பாஸ் வேர்டு கூத்துக்கள்
அந்த காலத்தில் (சுமார் 3 வருடங்களுக்கு முன்பு வரை) பாஸ் வேர்டு பரிமாறிக் கொள்வது என்பது IT கம்பெனிகளில் சகஜமான ஒன்று. அந்த கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை இதை எழுத வைக்கிறது.
முதலில் நடந்தது இது. வேலையில் சேர்ந்திருந்த நேரம். நண்பன்(1) அவன் பாஸ் வேர்டாக ஒரு பெண்ணின் பெயரை வைதிருக்கிறான் என நண்பன்(2) சொன்னான். நாங்கள் யாரும் நண்பன்(2)வை நம்பவில்லை. இதில் உசுப்பேறிய நண்பன்(2) கீ போர்டில் டைப் செய்யும் எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணும் சாப்ட்வேர் நண்பன்(1)வின் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் பண்ணி எங்களுக்கு அதை நிருபித்தான். (நண்பன்(2) இன்னமும் அப்படித்தான்). நண்பன்(1)வை கையும் களவுமாக பிடித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால் நண்பன்(1) அது என் அம்மாவின் பெயர் என சொன்ன பொழுது நாங்கள் நம்பித்தான் தீர வேண்டி இருந்தது.
இன்னொரு நாள் ஒருத்தனிடம் யுனிக்ஸ் பாஸ் வேர்டு கேட்டால் F***123 ட்ரை பண்ணு இல்லைன்னா c@#$, இல்லைன்னா P^&*( என சத்தமா சொன்னான். ஏன் உனக்கு இவ்ளோ கெட்ட வார்த்தை மட்டும்தான் தெரியுமா என பின்னாடி எங்க பிராஜெக்ட் மேனேஜர் வந்து நின்றார். எங்க ஊரில டவுசர் கழண்ட்ருச்சுன்னு சொல்லுவாங்க, எனக்கு ஏற்கனவே பல முறை டவுசர் கழண்டிருந்தாலும் அடுத்தவனுக்கு நடக்கும் போது பார்ப்பது அலாதி சுகம்.
ஒரு பெண் நண்பி அலுவலகம் முடிந்து சென்ற பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு மெயில் அனுப்பவில்லை என்று. இது எங்கள் மேனஜருக்கு தெரிந்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்று அந்த பெண் பதறிக் கொண்டு எனக்கு போன் செய்து நீ அனுப்பிவிடுகிறாயா என கேட்டாள். நானும் அவள் மெயில் பாக்ஸை திறக்க பாஸ் வேர்டு கேட்டேன். அவள் கூட வேலை செய்பவன் பெயரை சொல்லி கூட 3 நம்பர் சொன்னாள். எல்லாம் அனுப்பிய பிறகுதான் தோன்றியது அட மவனே இது காதல் செய்யும் பாடு என்று. அடுத்த நாள் அவளே வந்து நான் பாஸ் வேர்டு மாத்திட்டேன் யாருகிட்டையும் சொல்லாதே என்றாள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என தைரியம் சொன்னேன். (அவள் பாஸ் வேர்டை மட்டும்தான் மாற்றியிருக்கிறாளா இல்லை ஆளையும் மாற்றி விட்டாளா என எனக்கு இப்போது தெரியாது.)
13 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
அப்ப அவளுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டீர்கள்.
// (அவள் பாஸ் வேர்டை மட்டும்தான் மாற்றியிருக்கிறாளா இல்லை ஆளையும் மாற்றி விட்டாளா என எனக்கு இப்போது தெரியாது.) //
மறுபடியும் மெயில் அனுப்ப மறந்தா தெரிஞ்சு பூடுது.. என்னா கவலை.. சரி, உங்க பாஸ்வோர்டு என்ன??
//அப்ப அவளுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டீர்கள்.//
வசந்தன், நான் பாஸ் வேர்டு மட்டுதான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். இந்த கதையை சொல்ல மாட்டேன்னு சொல்லையே... சரிதானே?
//மறுபடியும் மெயில் அனுப்ப மறந்தா தெரிஞ்சு பூடுது.. என்னா கவலை.. சரி, உங்க பாஸ்வோர்டு என்ன?? //
பொன்ஸ், காலை வணக்கம். இதையும் நான் பதிவில் போடுவதாகத்தான் இருந்தேன். ஆன சுய விளம்பரம் வேண்டாம்னு விட்டுட்டேன். எப்பவும் சுலபமாக ஞாபகத்துக்கு வரும் பெயரை பாஸ் வேர்டா வைப்பதுதான் நல்லது. அது அம்மா, அப்பா, மகள், மகன், பாட்டி, சாமி என ஆளுக்கு ஆள் மாறும்னு நினைக்கறேன்.
காதலித்துப்பார்
காதலியின் பெயர்
பாஸ்வேர்டாகும்
நிலவு நண்பன், சரியா சொன்னீங்க,நம்ம ராசா கூட இதை பதிவா போட்டதா ஞாபகம்...
http://raasaa.blogspot.com/2006/03/blog-post_27.html
ஆமா பேருக்கப்புறம் அந்த 1 2 3'ங்கிற நம்பர் எதை குறிக்குதுன்னு சொல்லவே இல்லயே :)
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.
மாப்பு...மாப்பு... வெச்சுட்டான்யா ஆப்பு... நான் உனக்கு என்ன பாவம் பண்ண்ணென்னு ஆப்போட வந்திருக்க... (வடிவேலு ஸ்டைலில் கதறிக்கொண்டு படிக்கவும்).
யப்பா, நீ சொன்ன எந்த கேட்டகிரில நான் வரென்னு சொல்லிட்டு ஆப்பு வைக்கலாம்ல... அப்பதானே மொத்தா ஆப்புல இதுல இத்தனை அதுல அத்தனைன்னு பெருமையா சொல்லிக்க முடியும்...
// ராசா (Raasa) said...
http://raasaa.blogspot.com/2006/03/blog-post_27.html
ஆமா பேருக்கப்புறம் அந்த 1 2 3'ங்கிற நம்பர் எதை குறிக்குதுன்னு சொல்லவே இல்லயே :) //
காதலி 1 2 3 ன்னு சொல்றாங்களோ.. :)
இல்லைங்க நிலவு நண்பன்... பாஸ் வேர்டுல எண்களும் இருக்கணும்னு ஒரு விதி இருந்ததால ஒல்லோரும் பாஸ் வேர்டு கடைசில 123 ன்னு சேர்த்துக்கிறது சம்பிரதாயம்...
ஆமா, உங்க பாஸ்வோர்டு என்ன??
நிகழாத நிகழ்வுகளை
நினைவுபடுத்திப்பாருங்கள்
நிச்சயம் அதிலொரு சுகமிருக்கும்.
நிகழ முடியாத, சம்பவங்களின்
நெருக்கம்
நெருங்கியிருக்கும்
அது
சொல்லிய காதலானாலும் - சரி
அல்லது
சொல்லாத காதலானாலும் சரி.
அவன் பெயரை சொல்லிப்பாருங்கள்.....அவள் இருப்பாள்
அவள் பெயரைச் சொல்லிப்பாருங்கள்....அவன் இருப்பான்.
நான் உன்னை வெறுக்கவேண்டுமெனில்
மறக்காமல் இருக்கவேண்டும்
நாள்தோறும் நடக்கிறது
பாஸ்வேர்டாக நீ இருப்பதால்!!
//நான் உன்னை வெறுக்கவேண்டுமெனில்
மறக்காமல் இருக்கவேண்டும்
நாள்தோறும் நடக்கிறது
பாஸ்வேர்டாக நீ இருப்பதால்!! //
நாகு, நச்சுன்னு இருக்கு. ஆனா உண்மையா இருக்கும்னு ஒரு சந்தேகம் எனக்கு ;-)
Post a Comment