திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...
காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.
http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute
இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.
என் பார்வையில்:
- தமிழ், தமிழன் என்றால் பிச்சைக்கார கூட்டம், அடுத்தவன் சொத்த்துக்கு ஆசைப்படுபவர்கள் என்னும் எண்ணம் எவருக்கும் வரும்படி மிக அழகாக, கோர்வையாக அடுக்கப்பட்டுள்ளது.
- 92' கலவரம் மிகவும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசி வரிகளில், "தமிழ்நாட்டிலும் இதேபோல் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது" என்று சொல்வதன் மூலம் அந்த கலவரத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி தெளிவாக தெரிகிறது.
- பழைய வரலாறு மிக அதிகமாகவும், கலவரம் பற்றிய குறிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு "91ல் இணையம் இல்லை, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்" என்பதுதான் பதில்.
- 2002 நாடகம் என்று சொல்வதின் மூலம் ஆசிரியரின் "நடுநிலை" வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
- "காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை - ஒரு கன்னடரின் பார்வையில்" என்பதுதான் மிகச்சரியான தலைப்பு. கட்டாயமாக ஒரு நடுநிலைமைக் கருத்தை என்னிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது கொஞ்சம் அதீதமாக தோண்றியது.
- நான் வாழும் காலத்திலேயே இணையத்தில் மிகப் பெரிய திறந்த மூலத்தில் வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இதை சரியான முறையில் வெளிக் கொணரவில்லையெனில் என் முதல் கருத்து முற்றிலும் உண்மை என பின்னால் நிறுவப்பட்டுவிடும்.
- வழக்கம் போல், தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கும்.
என் நண்பன் சுவாமிநாதன் இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது.
வாழ்த்துக்கள் நண்பா!!!
இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute
நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?
8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
//நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?//
யோவ் இன்னா சவுண்ட் வுட்ற..
ஓ நீ சவுண்ட் பார்ட்டியா..
Uday,
Again I second your view!!
This issue had been made as a political issue/weapon. Nobody, the politicians or the common people don't know this is a life threatning issue for farmers in both states.Here I mean the word 'farmers', the real farmers,who live by their farming income only. Not for the rich officers and politicians, who have farms for weekend enjoyment. Forgive me for telling this, No politician in either state is going to get justice for their state.The politicians in both the states will do all the gimmicks and stunts to cheat people and satisfy the people's ego.These politicians don't care whether you get water or give water in Cauvery. But the so called common people will cry when the rice price goes up 1 ruppee by Killogram. But the common people don't care about this.I think I should appreciate and thank these so called common people because they cry and say some good words,when they hear and see that my family's dinner is only rats and frogs by watching TV. Thank you guys for your sentiments. Also my big THANKS to the MEDIA , who know how to live and get rich by others disaster.
சிறில் & சிபா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!
அன்பு செல்வராஜ், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!!!
அரசியல்வாதிகளைப் பற்றிய உங்கள் கருத்தில் முழுதாக ஒத்துப் போகிறேன்.
நீங்கள் யாரென்றும் உங்கள் பின்புலம் எதுவென்றும் எனக்குத் தெரியாது, ஆனால் உங்கள் எலிக்கறி வாதம் என்னை இதை சொல்ல வைக்கிறது.
எங்கள் கிராமத்தில் எலிக்கறி என்பது மாதத்தில் ஒரு முறை கட்டாயம் ஒரு வேளை உணவிலாவது இருக்கும். தோட்டதிலும், காட்டிலும் இருக்கும் பயிர்களை அழிக்கும் எலியை அழிக்கும் நோக்கிலோ, இல்லை பசியின் கொடுமையாலோ இது ஆரம்பித்திருக்கலாம் (எனக்கென்னவோ முதல் பாதிதான் சரி என தோண்றுகிறது). எந்த மீடீயாவும் இந்த கொடுமை (உங்கள் பார்வையில்) வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. மேலும் பிராய்லர் கோழிகளின் வரவுக்குப் பிறகு கோழிக்கறி விலை குறைந்ததால் இப்பொழுது எலி என்கவுன்டர்கள் குறைந்திருக்கின்றன. இதை நாங்கள் ஒரு உணவு பழக்கமாக பார்த்ததாலோ என்னவோ பெரிதுபடுத்த தோன்றவில்லை.
நீங்கள் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால், பொது மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த பொதுமாத்தில் என் பங்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Cauvery problem pathi mulusa theriyaatha ennai pola aatkal kandippa wikipedia ponra valaithalangala paathuthaan therinjikanum. athuve thappa irukkumpothu.....
pinnaal varukinra santhathiyin purithal epdi irukkum...
ithukku ethira kural koduthe aahanum...
//எங்கள் கிராமத்தில் எலிக்கறி என்பது மாதத்தில் ஒரு முறை கட்டாயம் ஒரு வேளை உணவிலாவது இருக்கும்//
இது புதுசு... எப்ப போகலாம் உங்க கிராமத்துக்கு.
சீரியஸ் பதிவுல தேவையில்லாம காமெடி பண்ணிட்டிருக்கேனோ?
:))
Thanks Uday for publishing my comments. I am from a farming family in the western districts of Tamil Nadu. The farmers in the western districts like Coimbatore or Erode are not directly affected by this Cauvery issue. But I felt like I want to speak for the farmers.I live in US and my parents and my brother's family in India. Is this the info you want on my background?
Uday, I may be living in US but I have concerns and love on INDIA.
Nothingelse I have to say.
Post a Comment