இந்தாங்க மதுமிதா...
வலைப்பதிவர் பெயர்: உதயகுமார்
வலைப்பூ பெயர் : சவுண்டு பார்ட்டி
உர்ல் : / சுட்டி http://www.soundparty.blogspot.com
ஊர்: பட்டக்காரன் பாளையம், ஊர் கடத்தப்பட்டு இப்பொழுது பெங்களூர்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஃபிளாக் அறிமுகப்படுத்தியது என் நண்பன் "ஸ்மார்ட்" செந்தில். யுனிகோட் பற்றி தெரிந்ததும் நானே தமிழில் பதிய ஆரம்பித்தேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 01 ஜூன் மாதம் 2005
இது எத்தனையாவது பதிவு: இதோடு 38
இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://soundparty.blogspot.com/2006/05/blog-post_24.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இது என்னோட அந்நியன் சைட். இவனை இங்கே மட்டுந்தான் பார்க்க முடியும்.
சந்தித்த அனுபவங்கள்: தினமும் 3 மணி நேரம் கோவிந்தா கோவிந்தா!!!
பெற்ற நண்பர்கள்: கணக்கு வைக்கவில்லை.
கற்றவை: ஏராளம்...
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னப்பா சுதந்திரம்... நாந்தான் எல்லா கருமாந்திரமும் எழுதரனே...
இனி செய்ய நினைப்பவை: புதுசா ஒன்னும் இல்லை... இப்போ செய்வதை ஒழுங்கா செய்யணும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. சொன்னா வீடு புகுந்து அடிப்பாங்க...
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்
5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
யாருங்க மதுமிதா? எல்லாரையும் சுயசரிதை எழுதச் சொல்லி தூண்டிவிட்ருக்காங்க?!!:)
//எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னப்பா சுதந்திரம்... நாந்தான் எல்லா கருமாந்திரமும் எழுதரனே...
இனி செய்ய நினைப்பவை: புதுசா ஒன்னும் இல்லை... இப்போ செய்வதை ஒழுங்கா செய்யணும்.//
பண்ணுவதோ கருமாந்திரம் பிடித்த வேலைகள். அதை ஒழுங்க வேற பண்ணனுமாக்கும் :-)
பொன்ஸ், மேட்டர் தெரியாதா??? அவங்க (மதுமிதாதான்) ஒரு புக் போடறாங்களாம். என்னையெல்லாம் யாரு மதிச்சு இந்த மாதிரி கேப்பாங்க... அதனாலதான் உடனே போட்டுட்டேன்.
அப்ப்றம், போட்டோ போடுவாங்களான்னு கேட்டிருக்கேன்... போடுவேனு சொன்னாங்க இப்போ ஆறு சூர்யா கெட்டப்புல எடுத்த போட்டோ இருக்கு, குடுக்கணும் :-)
//இப்போ ஆறு சூர்யா கெட்டப்புல எடுத்த போட்டோ இருக்கு,//
எது, இளவஞ்சி வாத்தியார் க.க.- 4 இல் எடுக்கச் சொன்னாரே அந்த போட்டோ தானே?!!
//01 ஜூன் மாதம் 2005//
அட, இவ்வளவு சீனியரா நீங்க???!!
//எது, இளவஞ்சி வாத்தியார் க.க.- 4 இல் எடுக்கச் சொன்னாரே அந்த போட்டோ தானே?!! //
அதுக்கெல்லாம் குடுப்பினை இல்லைங்க... இங்க டீம்ல எல்லொரும் ஒன்னா சேர்ந்து சாப்பிட்டப்ப என்னை மட்டும் தனியா ஒரு போட்டோ எடுத்துட்டாங்க... அவ்வளவே...
//அட, இவ்வளவு சீனியரா நீங்க???!! //
முதல் பதிவுதான் அப்போ... தினமும் தமிழ்மணத்தை பார்க்க ஆரம்பித்தது ஃபிப்பரவரி முதல் வாரத்தில் இருந்துதான்...
Post a Comment