Wednesday, May 03, 2006

உறவுகளை மேம்படுத்துவது எப்படி?

ஒரு பட்டாம்பூச்சியின் அசைவுகூட உலகில் வேறு எங்கோ பூகம்பம் ஏற்படுத்தும் என படித்துள்ளேன். சின்ன சின்ன வார்த்தைகள்கூட பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என நான் அனுபவித்த பிறகு இதை எழுதுகிறேன்.

உறவுகளை மேம்படுத்துவது எப்படி? என ஒரு வகுப்பு சென்று 2 நாட்கள் கூட ஆகவில்லை. நான் என் வீடு வாங்கும் கனவை புதுப்பித்த நேரம் அது. பார்ப்பவர்கள் எல்லோரிடமும் ஏதாவது வீடு இருக்கா வீடு இருக்கா என கேட்டு அவர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தேன். இதற்க்கு முன் ஊரிலேயே ஒரு 2 வாரம் தங்க நேர்ந்த படியால் யாருடனும் அதிக தொடர்பில்லாமல் இருந்தது. இப்பொழுதெல்லாம் பெரிய பெரிய IT கம்பெனிகளில் எதுவேணுமானாலும் வாங்க விற்க விளம்பரம் செய்யும் வசதி இருப்பதால் பக்கத்தில் இருந்த இன்னொரு IT கம்பெனியில் இருந்த நண்பருக்கு ஃபோன் செய்து பேசிவிட்டு நான் அப்படியே என் விண்ணப்பதை எல்லொரிடமும் சொல்வது போல அவரிடமும் சொன்னேன். "அதானே, காரியம்ன்னா மட்டும்தானே எங்ககிட்ட பேசுவீங்க, இல்லைன்னா பேசுவீங்களா?" என கேட்டார். என் நடு மண்டையில் யாரொ (அவங்கன்னே கூட வச்சுக்கலாம்) கொட்டியது மாதிரி இருந்தது.

உறவுகளை மேம்படுத்துவது எப்படி? வகுப்பிலெல்லாம் உக்கார்ந்தது வெட்டி என தோண்றியது. என்னவோ சொல்லணும் போல இருந்துது சொல்லிட்டேன். உண்மையிலேயே உறவுகளை மேம்படுத்துவதுவதற்க்கு என்னாலானதை இன்று முதல் செய்ய ஆரம்பித்து விட்டேன்.

இதே மாதிரி ஒரு பதிவு இளவஞ்சியின் சுய மதிப்பீடுகள் பதிவிலும் நீங்க பார்க்கலாம்.

பின்குறிப்பு: இவ்வளவு நாள் காலை வணக்கம்ன்னு ஒரு மெயில் மெயில் வந்தா நான் படித்ததேயில்லை, நேரே குப்பை கூடையில்தான் கிடக்கும். யாரவது இந்த மாதிரி அனுப்பினா அதை முழுதாக படிக்க முடியாவிட்டாலும் நீங்களும் பதிலுக்கு சொல்லலாம், தப்பில்லை.

12 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

இதுக்கு தாங்க நான் காலை வணக்கம் மெயிலே அனுப்பறது இல்லை :)

said...

//இதுக்கு தாங்க நான் காலை வணக்கம் மெயிலே அனுப்பறது இல்லை :)
//

பொன்ஸ்,நீங்க அனுப்பறது இல்லைங்கறது சரி. ஆனா, வர்றதுக்கு என்ன மரியாதை தரீங்கன்னு சொல்லவே இல்லை?

said...

இவ்ளோ தூரம் சொல்லியிருக்கீங்க.. பின்னுட்டம் போடாம போகக்கூடாது.. so.. done :)

said...

என்ன உதயகுமார், உங்க எல்லா பதிவையும் இவ்வளவு ஆர்வமா படிச்சு பின்னூட்டம் போடறேன், மெயிலுக்கு பதில் சொல்லாமலா...

பக்கத்துலயே உக்காந்துகிட்டு குட் மார்னிங்னு அனுப்பினா கண்டுக்க மாட்டேன்.. வேற் எங்கேர்ந்தாவது வந்தா பதில் வணக்கம் சொல்லிடுவேன்..
சில சமயம் படிச்சிட்டு இவ்வளவு பெரிசா எழுதாதேன்னு வேறா அட்வைஸ் அனுப்புவேன்.. அதுக்கப்புறம் நமக்கு அவங்க வணக்கமே அனுப்ப மாட்டாங்களே!! :(

said...

//இவ்ளோ தூரம் சொல்லியிருக்கீங்க.. பின்னுட்டம் போடாம போகக்கூடாது.. so.. done :) //

ராசா, நான் ஒன்னு சொன்னேன், நீங்க ஒன்னு சொல்லறீங்க. ரெண்டுமே சரிதான். அட, இரட்டுற மொழிதல்...

said...

//என்ன உதயகுமார், உங்க எல்லா பதிவையும் இவ்வளவு ஆர்வமா படிச்சு பின்னூட்டம் போடறேன், மெயிலுக்கு பதில் சொல்லாமலா...//

நன்றி பொண்ஸ் அப்படின்னு சொன்னா மட்டும் பத்தாது உங்களுக்கு... நாளையிலிருந்து உங்களுக்கும் காலை வணக்கம்ன்னு அனுப்பறேன் :-)

said...

அது சரி.. பொன் வைக்கிற இடத்துல பொண் வச்சிட்டீங்களே!!! :)

--பொன்ஸ்

said...

//அது சரி.. பொன் வைக்கிற இடத்துல பொண் வச்சிட்டீங்களே!!! :)//

ஹிஹிஹி... பொன்ஸ், மன்னிச்சுக்குங்க...

அமெரிக்காரங்க பேரை மாத்தி சொல்லிட்டா உயிரே போன மாதிரி நினைப்பாங்க.. நீங்களோ பொன், பொண் னு வார்த்தை விளாயாட்டு விளையாடறீங்க...

said...

இதுல என்னங்க இருக்கு.. சரியா சொன்னா கேட்டுக்க போறீங்க..

எனக்கும் ஒரு அமெரிக்க அம்மணிக்கும் இதுல ஒரு சண்டையே நடந்திருக்குங்க.. நான் ஏதோ அவங்க பேரை தப்பா எழுதிட்டேன்னு அந்தம்மா வேணும்னே என்னைத் திட்டி ஒரு மெயில் அனுப்ப, நான் என்னன்னு கேட்டா, நீ கூடத் தான் என்பேரை மாத்திட்டன்னு சொல்லி அழ, ஒரே தமாஷ் தாங்க.. :)

said...

நீங்க வேற பொன்ஸ், என் பேரை எப்படி எல்லாம் மெல்ல முடியுமே அப்படி மென்னு துப்புராங்க... நீங்க எப்படியோ கூப்பிடுங்க ராசான்னு அழுதுட்டே சொல்லிட்டேன்.

said...

Hmm.Good that you reminded me about this.

said...

உன்னோட காலை வணக்கத்தின் அற்த்தம் புறிகிற்து.

தொடறட்டும் ... :-)

என்றும் நட்புடன்,
அருண்