ஒரு பயணக் குறிப்பு
3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.
நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.
காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).
Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks) பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.
மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது Au Sable Light Station. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.
அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் Log Slide. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.
Log Slide ல இருந்துட்டே Grand Sable Banks and Dunes பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.
அடுத்த பார்த்தது Sable Falls. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.
எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.
காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.
மூனாவது நாள் திரும்ப Munising. Wagner falls, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.
எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...
செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:
நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.
10 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
படமெல்லாம் பிரமாதமா இருக்குய்யா! எடங்கள் நல்லா விழுந்திருக்கு. சரி...தரகருக்குன்னு எடுத்த போட்டாக்களப் போடலாமுல்ல...ஒங்க தரகுக் கமிஷன் மிச்சமாகவும் வாய்ப்பு இருக்கு.
அருவி படங்கள் அருமை (தண்ணீருக்கு என்று சிறப்பு ஃபில்டர் சிகரெட் போடுவீங்களா?)
மேலும் படங்களை ஃப்ளிக்கர்/எம்.எஸ்.என்./பிகாஸா கூகிள் என்று இணைத்து தொடுப்பு கொடுங்களேன்.
போட்டோவெல்லாம் அருமையா வந்திருக்கு...
நீங்க எடுத்ததா இல்ல நெட்ல சுட்டதானு யாராவது கேக்கப்போறாங்க... பேசாம ஜி.ரா சொல்ற மாதிரி நீங்க இருக்குற போட்டோவை போட்ருங்க ;)
//ஒங்க தரகுக் கமிஷன் மிச்சமாகவும் வாய்ப்பு இருக்கு.
//
கொஞ்சம் இல்லை, நிறையவே கஷ்டம்... யாருங்க என்னை?????
//மேலும் படங்களை ஃப்ளிக்கர்/எம்.எஸ்.என்./பிகாஸா கூகிள் என்று இணைத்து தொடுப்பு கொடுங்களேன். //
அதற்க்கான ஆயத்தப் பணிகளில் கேமெரா கவிஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். முடிந்ததும் முதலில் அதுக்கு ஒரு பதிவு...
//(தண்ணீருக்கு என்று சிறப்பு ஃபில்டர் சிகரெட் போடுவீங்களா?)
//
exposure மாத்தணும். Tripod இருந்தால் கூடுதல் சிறப்பு... மத்தபடி எதுவும் தேவயில்லை. இதிலிருக்கும் பெரும்பாலான படங்கள் Sony P-8 ல் எடுத்ததுதான். 2 அருவி படங்கள் மட்டும் Cannon Rebel XT
// "விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு." //
உண்மைய சொல்லோனும் - ஆட்டம் ஆடினதால் தலை சுத்திச்சா ? 'தலை சுத்தினதால்(!)' ஆட்டமா?
// அருவி படங்கள் அருமை (தண்ணீருக்கு என்று சிறப்பு ஃபில்டர் சிகரெட் போடுவீங்களா?) //
இதற்கு பல முறைகள் உள்ளன. இரண்டு இங்கே :
1) Aperture மிக குறைத்து, Shutter நேரம் கூட்டினால் இந்த மாதிரி வரும்.
2) ISO செட்டிங் மிகச் சிரியதாக வைத்து, Shutter நேரம் கூட்ட வேண்டும். (இந்த முறை வெளிச்சம் அதிகம் இருந்தால் வேலை செய்யாது.)
என்னைக் கேட்டால், முதல் முறையே சிறந்தது. இதில் focus நன்றாக வரும்.
இந்த மாதிரி படம் எடுக்க SLR Camera எல்லாம் தேவை இல்லை. Manual(M) அல்லது Aperture Priority(Av) அல்லது Shutter Priority (Tv) செட்டிங் உள்ள எந்த camera என்றாலும் போதும்.
படங்கள் அருமை. எங்அ ஊர்லேர்ந்து கொஞ்சம் தூரம்தான்னு நினைக்கிறேன். இங்கெல்லாம் ஜட்டியோட குலிக்க அனுமதியுண்டா?
:)
//எங்அ ஊர்லேர்ந்து கொஞ்சம் தூரம்தான்னு நினைக்கிறேன்.//
சிறில், இதெல்லாம் ஓவர், எங்க ஊர்லிருந்து போறதை விட 70 மைல் கூட அவ்வளவுதான்.
//இங்கெல்லாம் ஜட்டியோட குலிக்க அனுமதியுண்டா?//
அனுமதி இருக்கான்னு தெரியலை, ஆனா வெறுங்காலில் தண்ணியில் நின்னு கால் கொஞ்ச நேரம் நனைச்சதுக்கே கால் மரத்துப் போச்சு... நீங்க ஜட்டியோட குளிச்சீங்க.............
Post a Comment