Saturday, September 23, 2006

ஏன்? எதற்கு? எப்படி???-2

Part 1

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?

2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?

3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?

4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?

5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?

6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?

7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???

8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???

9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?

10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?

பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!

29 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

இவ்வளவுதானா!!

நீங்க கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்ல எங்க ஊரு மாதர் சங்கத்து ஆளுங்க ரெடியா இருக்காங்க!!

உங்க அட்ரஸ் குடுங்க, அனுப்பி வைக்கிறேன்!

said...

தமிழ்மணத்துல சர்ச்சை இல்லாத ஒரே ஆள் நீங தானாமே?

said...

:-))

said...

இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி... உண்மையெல்லாம் தைரியமா பேசறீங்க ;)

சரி பதில் கிடைச்சா தனியா ஒரு பதிவுல போடுங்க... நாங்களும் பொது அறிவை வளர்த்துக்குறோம் ;)

said...

//நீங்க கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்ல எங்க ஊரு மாதர் சங்கத்து ஆளுங்க ரெடியா இருக்காங்க!!

உங்க அட்ரஸ் குடுங்க, அனுப்பி வைக்கிறேன்!//

தம்பி, அப்படியே புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸையும் அவங்க கையிலேயே குடுத்து விடுங்க. மாவுக் கட்டுன்னா நாளாகும், சரியாக.

முதல் தடவை வர்றீங்கன்னு நினைக்கிறேன், வந்து இப்படி திகில் கிளப்பிட்டு போறீங்க... என்னவோ போங்க, வருகைக்கு நன்றி (அடுத்த முறை சொல்ல இருப்பேனான்னு தெரியலை)

said...

//தமிழ்மணத்துல சர்ச்சை இல்லாத ஒரே ஆள் நீங தானாமே? //

வாங்க சார், வாங்க... உங்க ஜோதில ஐக்கியம் ஆவதற்கான முதல் படிதான் இது...

said...

//இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி... உண்மையெல்லாம் தைரியமா பேசறீங்க ;)//

பாலாஜி, இப்படி ஏத்தி விட்டு ஏத்திவிட்டுதானே என் முதுகை ரணகளம் பண்ணிட்டு இருக்கீங்க...

//சரி பதில் கிடைச்சா தனியா ஒரு பதிவுல போடுங்க... நாங்களும் பொது அறிவை வளர்த்துக்குறோம் ;) //

இந்த கலவர பூமி சவுண்ட் பார்ட்டியில ஏதாவது மீதி இருந்தா நீங்களே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என் சார்பா பதிவு பண்ணிருங்க...

said...

:)))))))))

said...

ஹல்லோ உதயகுமார்,

நாங்க 4 பேர் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல வந்திருக்கோம். அமெரிக்கா, விஸ்கான்சின், மில்வாக்கி பஸ் ஸ்டாண்ட், விவேகானந்தர் தெரு, குறுக்கு சந்து வரை வந்துவிட்டோம். நீங்க எந்த வீட்டில் இருக்கிறீர்கள் ?
;-)))

said...

//உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா//

வாங்கண்ணா:)) எனக்கும் இதே சந்தேகம் வந்து வாட்டுதுங்கண்ணா ஆராச்சும் மாதர்குலக்கொழுந்துகள் பதில் சொன்னா தேவலை !!

said...

//ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???//

அட அழகான கஞ்சத்தனம்தானே லுஸுல விடுங்கண்ணா !!

said...

//இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.//

அது என்னமோ வாஸ்தவம் தான். ஒரு குரூப் உங்களைத் தேடிக்கிட்டுத் திரியுதாம்.
:)

said...

//அது என்னமோ வாஸ்தவம் தான். ஒரு குரூப் உங்களைத் தேடிக்கிட்டுத் திரியுதாம்.
:) //

கைப்பு, நீங்க எழுத சொன்னதாத்தான் எல்லா இடத்துலையும் சொல்லிட்டு இருக்கேன், ரெண்டு பேரும் சேர்ந்துதான் வாங்குவோம்ன்னு நினைக்கிறேன்

அனானி, ரொம்ப நன்றி!!! இப்போ திருத்திட்டேன். வந்து பார்த்துட்டு உங்க கருத்து சொல்லுங்களேன்

said...

உதய்...இந்தப் பதிவைப் படிச்சேன். ஒரு கேள்வி...இதெல்லாம் தங்கத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுந்தான. உலக மாதர்கள் அனைவருக்கும் இல்லையே. நீங்க தெளிவாச் சொல்லீட்டா மத்த ஊர்ப் பொம்பளைங்க அவங்கவங்க வேலையப் பாப்பாங்க. அத்தோட இந்த மாதிரி தமிழ்ப் பெண்களைப் பெருமை படுத்துறவங்களுக்குத் தமிழ் நாட்டுல என்னாகும்னு தெரியுந்தானே....

இல்ல இது ஒலகளாவிய பெண்களுக்குப் பொருந்தும்னு சொன்னீங்கன்னா...ஒலக மக்களுக்குக் கொஞ்ச நாளைக்குத் திருவிளா....துணிகிணி எடுத்துக் கொண்டாடிக்கிருவாங்க. நீங்க தெளிவாச் சொல்லீர்ரது நல்லதுன்னு எனக்குத் தோணுது. ஹி ஹி

said...

1. உள்ளூர்ல இருக்கும் போது துவைச்சு பத்து நாளான ஜீன்ஸும் பழைய தாடியுமா அலையுற இந்தப் பசங்க, வெளிநாட்டுக்குப் போனதும் கூலிங் கிளாஸும் புது ஷர்ட்டுமா போஸ் கொடுப்பது ஏன்?

2. கேள்வி கேட்பது உரிமைன்னு சொல்லி இப்படி கண்காணாத இடத்தில் உட்கார்ந்து கேள்வியை டைப் மட்டும் பண்ணுவதேன்?

3. இப்படி ஆராய்ச்சி பண்ணுமளவுக்கு அந்தப் பொண்ணுங்களை வேடிக்கக பார்ப்பதேன்!

மிச்ச கேள்விகள் அப்புறம்..

said...

எல்லாம் சரி,

ஆனா இந்த //** **** *** காதுல//

இது மட்டுதான் கொஞ்சம் உதைச்சது....
எனக்கும் கொஞ்சம் வருத்தம்மாதான் இருந்தது....
அனானி இதுக்குதான் வந்தாரா....

said...

1. உங்களை எப்படி பெத்தங்களோ அப்படிதான்


2. நீங்களும்தான் எங்களுக்குப் போட்டியா மூக்கு எல்லாம் இப்போ குத்திக்கிறீங்க.நாங்க எதவாது சொன்னோமா?எங்க காதுல தாங்க இருக்கு.அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? எல்லாம் உங்களை மாதிரி ஜொல்ளுகளை குத்தி தொங்க விடரதுக்குதான்

3. அதுக்கும்தான் நீங்க எல்லாம் போட்டிக்கு வந்துட்டீங்களே.போய் பாருங்க.இந்த ஆம்பிள பசங்களுக்கு முடி இடுப்பு அளவுக்கு நீளமாக இருக்கு.நீங்க நீளமாக முடி வளர்கறது பத்தி நாங்க comment பண்ணுனா தாங்குவீங்களா நீங்க?எங்களுக்கு எல்லாம் நல்ல மனசு.உங்களுக்குப் போட்டியாக நாங்க இருக்க விரும்பவில்லை.அதுக்குதான் எங்க முடியை நாங்க வெட்டிக்கிறோம்.

4. நீங்க வைர மோதிரம் வாங்கி தரங்க டெடி பியரை விட்டுரோம்.


5. நாங்க குண்ட இருந்த ஏய் குண்டச்சின்னு கூப்பிடமா இருப்பிங்களா?கல்யாணம் பண்ணுற பெண் சும்மா சிக் என்று இருக்கனும் இல்லையா?நீங்க யானை மாதிரி இருந்தாலும் சிம்ரன் மாதிரி பெண்தானே கேட்கிறீங்க.முதலில் அதை மாத்துங்க.அப்புறம் வந்து எங்களை நையாண்டி பண்ணுங்க

6. நீங்களும் கையில மொபையிலோட திரியரீங்க.முதலில் அதில் credit இருக்க?


7. அதைப் பார்த்துதான் ரசிக்கின்றீங்களே!நாங்க கஞ்சம் என்றால் நீங்க தரளமா?நீங்களும்தான் ஜட்டி எல்லாம் தெரியாற மாதிரி pants போடுறீங்க!

8. நீங்க மட்டும் செந்தமிழில் பேசுவது போல் ரொம்ப அலட்டிகதீங்க

9. எங்களிடம் இருக்கின்ற குறை நிறைகளை நாங்க ஒப்பனைச் செய்து சரி செய்துக் கொள்ளலாம்.ஆனால் உங்களால் முடியாது.அந்த வயிற்றேச்சலில் பேசுங்கின்றீர்களே?!


10. இல்லைங்க மிதிப்பதற்கு.

said...

//1. உள்ளூர்ல இருக்கும் போது துவைச்சு பத்து நாளான ஜீன்ஸும் பழைய தாடியுமா அலையுற இந்தப் பசங்க, வெளிநாட்டுக்குப் போனதும் கூலிங் கிளாஸும் புது ஷர்ட்டுமா போஸ் கொடுப்பது ஏன்?//

நாங்க எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்போம். எங்கேயும் ஒரே அலம்பல்தான்.

//கேள்வி கேட்பது உரிமைன்னு சொல்லி இப்படி கண்காணாத இடத்தில் உட்கார்ந்து கேள்வியை டைப் மட்டும் பண்ணுவதேன்? //

இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

said...

ராகவன், குசும்பு பண்ணாதீங்க...

ஜொள்ளுப் பேச்சி, உங்கள் அத்தனை பதிலகளும் அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன். ரொம்ப நன்றி!!!

said...

//இது மட்டுதான் கொஞ்சம் உதைச்சது....
எனக்கும் கொஞ்சம் வருத்தம்மாதான் இருந்தது....
அனானி இதுக்குதான் வந்தாரா....//

ஆமாம் எலி, நீங்களும் அதை முன்னாடியே சுட்டியிருந்தீங்கன்னா ஒரு 50 பேர் பார்க்கறதுக்கு முன்னாடியே தூக்கியிருப்பேன். பரவாயில்லை, late is better than never...

said...

//3. இப்படி ஆராய்ச்சி பண்ணுமளவுக்கு அந்தப் பொண்ணுங்களை வேடிக்கக பார்ப்பதேன்! //

:). பொன்ஸ், இப்போதைக்கு ஒரு சிரிப்பு மட்டும். அப்புறம் நேரம் இருந்தா விலாவரியா ஒரு பதிவே போடுறேன் (ஜொள்ளுப்பாண்டியின் துணையுடன்).

said...

சொல்லாம்ன்னுதான் இருந்தேன்.

அப்புறம், நீங்க வேண்டும் என்றே எழுதர ஆளாஇருந்தா என்ன பண்றதுன்னுதான் எழுதல.....
(இங்க தான நிறைய பேர் அப்படியிருக்காங்களே)

said...

:))
have linked this post in Desipundit. danks

http://www.desipundit.com/2006/10/02/yeen/

said...

//:). பொன்ஸ், இப்போதைக்கு ஒரு சிரிப்பு மட்டும். அப்புறம் நேரம் இருந்தா விலாவரியா ஒரு பதிவே போடுறேன் (ஜொள்ளுப்பாண்டியின் துணையுடன்).//

அண்ணா சூப்பரப்பூ!! எப்போ எங்கேன்னு சொல்லுங்க கையிலெ 'செல்'லும் வாயிலே ஜொள்ளுமா ஆரம்பிச்சுடுவோம் கச்சேரிய ! நம்ம பொன்ஸக்கா தானே ஒன்னும் சொல்ல மாட்டாங்க !!:))))

said...

//:). பொன்ஸ், இப்போதைக்கு ஒரு சிரிப்பு மட்டும். அப்புறம் நேரம் இருந்தா விலாவரியா ஒரு பதிவே போடுறேன் (ஜொள்ளுப்பாண்டியின் துணையுடன்).//

அண்ணா சூப்பரப்பூ!! எப்போ எங்கேன்னு சொல்லுங்க கையிலெ 'செல்'லும் வாயிலே ஜொள்ளுமா ஆரம்பிச்சுடுவோம் கச்சேரிய ! நம்ம பொன்ஸக்கா தானே ஒன்னும் சொல்ல மாட்டாங்க !!:))))

said...

Desi Pundit ல லின்க் குடுத்துருக்காரு நம்ம டுபுக்கு, என்ன எழுதிருக்காருனு பார்த்தா....

டுபுக்கு சார், நீங்க என் மானத்தை Desi Pundit ல கூடவா வாங்கணும். எனக்கு நேரமே சரியில்லைன்னு நினைக்கிறேன்.

மத்தபடி, ஜொள்ளு பேச்சி தனியா வந்ததால சும்மா விட்டுட்டேன்... மாதர் சங்கத்தை சேர்ந்தவங்க வந்திருந்தாங்கன்னு வைங்க, நடக்கறதே வேற (ஓடியே போயிருப்பேன்).

said...

//அண்ணா சூப்பரப்பூ!! எப்போ எங்கேன்னு சொல்லுங்க கையிலெ 'செல்'லும் வாயிலே ஜொள்ளுமா ஆரம்பிச்சுடுவோம் கச்சேரிய ! நம்ம பொன்ஸக்கா தானே ஒன்னும் சொல்ல மாட்டாங்க !!:))))
//

ஜொள்ளுப்பாண்டி, உங்க ஆதரவு என்னைக்கும் இந்த மாதிரி டாபிக்குக்கு இருக்கும்ன்னு உங்களை கேக்காமலே வாக்கு குடுத்துடேன். காப்பாத்திட்டீங்க...சீக்கிரம் டிஸ்கஷன் ஆரம்பிக்கணும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

சவுண்ட் பார்ட்டி சவுண்ட் இல்லாத பார்ட்டி ஆகி விட்டீர்கள்!பாருங்க எல்லாரும் ரொம்ப வருத்தப்படுறங்க!