Friday, May 26, 2006

இட ஒதுக்கீட்டு பிரச்சனை

அடுத்து என்ன எழுதலாம் என் உக்கார்ந்தால் ஜொள்ளு உதய், லொள்ளு உதய் மற்றும் நல்ல உதய் என 3 பேர் என் முன்னாள் உக்கார்ந்தார்கள்.

ஜொள்ளு உதய்: அடுத்தது சேலையை பற்றித்தான் எழுதணும். ஏன்னா நம்ம ஜொள்ளுப்பாண்டி தாவணி பத்தி எழுதி அங்க வரவேற்ப்பு பிச்சிக்கிச்சு...

நல்ல உதய்: டேய், ஏந்தான் இந்த மாதிரியே பேசிட்டு இருக்க... எப்படி உதவலாம் - பார்ட் 2 இன்னும் வரலை. ஏன்? எதற்கு? எப்படி? ந்னு நான் 20 30 கேள்வி ரெடி பண்ணி வச்சிருக்கேன்... அதை போடலாம்.

லொள்ளு உதய்: ஏப்பா, இப்படியே நீ காலத்துக்கும் படத்தைப் போட்டு என்ன சுகத்தை கண்ட? ஒரு ஃபிகரா, ஒரு ஓசி பியரா? ஒன்னுக்கும் பிரயோசனம் இல்லை...இப்படியே நீ காலத்துக்கும் படத்தை போட்டு செத்து போயிரு, நாங்க ஒரு போட்டோ வாங்கி பூ போட்டு தினமும் கும்பிடுக்கறோம்

நல்ல உதய்: இவன் எப்பவுமே சத்தியராஜ் மாதிரி பேசி எவங்கிட்டயாவது வாங்கி கட்ட போறான். அப்ப நாந்தான் கூட இருக்கணும் ஹாஸ்பிடலில். இங்க பாரு உதய், நீ ஜொள்ளு உதய் சொல்லரது போடற இல்லை லொள்ளு உதய் சொல்லரது போடற. என்னை நீ சுத்தமாக கண்டுக்கறது இல்லை.

லொள்ளு உதய்: எதுக்கு இப்பொ ஒப்பாரி வைக்கிற? நாஞ் சொல்லரதுதான் போடறது இல்லை, எப்பவுமே நம்ம ஜொள்ளுக்கு தான் முதல் மரியாதை. அட, கோயில்ல கூட யாருக்கும் முதல் மரியாதை எல்லாம் கிடையாதுன்னு கலைஞர் உத்தரவு போடுட்டாரு. ஆனா, இங்க மட்டும் நம்ம ஜொள்ளு ராஜ்ஜியம்தான். இட ஒதுக்கீட்டு பிரச்சினை வெளிய மட்டும் இல்லை இங்கேயும்தான். நான் எழுத சொன்ன கருவாச்சி காவியம் பாதியில நட்டுக்கிடு நிக்குது, தெரியும்ல?

நல்ல உதய்: அப்போ பேசாம மூணு பிளாக் ஆரம்பிச்சிரலாம். பிரச்சினை முடிந்ததுல்ல..

ஜொள்ளு உதய்: ரொம்ப சரி, ஆனா அவனுங்க பிளாக் அப்டேட் பண்ணறியோ இல்லையோ, தினமும் என் பிளாக்ல கலரே கண் கண்ட தெய்வம், வடக்கத்தி பிகரும் நானும், கொடுத்து வைத்த T- சர்ட் ந்னு எதாவது வந்துட்டே இருக்கணும், சரியா???

லொள்ளு உதய்: பாரேன், அவன் சரியான்னு சொல்லுரது கூட ஹேமா சின்ஹா தலை சாய்ச்சுட்டு சொல்லரது மாரியெ சொல்லரான். இவன் உருப்பட மாட்டான். இவன் பேச்ச கேட்டன்னு வச்சுக்க பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி ன்னு விவகாரமா எழுத உட்டடுருவான்.
என் பிளாக் பேரு என்ன வேணா வச்சுக்கோ, ஆனா, போட்டோ மட்டும் போடக் கூடாது. சும்மா போறவன் வரவனையெல்லாம் மானாவாரியா திட்டுனம்ன்னு வச்சுக்க, பிளாக் ஹிட் பிச்சுக்கிட்டு போகும், அப்புறம் தானியங்கு மறுமொழி மட்டுருத்தல் வசதி யாரு குடுப்பான்னு தெரிச்சுக்கிட்டு ஓடனும்.

நல்ல உதய்: இவனை கூட வச்சுக்குட்டு பேசவே பயமா இருக்கு. எங்காவது இவனை தள்ளிட்டு போயிடுங்கடா...

லொள்ளு உதய்: இதுதான் இளிவரல்.

நல்ல உதய்: டேய், நல்லத்தானட இருந்த, என்னென்னமோ பேசற, உன்மையிலயே பேய் எதுவும் புடிச்சிருச்சா???

லொள்ளு உதய்: அட இதுக்கே பயந்துட்டா எப்படி? பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் ந்னு எத்தனை இருக்கு...

நல்ல உதய்: அய்யோ...

லொள்ளு உதய்: பாத்து பாத்து... இப்பவே செத்து போயிராத, நான் போட்டொ வச்சு
கும்பிடுவேன்னு வெளயாட்டுக்குத்தான் சொன்னேன்.

ஜொள்ளு உதய்: எதோ யோசனையில் இருந்து வெளியே வந்தவனாய், பழனி பஞ்சாமிர்தம் டைட்டில் கூட நல்லாத்தான் இருக்கு. 2 வாரத்துக்கு முன்னாடி பழனி போனப்ப பஸ்ல வந்த...

லொள்ளு உதய்: ஆரம்பிச்சுட்டான்டா, ஏன்டா உனக்கு வேற நினைப்பே கிடையாதா, நாங்கல்லாம் இங்க உக்காந்து நவீன தமிழ்ன்னு பேசிட்டு இருக்கோம்...

ஜொள்ளு உதய்: சரி சரி சொல்லித் தொலை (திரும்ப யோசனையில் மூழ்குகிறான்)

லொள்ளு உதய்: சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதான்னு பெரிய தலைகளை பத்தியெல்லாம் பேசலாம். நாய், பூனை, ஆந்தைன்னு அவனுக எழுதுனை போட்டுட்டு இறுக்கிட்டு உக்கார்ந்துட்டோம்ன்னு வை போரவன் வரவன் எல்லாம் ஆஹா ஓஹோ ம்ம்பாங்க... எழவு நமக்குத்தான் என்ன எழுதனம்னே மறந்து போய்விடும்.

நல்ல உதய்: எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு... குரூப் ஹெல்த் இன்சுரன்சுல இவனெல்லாம் கவராகரானா இல்லையா??? இல்லை, காட்டுக்கு எரிக்க எடுத்துட்டு போற செலவாவது குடுப்பாங்கலா?

லொள்ளு உதய்: சாவது நானாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

உதய்: டேய், எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் இனிமேல் கனவில் கூட பிளாக் பக்கம் ஒதுங்க மாட்டேன்.போயிட்டு வாங்க...

ஜொள்ளு உதய்: அட் லீஸ்ட், அந்த பழனி பஞ்சாமிர்தமாவது...

உதய்: சாவடிச்சிருவேன், மரியதையா இடத்தை காலி பண்ணுங்க.

8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

யோவ்.. ஒரு பத்து நிமிஷம் பொறுத்து போட்டிருக்க குடாது..? முந்திக்கிட்டயே.. இனி மறுபடியும் நான் முதல்ல இருந்து யோசிச்சு தட்டனுமா..

said...

//பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் ந்னு எத்தனை இருக்கு...// இருக்கில்ல.. ஆமா.. ??

said...

//இனி மறுபடியும் நான் முதல்ல இருந்து யோசிச்சு தட்டனுமா.. //

ராசா, நீங்க க.க. படிச்சிட்டு அப்படியே உங்க அனுபவங்களை கொட்டுங்க... அதுவே நிறைய நாள் வரும் போல.

said...

////பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் ந்னு எத்தனை இருக்கு...// இருக்கில்ல.. ஆமா.. ?? //

அய்யோ ராசா, நீங்க என்ன சொல்ல வரீங்க? உள் குத்து வெளி குத்துன்னு இருக்கும் போல. நான் டிஸ்க்ள்ய்மர் வேற போடல, வம்புல மாட்டி விடாதீங்க...

said...

//வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இது என்னோட அந்நியன் சைட். இவனை இங்கே மட்டுந்தான் பார்க்க முடியும்.//

இது ஏன்னு இப்ப தெரிஞ்சிரிச்சு....

said...

//சாவடிச்சிருவேன், மரியதையா இடத்தை காலி பண்ணுங்க. //

ithu Sithiram Pesuthadi dialog maathiri irukke... copy adichuttengala???? :-)

said...

//ithu Sithiram Pesuthadi dialog maathiri irukke... copy adichuttengala???? :-) //

உண்மைதான்... நான் போன வாரம்தான் அந்த படம் பார்த்தேன், அந்த பாதிப்பா கூட இருக்கலாம்...

இப்போ மூணு நாளா நான் ரோம்-ல தெரு தெருவா சுத்திட்டிருக்கேன். எல்லாம் "Angels and Demons" படிச்சதால வந்த வினை.

said...

I think you are watching Sun Music a lot... Hema Sinha in this post and sandhya in one of your previous post... Also, there is a separate post on Sun Music...

Ordinant fan of Sun Music!!!