற்றும் அனுசுயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!.
மை பிரெண்ட் மற்றும் ராயல் ராம், உங்கள் ஆதரவுக்கு நன்றி!
நான் அசுரனின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
பாலா, உங்க ஆட்டத்துக்கு இது இடமில்லை. அசுரனின் கருத்துக்கு காத்துக் கொண்டுள்ளேன்.
வருகைக்கு நன்றி!!!
கால்கரி சிவா, அனைவரும் தெளிவான ஒரு இலக்கை நோக்கித்தான் நகர்ந்து கொண்டுள்ளோம். களைகளில்லாத வயல் இல்லையெனில் விவசாய கூலிகளுக்கு வேலை இல்லை :-)
நல்லா சொன்னிங்க ... உதய்
i am aasath
i have appreciated the hard-working of IT employees.
We want to refuse the culture of Weekends if it is occur through Govt. Job. But, the important concern at this stage that it had transfer from Western Countries and it can iniciate to Workaholic nature to us. It nature should become romove the core of ethics.
On that day (ie, Starting from 20th century), They gave good salary to Indian employees compared to that day farmers. So check it and come infront....
Why are you speak about the large export of China. Do you hope that they have retain as their revolutionary nature. They proclaimed that their economy had changed to Market Economy...
மிகவும் நல்ல பதிவு உதய்.
எனக்குத் தெரிந்து ஐடி துறையில் நிறையப் பேர் குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். பொதுவாகவே இளைய சமுதாயம் குடிப்பழக்கத்தோடே வளரத் தொடங்குகிறது என்பதே உண்மை. நானும் கல்லூரியிலும் ஆரம்பப் பணிக்காலத்திலும் குடிப்பழக்கத்தோடு இருந்தேன். ஆனால் இப்பொழுது அறவே நிறுத்தி விட்டேன். ஆக ஐடிக்கு வந்த பிறகு ஒருவன் குடிகாரன் ஆகிறான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்துதல். வருமுன்னமே அப்படித்தான் வருகிறான். காசு துணிச்சலைக் கொடுக்கிறது என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.
பப் கலாச்சாரம் - இது தப்புன்னு சொல்றது எவ்வளவு சரின்னு தெரியலை. குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு என்பதில் மறுகருத்து கிடையாது. அது பப்பில் கள்ளச்சாராயத்தில், டாஸ்மாக்கில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அது பொதுப் பிரச்சனை. ஐடிக்கான தனிப்பிரச்சனை கிடையாது.
புதிதாக சம்பளம் வாங்குகிற அத்தனை பேரும் அதைக் கொண்டு போய்க் குடியில் கொட்டுவதில்லை. நீங்கள் சொன்னது போல பலர் குடும்பங்களில் அது முறையாகப் பயன்படவும் செய்திருக்கிறது. சம்பளம் வந்ததும் லேட்டஸ்ட் மாடல் மொபைலும் பைக்கும் வாங்குகிறவர்களும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பதே உண்மை.
காரில் கல்லெறிவது தங்கையைக் காப்பாற்ற என்று சிறுவன் சொன்னான். பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு உன்னைக் காப்பாற்ற என்று பாமரன் சொல்கிறார். பெயர்ப் பொருத்தம் அபாரம். உள்ள என்னவெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு எழுதுங்க சார்.
டாலரை நம்பிய பொருளாதார வளர்ச்சி நல்லதல்ல என்பதும் சரி. அதுக்காக அதையும் செய்யாம இருந்தா வர்ரதும் வராமப் போயிருமே! இப்ப சம்பாதிக்கிறவனும் சம்பாதிக்காமப் போயிருவான். அதுதான் பாமரன் விரும்புறதா? நாட்டோட மக்கள்தொகையில 3 சதவீதங் கூட இருக்காது ஐடி தொகை. அப்படி இருக்குறப்போ மத்த 97 சதவீதமும் முழிச்சிக்கிட்டு ஆக்கபூர்வமாச் சிந்திச்சு ஒரு அருமையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். அடுத்தவன் வண்டி இழுக்கனும். நம்ம மட்டும் சொல்லிக் கிட்டே இருக்கனும். நல்ல நாயமய்யா.
Uday,
I second your views!
nice one udhay.. a different perception point of view. Need to think about this.. hardly we ppl has to do somethin about this in a positive front..
Post a Comment