ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!
"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் கதை!!!
இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... நிலா உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.
என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க பாபா எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் 0 ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.
ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு "வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு" ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???
8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
உதய்,
வாழ்த்துக்கள்!!
கலக்குங்க..
கதை சூப்பர்...
கொஞ்சம் வேலை இருக்கு திரும்ப வந்து விளக்கமாக பேசலாம்
வாழ்த்து(க்)கள்.
ட்ரீட் எப்ப?
ஒதுங்கக் கூடாது நல்லவனே...
உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் சைலண்ட்டா ஆனால், என்னை மாதிரி ஆளுங்க எழுத ஆரம்பிச்சுருவாங்க...
லிஃப்ட் கலந்து கொள்ளவும் :-D)
ஒதுங்கக் கூடாது நல்லவனே...
உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் சைலண்ட்டா ஆனால், என்னை மாதிரி ஆளுங்க எழுத ஆரம்பிச்சுருவாங்க...
லிஃப்ட் கலந்து கொள்ளவும் :-D)
சிவா, ரொம்ப நன்றிங்க...
வெட்டி, நானே உங்களோட பேசணுன்னு இருந்தேன். வெள்ளி இரவு எதிர்பாருங்கள்...
டீச்சர், டீரீட் கேக்கறீங்களே, கதைய படிச்சீங்களா, நீங்கள் இம்போஷிசன் எழுதா சொன்னாலும் சொல்லுவீங்க...
பாபா, லிஃப்டா??? நீங்க வேற... கதிர் பட லெவெலுக்கே தடுமாறிப் போனேன்...
கதை இன்னும் படிக்கலை உதய்.. வார்ப்புரு அற்புதம்.. :)
//வார்ப்புரு அற்புதம்.. :)//
நீங்கதானே இடத்தை சொன்னீங்க :-) வெட்டிப்பயலின் உதவியுடன் சின்ன சின்ன கோளாறுகளை சரி செய்தேன்.
Post a Comment