Monday, May 22, 2006

கலர் கனவுகள்

போன வாரம் ஊருக்கு போன பொழுது அம்மா என்னை பார்த்து கேட்டாங்க, ஏன்டா, உனக்கு ரசனையே கிடையாதா, 5 கருப்பு பேண்ட், 3 லைட் புளூ சர்ட். ஏன் உலகத்தில வேற கலரே கிடையாதா என சத்தம் போட்டாங்க. எனக்கு கருப்பே பிடிக்காம கருவாச்சி காவியம் எழுதறவரைக்கும் போய்ட்டேன், ஆனா இவங்க இப்படி திட்டறாங்களேன்னு நினைச்சுட்டு இருக்கறப்போ நாலு அஞ்சு புடவையை எடுத்துப் போட்டு இதெல்லாம் நேத்து எடுத்தேன்னாங்க... என்னைய திட்டினீங்க, இதெல்லாம் என்ன கலர்,பஞ்சு மிட்டாய், ஆரஞ்சு, தக்காளி, மாம்பழம்ன்னு பழக்கடையை வாங்கிட்டு வந்திருக்கிங்க என சிரித்து விட்டேன். உனக்கென்ன தெரியும், நாலு பக்கம் வெளிய போய்ட்டு வந்தாதானே தெரியும்... எப்பவும் யுனிஃபார்ம் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு ரசனையே செத்து போச்சு, எப்படி வளர்த்திருக்கா பாருன்னு என்னைய எல்லாம் திட்ட போராங்கன்னு ஒரே புலம்பல்.

அம்மா சொன்னதிலும் ஒரு நியாயம் இருப்பதாக பட்டது. இனிமேல் மத்தவங்க எப்படி ட்ரெஸ் பண்ணராங்கன்னு பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். அப்படியே சாகவாசமா டாவின்சி கோட் படத்துக்கு PVR ல டிக்கெட் புக் பண்ணிட்டு வரலாம்ன்னுட்டு போனா படம் இன்னும் ரீலிஸ் பண்ணவே இல்லைன்னுட்டாங்க... சரி வந்ததுதான் வந்தோம் வேற ஏதாவது படம் பார்க்கலாம்ன்னு லைன்ல நின்னேன். எனக்கு முன்னாடி தக்காளி கலர் சுடிதார் போட்டு ஒரு பொண்ணு.மணி ரத்னம் படத்தில் ஹீரோயின் பின்னாடி வெளிச்சம் போட்டு காட்டுவாங்கள்ள அந்த மாதிரி அந்த இடமே ரொம்ப வெளிச்சமா இருந்தது. சுடிதாரையே பார்த்துட்டு இருக்கலாம் போல சும்மா நச்சுன்னு இருந்தது. என் கண்ணு அங்க இங்க சுத்தி கடைசியில் சுடிதாரையே ஜொள்ளு ஒழுக பார்த்துட்டு இருந்தேன்.

அந்த பொண்ணு டிக்கெட் வாங்கிட்டு நகர்ந்ததும் அந்த பொண்ணு வாங்கின படத்துக்கே எனக்கும் டிக்கெட் கேட்டேன். சார், அவங்க நைட் 10 மணி ஷோவுக்குதான் வாங்கிருக்காங்க, உங்களுக்கு என இழுத்தார். எனக்கும்தான் என டிக்கெட் வாங்கிட்டு நடையை கட்டினேன்.

கீழே வந்தால் பஞ்சு மிட்டாய் சேலை ஒன்று லேண்ட் மார்க் கடையினில் நுழைந்தது. நானும் அப்படியே நுழைந்து பார்த்தால் அந்த சேலை தமிழ் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. எனக்கு சும்மாவே தமிழ் புத்தகங்கள் படிக்க பிடிக்கும் இதுல இது வேறயா என அங்கு இருந்த 60 அறுசுவை உணவுகள், ஜாதகம் கணிப்பது எப்படி என பொது அறிவு புத்தகங்களை புரட்டி விட்டு அப்படியே கொஞ்சம் பஞ்சு மிட்டாயை பார்த்துக் கொண்டிருந்தேன். அது சதாரண சேலை கிடையாது. கொஞ்சம் வேலைப்பாடுகள் நிறைந்த சேலை. வடக்கும் தெற்க்கும் சேலையில் சங்கமம் என்று சொல்லும் போத்தீஸ் சேலை மாதிரி இருந்தது. பஞ்ச தந்திர கதைகள் புத்தகத்தை பார்த்ததும் அக்காள் மகள் ஞாபகம் வர அதை எடுத்துக் கொண்டு பஞ்சு மிட்டாய் கனவுடன் நகர்ந்தேன்.

வெளியே மாம்பழக் கலரில் T- சர்ட் போட்டுக்கொண்டு 4 பொண்ணுங்க ஃபேர் & லவ்லி வித்துட்டு இருந்தாங்க. T- சர்ட்டை அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அதிலிருந்த வாசகங்கள் அப்படியே என்னை கறைத்து விட்டது. எதோ ஃபில் பண்ண சொன்னாங்க...100 ரூபாய் வாங்கிட்டு ஒரு டப்பாவை குடுத்துட்டு சார், இது 90 ரூபாய், 10 ரூபாய் சில்லரை இல்லையேன்னாங்க... நான் பரவாயில்லைன்னுட்டு மாம்பழக் கலரை கண்ணு நிறைய வைத்துக் கோன்டு வண்டியை கிளப்பும் போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் எனக்கும் ரசனை இருக்கு...

16 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

கருப்பு பிடிக்காதுன்னுட்டு 5 கருப்பு பாண்ட்டு வைச்சிருக்கீங்க!

கலர் பார்க்க போனேன் சொல்றதுக்கு இம்புட்டு பெரிய பில்டப்பா? அப்பப்பா!

நானும் ஓரே ப்ளுவா வைச்சிருந்தேனா! வேறு கலர் ஷர்ட் எடுக்கலாம்னு மால் பக்கம் போனேனா? "பச்சை" கலர்ல உடுத்தி ஒரு சின்னப்பொண்ணு. த்ரிஷா ரேஞ்சுக்கு. அது ஓரு மாடர்ன் நிலவு. ஹீம்! நானும் ஓரு பச்சை சர்ட் எடுத்தேன். :)

said...

உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்களேன்...அம்மா தானே attend பண்ணுவாங்க?

said...

ஃபோரத்துல போயி ஜொள்ளு விட்டுட்டு கலர் பார்த்த கிரகத்துக்கு அம்மா, அக்கா புள்ளையெல்லாம் இழுத்துருக்கீங்க.. ம்ம்

சரி.. அப்புறம் 10 மணி ஷோ என்னாச்சு.. அதை பத்தி ஒன்னுஞ்சொல்லல.. ?
(நோட் பண்ணுங்கப்பா.. நோட்பண்ணுங்கப்பா)

said...

வருகைக்கு நன்றி தயா!

//கருப்பு பிடிக்காதுன்னுட்டு 5 கருப்பு பாண்ட்டு வைச்சிருக்கீங்க!//

அதெல்லாம் கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு பாடிட்டு இருந்தப்போ எடுத்தது... எடுத்தது எடுத்தாச்சுன்னு போட்டுட்டு இருக்கேன்.

//ஹீம்! நானும் ஓரு பச்சை சர்ட் எடுத்தேன். :) //
எப்படி போட்டுட்டு ரோட்டுல நடக்கப் போறீங்க... எனக்கு லைட் புளூ சர்ட், கருப்பு பேண்ட்தான்.

said...

//உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்களேன்...அம்மா தானே attend பண்ணுவாங்க? //

சீனு, எதுக்கு இந்த மாதிரி சபைல எல்லாம் மிரட்டிட்டு... சின்னபுள்ளதனமால்ல இருக்கு.... இருங்க உங்களை கைப்புள்ள அண்ணன்கிட்ட சொல்லி வைச்சிகிறேன்.

said...

//சரி.. அப்புறம் 10 மணி ஷோ என்னாச்சு.. அதை பத்தி ஒன்னுஞ்சொல்லல.. ? //

படம்: Munich
பார்க்க சுமாராதான் இருந்தது... மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி மேற்படி ஒன்னும் நடக்கலை.

ராசா, இப்பொல்லாம் எந்த பொண்ணு தனியா படத்துக்கு வருது...

said...

//இப்பொல்லாம் எந்த பொண்ணு தனியா படத்துக்கு வருது...//

தனியா வராட்டி என்ன.. நம்ம ப்ளாக் பேண்ட், நீளச்சட்டை அழகுக்கு முன்னாடி..? :)

said...

கலர் கனவுகள் தலைப்பு கொடுத்து கலர பார்த்து வழிந்தை ஒரு பதிவா போட்டுடிய நைனா. பெரிய ஆளுபா நீ

said...

நமக்கு கலரெல்லாம் ஒண்ணும் வேணாம்ப்பா...கருப்பு வெள்ளைல இருந்தா ஒண்ணுப் பாருங்க :))

அன்புடன்,
அருள்.

said...

வண்ண வண்ணப் பூக்கள் @ PVR. அதைத் தானே சொல்கிறது உங்கள் வலைப்பூ?

-குப்புசாமி செல்லமுத்து

said...

உதயாக்கு ஏன் கருப்பு பிடிக்காதுன்னு தெரியனும்னா என்னை கேளுங்க! அது பெரிய்ய்ய்ய்ய கதை!

said...

உதயாக்கு ஏன் கருப்பு பிடிக்காதுன்னு தெரியனும்னா என்னை கேளுங்க! அது பெரிய்ய்ய்ய்ய கதை!

said...

டேய், பசங்க சட்டை கலர பத்தி அம்மா சொன்னா, பொண்ணுங்க சட்டை பாவாடை கலர பாத்துட்டு இருக்கே!

said...

//உதயாக்கு ஏன் கருப்பு பிடிக்காதுன்னு தெரியனும்னா என்னை கேளுங்க! அது பெரிய்ய்ய்ய்ய கதை! //

ண்ண்ணா... உங்களை யாரும் கேக்கலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு... ஆனா, கொஞ்சம் அடக்கி வாசிக்கறது :-)

said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி..!!

ஆமா அது என்ன கருப்பு கதை.. நம்ம 'கதை' மாதிரியா??

said...

ராசா, உங்க கதை ரேஞ்சுக்கு எல்லாம் எங்களால எழுத முடியுமா??? நான் என் ரேஞ்சுக்கு கருவாச்சி காவியம் எழுதிட்டு இருக்கேன். அதைத்தான் நண்பர்கள் உயர்வா சொல்லிட்டு இருக்காங்க..

வேற ஒன்னுமே இல்லீங்கண்ணா!!!!