Sunday, April 23, 2006

பெங்களூர் பிளாக்கர் மீட்

போன வாரத்தில் விளையாட்டுத்தனமாக ராகவனுக்கு முதலில் அடித்த மெயில் பிளாக்கர் மீட் வரை வந்துவிட்டது. இளவஞ்சி, சுதர்சன் என கூட்டம் சேர்ந்தவுடன் இளவஞ்சி அப்படியே சனிக்கிழமை சாப்பிட வாங்கன்னு அழைப்பு விடுத்தார். அசைவ சாப்பாடு மட்டுமே நான் சாப்பிடுவதால் முதலில் நான் நிறைய யோசித்தேன். அப்புறம் அவர் மெனு என்னன்னு சொன்ன பிறகு நான் போகாமல் விட்டால் அது நான் என் வயிற்றுக்கு செய்யும் துரோகம்னு அட்டெனென்ஸ் குடுக்க தயாராகி விட்டேன். இதற்காக நான் மதியம் கூட சாப்பிடலைன்னா பாருங்க...

லேட் அடிஷனாக கொங்கு ராசாவும் வருவதாக சுதர்ஷன் சொன்னதும் சரி இன்னைக்கு சிவராத்திரிதான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். சரியாக 7 மணிக்கு இளவஞ்சி சொன்ன இடத்தில் நின்று கொண்டிருந்தபோது TN 41 ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி வந்து நின்றது. அது பொள்ளாச்சி வண்டி என்று உறுதியாக தெரிந்தாலும் ஒரு 5 நிமிடம் பொறுத்து மெதுவாக நீங்க கொங்கு ராசாவா என மெதுவாக பேசி அப்புறம் சகஜமாக கொசுக்கடியில் கையை காலை தேய்த்துக்கொண்டே பேச ஆரம்பித்தோம். ராகவனுக்கு போன் செய்தால் 5 நிமிடத்தில் இருப்பதாக சொன்னார். அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் அவர் வராததால் அவர் வந்தவுடன் அவர் என்ன வாட்ச் கட்டியிருக்கிறார் என பார்க்க வேண்டும் என நினைத்து அவர் அடுத்தடுத்து பண்ணிய கூத்துகளில் இது சுத்தமாக மறந்து விட்டது.

திரும்ப ராகவன் போன் பண்ணி வேறு ஒரு இடத்தில் நிற்பதாக சொன்னார். அங்கே போய் அவரை காணாமல் திரும்ப போன் செய்தால் நாங்கள் முதலில் இருந்த இடத்தில் இருப்பதாக சொன்னார்கள். நானும் கொங்கு ராசாவும் அங்கு போய் சேர்ந்த பொழுது இளவஞ்சியும் வந்து சேர்ந்து இருந்தார். சரியாக 7 மணிக்கு சந்திப்பதாக சொல்லி 8 மணிக்கு (இந்திய நேரப்படி சரியாக 7 மணின்னு படிங்க) பார்த்தோம்.

செவிக் குணவில்லாத போழ்து சிறுது
வயிற்றுக்கும் ஈயப் படும் என்பதற்க்கு பதிலாக பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து மணி பார்த்தால் மணி 10. ஒருவருக்கொருவர் அறிமுகமான பிறகு அரசியல், இலக்கியம், சொந்த கதைகள் என பேச்சு F1 ரேசில் த்ரோட்டில் போட்டு வண்டி ஓட்டுவது போல் இலக்கிலாமல் சீறி பாய்ந்தது. செகண்ட் ஷோ சினிமா பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணிருந்தோம், இனி ஒரு படத்துக்கும் போக முடியாது என சந்திப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

அடடா, முக்கியமானத சொல்ல மறந்துட்டேன். சப்பாத்தி, கோழி, மீன், தயிர் சாதம்ன்னு திருமதி.இளவஞ்சி கலக்கி இருந்தாங்க... நாங்க சாப்பிடறதை பார்த்ததுக்கு அப்புறமும் அடிக்கடி வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க.. அவங்க ரொம்ப நல்லவங்க...

39 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

இளவஞ்சி.......

இருங்க உங்களை....

மெனு பார்த்ததிலே இருந்து பெருமூச்சு நிக்கமாட்டேங்குது.
ம்ம்ம்ம்ம்ம்


உதயகுமார்,
அதான் மாடரேஷன் வந்துருச்சே. இன்னும் என்ன வேர்டு வெரிஃபிகேஷன்?

said...

//நாங்க சாப்பிடறதை பார்த்ததுக்கு அப்புறமும் அடிக்கடி வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க..// அதயேதாங்க நானும் நினைச்சேன்.. :)

இந்த மாதிரி ப்ளாகர் மீட்'டுன்னா எப்ப வேனும்னாலும் நான் ரெடி..;)

said...

துளசி, உங்களை மாதிரி பெரியவங்க சொன்ன எடுத்திருவோம்ல... இப்போ நீங்க தாரளமா பின்னூட்டம் போடலாம்...

இளவஞ்சி, இந்த மாதிரி விட்டு போனவங்களுக்காக இன்னொரு மீட் வைக்கலாம்னு ராசா உங்ககிட்ட சொல்ல சொன்னார்....

said...

வணக்கம்,
பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தியது குறித்து பாராட்டுக்கள்.நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்.
(முன்பே தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்...)

-முகுந்த்

said...

உதய்,

வந்தது சுதர்சன்.கோபால் (http://konjamkonjam.blogspot.com ). மாத்திருங்க! தம்பி கோச்சுக்கபோறாப்புல! (வராத சுதர்சனும் இன்னேரம் கொழம்பியிருப்பாரு!! :) )

முகுந்த்.. இது சும்மா மெயில்ல ஆரம்பிச்சு இப்படி முடிஞ்சிருச்சு! அடுத்ததடவை கரெக்ட்டா ப்ளான் பண்ணிரலாம்!

துளசியக்கா... உங்க வீட்டு மெனுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை! :)

said...

ஹி ஹி ஹி... இளவஞ்சி, தப்பு நடந்து போச்சு... திருத்திட்டேன் இப்போ.

said...

//அசைவ சாப்பாடு மட்டுமே நான் சாப்பிடுவதால் // என்ன, அட்கின்சன் டயட்டா ?

said...

உதய குமார், நல்லா மீட் பண்னீங்க போங்க.. சாப்பிட்ட ஐட்டம் பேர் மட்டும் சரியா கேட்டுகிட்டு வந்திருக்கீங்க..

said...

அன்பர்களே, மே மாதம் 6-ஆம் தேதி நான் பெங்களூர் வருகிறேன். உங்களைச் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன். (ஹி ஹி.. கோழி, மீன்...)

said...

//உதய குமார், நல்லா மீட் பண்னீங்க போங்க.. சாப்பிட்ட ஐட்டம் பேர் மட்டும் சரியா கேட்டுகிட்டு வந்திருக்கீங்க.. //

பொன்ஸ், அதுக்குதானே போனது...

said...

//(முன்பே தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்...)
-முகுந்த்//

வருத்தப்படாதீங்க முகுந்த், இது நாங்க பிளாக்கர் மீட்ன்னு ஆரம்பிக்கல... கட்டாயம் அடுத்த முறை எல்லோரும் சேர்ர மாதிரி மீட் பண்ணூவோம்.

said...

//அன்பர்களே, மே மாதம் 6-ஆம் தேதி நான் பெங்களூர் வருகிறேன். உங்களைச் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன். (ஹி ஹி.. கோழி, மீன்...) //

மீனாக்ஸ், இது கல்யாணத்துக்கு அப்புறமா, இல்ல முன்னாடியா??? எதுவா இருந்தாலும் ட்ரீட் உங்களுது, சரியா???

said...

//அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் அவர் வராததால் அவர் வந்தவுடன் அவர் என்ன வாட்ச் கட்டியிருக்கிறார் என பார்க்க வேண்டும் என நினைத்து அவர் அடுத்தடுத்து பண்ணிய கூத்துகளில் இது சுத்தமாக மறந்து விட்டது.//

ஓய் ஜீரா...அப்படி என்னய்யா செஞ்சீர்????

//நாங்க சாப்பிடறதை பார்த்ததுக்கு அப்புறமும் அடிக்கடி வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க.. அவங்க ரொம்ப நல்லவங்க...//
(வளக்கம் போலவே) இத்தை நான் வளி மொளிகிறேன்.

said...

//அன்பர்களே, மே மாதம் 6-ஆம் தேதி நான் பெங்களூர் வருகிறேன். உங்களைச் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.//
அந்த சனிக்கெழம ஃபோரத்திலோ,கருடாவிலோ ஒரு மீட்டிங் போட்டுட வேண்டியது தான்.இதைப் படிக்கும் மத்த பெங்களூர் வாழ் வலைப்பதிவர்கள் உங்களோட கர்த்தை/availablity சொல்லுங்கபா.
முகுந்த் நீங்க வருவீங்கன்னு நம்புறோம்.

said...

//மீனாக்ஸ், இது கல்யாணத்துக்கு அப்புறமா, இல்ல முன்னாடியா??? எதுவா இருந்தாலும் ட்ரீட் உங்களுது, சரியா??? //

கல்யாணத்துக்கு முன்னால பத்திரிக்கை வைப்பது விசயமாகத் தான் வருகிறேன். ட்ரீட் தானே, தந்துட்டாப் போச்சு.. நாம் சந்திக்க ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய முடிந்தால் நல்லா இருக்கும்.

said...

உதயகுமார்
எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துப் போட்டிருக்கலாம் இல்லையா?

மெனு சூப்பர்!

said...

ஆகா உதய்...போட்டாச்சா....நல்லா வெலாவாரியா எழுதீருக்கீரு...ஆனா என்னோட வாட்ச்ச வாட்ச் பண்ணாம விட்டுட்டீரே......

சரி....அன்னைக்கு ஆட்டோக்காரன் அந்த ஏரியாவுக்கே வர மாட்டேன்னு சொல்லீட்டானுக. போரம்ல இருந்து நானும் சுதர்சனும் நடந்தே வந்தோம். ஊருக்குள்ள இருந்தீங்கன்னா....ஆட்டோவெல்லாம் வரும். திரும்பப் போகும் போது....நாங்க ஜீவன் பீமா நகர்னு சொன்னதுமே ஆட்டோக்காரர் ஒத்துக்கிட்டு சந்தோஷமாக் கூட்டீட்டுப் போனாரு தெரியுமா! down townல இருக்குற வசதியே தனிதான். :-)))))))

இளவஞ்சி வீட்டுச் சாப்பாடு சூப்பரோ சூப்பர். திருமதி.இளவஞ்சி அவங்களுக்கு நன்றியோ நன்றீ.

பேபி இளவஞ்சியோ இளவஞ்சியை விட தமிழ்ல நல்லா பேசுறாங்க.....

இளவஞ்சி, சுதர்சன், உதய் இவங்களை அடிக்கடி பாத்திருக்கேன். ராசாவை அன்னைக்குத்தான் பாத்தது.

said...

அடடா மீனாக்ஸ்!

வருகிற 5 to 9ம்தேதி வரை வெளியூர் பயணம்.

அதுவரை பெங்களூரில் இருப்பீர்களா?? ம்ம்ம்.. நான் இல்லையெனில் என்ன? மத்த ஆளுங்க என்ன சொல்லறாங்கன்னு கேட்டுக்கங்க!! :)

பெங்களூரு மக்கா! யார் யாரு இங்க இருக்கீங்கன்னு அட்டெண்டன்சு போடுங்க பார்க்கல்லாம்!

"இளவஞ்சி..." உள்ளேன் ஐயா...!

said...

தாணு, வழக்கம் போல, திரும்பறப்போதான் ஞாபகம் வந்தது போட்டோ எடுக்கலைன்னு... ;-)

Might be many of the people doesn't want their identity to be revealed...

said...

//போட்டோ எடுத்துப் போட்டிருக்கலாம் இல்லையா?// போட்டிருக்கலாம் தான்.. ஆனா நாங்க வீட்டுக்கு போனதும், எங்கள பார்த்து சமையல் ரூமுக்கு ஓடிப்போயி இளவஞ்சி'யோட பொண்ணு எதோ 'பூச்சா..பூச்சா'ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு.. அதான் எதுக்கு வம்புன்னு விட்டுட்டோம்..

(ஆனாலும், கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்த குழந்தை எங்கிட்ட தான் முதல்ல வந்துச்சுங்கிறத.. இந்த சபையில தன்னடக்கத்தோடு தெரிவிச்சுக்க விரும்பறேன் ;) )

said...

//(ஆனாலும், கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்த குழந்தை எங்கிட்ட தான் முதல்ல வந்துச்சுங்கிறத.. இந்த சபையில தன்னடக்கத்தோடு தெரிவிச்சுக்க விரும்பறேன் ;) ) //

ராசா, எல்லா ஊர்லயும் குழந்தைங்க முதல்ல கோமாளிக கிட்டதான் போவங்க, சரிதானே?

said...

மீனாக்ஸ்.. மே 5ம் தேதி 'வேட்டையாடு விளையாடு' ரிலீஸ்'ன்னு சொல்றாங்க.. நீங்க 6ம் தேதி வர்ரீங்க.. நேரம் இருக்குமா??

said...

//பெங்களூரு மக்கா! யார் யாரு இங்க இருக்கீங்கன்னு அட்டெண்டன்சு போடுங்க பார்க்கல்லாம்! //

"சுதர்சன்.கோபால்" -> Present saaar.

said...

//ராசா (Raasa) said...
மீனாக்ஸ்.. மே 5ம் தேதி 'வேட்டையாடு விளையாடு' ரிலீஸ்'ன்னு சொல்றாங்க.. நீங்க 6ம் தேதி வர்ரீங்க.. நேரம் இருக்குமா?? //

ராசா!! என் தெய்வமே!! மாலைக் காட்சிக்கு நான் ரெடி.. பி.வி.ஆர்.-ல நான் ஸ்பான்ஸர் பண்ணட்டுமா? யாராவது புக் பண்ணி வைக்கணுமே..

said...

ஏனுங்கண்ணா

ஒரு நாலுபேர் சேந்து டீகுடிச்சா அதை உடனே பிளாக்கர்ஸ் மீட்னு சொல்லிடறதா?இன்னும் 7, 8 பேர் சேந்திருந்தா மாநாடு நடத்தினோம்னு சொல்லிடுவீங்க போலிருக்கு.:-))))

said...

ஏனுங்கண்ணா, நேர்ல பார்த்து பேசரதை என்னனு சொல்லுவாங்க உங்கூருல... கருமமெல்லா, எனக்கு எங்கூருல பேசர மாதிரிதான் எழுத வருது, என்ன பண்ணி தொலைக்க...

சரி நீங்க என்ன சொல்லுவீங்கண்ணா உங்கூருல???

said...

//ராசா!! என் தெய்வமே!! மாலைக் காட்சிக்கு நான் ரெடி.. பி.வி.ஆர்.-ல நான் ஸ்பான்ஸர் பண்ணட்டுமா? யாராவது புக் பண்ணி வைக்கணுமே..
// ஒரு குடும்பியை ஊருக்கு அனுப்பிவிட்டு பேச்சுலர்ஸ் பசங்க தனிஃப்ளான் போடறதெல்லாம் கொஞ்சங்கூட நல்லால்ல! ஆமாம்!

செல்வன், //ஒரு நாலுபேர் சேந்து டீகுடிச்சா அதை உடனே பிளாக்கர்ஸ் மீட்னு சொல்லிடறதா// நீங்கவேற! இதுக்கு முன்னாடி இங்க ரெண்டே ரெண்டுபேர் கலந்துகொண்ட இண்டெர்நேஷனல் மீட் எல்லாம் நடந்திருக்கு!! நீங்க சொல்றாப்புல 8 பேரு வந்திருந்தா அன்னைக்கு ஊர்வலமே போயிருபோம்!!

:)

said...

சும்மா லந்துக்கு தான்னா பின்னூட்டம் போட்டேன்.ஸ்மைலி பாக்கலியா?

ரெண்டு பேரு சந்திச்சாலும் மீட் தான்.ரெண்டு லட்சம் பேர் சந்திச்சாலும் மீட்தான்.

ஆனா துளசி அக்காவும்,தருமி சாரும் இன்னொருத்தரும் மதுரைல இதே மாதிரி டீ குடிச்சப்ப "முதலாம் சர்வதேச வலைபதிவர் மாநாடு"ன்னு அடிச்சு விட்டார் பாருங்க.இன்னும் சிரிப்பு அடங்கலை.

said...

அண்ணா, நானுந்தாங்கண்ணா லொள்ளுக்கு எழுதினேன். பேசற மாதிரியே எழுதிப் பார்த்தேன், அவ்ளோதானுங்கண்ணா...

ஸ்மைலி போடதானால பொறுப்பா வந்து பதில் சொல்லறீங்க... ம்ம்ம்ம் ;-()

இப்பொ ஸ்மைலி போடுட்டேன்.

said...

//யாராவது புக் பண்ணி வைக்கணுமே..// மீனாக்ஸ்.. பண்ணிடுவோம்.. யாரு யாருப்பா கலந்துக்கிறது.. டக்கு டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்..!!

said...

ராசா, என்னை சேர்த்துக்குங்க...
சுதர்சன் ஏற்க்கனவே அட்டெண்டஸ் குடுத்துட்டார். இப்போதைக்கு 4 (ராசா + மீனாக்ஸ்) ...

சீக்கிரம் சொல்லுங்கப்பா, எனக்கும் PVR க்கும் ஏழாம் பொருத்தம். எப்பவுமே முதல் வரிசையில உக்கார்ந்து பாக்கற மாதிரியே அமையுது.

said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

said...

உதயா..எவ்ளோ சீக்கிரம் சொன்னாலும் 5ம் தேதி ரிலீஸ் இன்னும் கன்பர்ம் ஆகாத மேட்டர் தான்.. பொறுமையாவே இருப்போம் :)

said...

பார்ட்னர்,
இது ஒண்ணும் நல்லா இல்ல சொல்லிட்டேன்...அதென்ன உங்களுக்கு உதய குமார் பதிவில போய் சிரிப்பாணியா வருது..?
"ஆனா துளசி அக்காவும்,தருமி சாரும் இன்னொருத்தரும்(காக்காபிரியன்) மதுரைல இதே மாதிரி டீ குடிச்சப்ப "முதலாம் சர்வதேச வலைபதிவர் மாநாடு"ன்னு அடிச்சு விட்டார் பாருங்க.இன்னும் சிரிப்பு அடங்கலை."-

வேணும்னா நீங்களும் "பெங்களூரு மாநாடு - இளவஞ்சி முகாம்" அப்டின்னு அவுகளை போட்டுக்கச் சொல்லுங்களேன் . யாரு வேணாங்கிறா..?

said...

இதென்ன வம்பாயிருக்கு.......நாந்தான் வர்ர சனிக்கிழம சென்னைக்குப் போறேன்னு தெரியும்ல...நான் படத்துக்கு வர முடியாதே :-(((((((( சரி...நீங்கள்ளாம் சந்தோஷமா போயிட்டு வாங்க.

said...

//down townல இருக்குற வசதியே தனிதான். :-)))))))//

நச்ச்ச்ச்ச்ச்....

//சுதர்சன் ஏற்க்கனவே அட்டெண்டஸ் குடுத்துட்டார்//
நான் கொடுத்த அட்டென்டன்ஸ் பெங்களூர்ல இருக்கிற வலைப்பதிவாளர்கள் கணக்கெடுப்புக்கு.

said...

//நான் கொடுத்த அட்டென்டன்ஸ் பெங்களூர்ல இருக்கிற வலைப்பதிவாளர்கள் கணக்கெடுப்புக்கு.//

சுதர்சன், அதையேதான் நானும் சொன்னேன்...

said...

குமார், டோண்டுவுக்கு நான் இட்ட பின்னூட்டம் இது என இந்த பதிவுக்கு பின்னூட்டம் ஒன்றை பதிந்த்துள்ளீர். அதுக்கும் என் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் நான் அதை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்.

said...

இன்னும் பல வலை நண்பர்கள் பேங்களூரில் இருக்கிறார்கள். அவர்களின் சந்திப்பு கட்டுரையும் உங்களுக்காக
வெள்ளி கிழமை மனசு சரியே இல்லை.ஏன் என்ற காரணமும் புரியவில்லை. மாதம் ஒரு முறை இப்படிப்பட்ட நாள் அமைந்துவிடும். எல்லாவற்றிலும் சலிப்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட நாட்களில் ஏதாவது புத்தகத்தில் புதைந்து, உறங்கிவிடுவது வழக்கம். மறுநாள் இரண்டு இனிய சந்திப்புகள் காத்திருந்தன.

காலையில் அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது கெனடாவில் இருந்து ஒரு அழைப்பு. நம்ம விஜி அக்ஸ் தான். சில நேரம் கதைத்தோம். அட அவங்க கிட்ட சாதாரண பேச முடியல. முதல் முறை ஒரு இலங்கை தமிழ் கேட்கிறேன். அருமையாக இருந்தது. என் குரல் நன்றாக இருக்கிறதாம் எங்க அக்காவிக்கு, ஏதாவது ரேடியோவில் பேசுங்கன்னு கலாச்சிபுட்டாங்க. நான் பேசும் போதே எழுத்து பிழை செய்பவன் என்று அப்பா சொல்லுவார். மாடி வீட்டு புதுமனை புகுவிழாவில் வரவேற்புரை நான் தான். அதில் வந்தவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று "இரு காரம்" கூப்பி வரவேற்கிறேன் என்று சொன்னவன் நான்(அப்பா கரம் என்று சொன்னார், நான் தப்பா காரம் என்று எழுதி அதன்படியே படித்துவிட்டேன்). அட சத்தியமா. விஜி அக்ஸ்ஸிடம் பேசியது நாளை நன்றாக துவக்கியது.

மதியம் என் அலுவலகத்தில் பணிபுரிந்த (இப்போது வேறு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள்) சில நண்பர்களை அவர்கள் குடும்பத்தோடு சந்திக்கும் சந்திப்பில் கலந்து கொண்டேன்.பழைய நினைவுகள், நண்பர்கள்,நிகழ்வுகளை அசைப்போட்டோம். நீண்ட நேரம் பேசினோம்.

மணி 5. சித்தார்த் எப்படி Forum வருவது என்று வழி கேட்டார். அவர் நண்பருக்கும் பெங்களூர் புதுசு போல.அவர் பேசி முடிந்த்ததும் நம்ம விபாகை கூப்பிட்டார் அலைபேசியில் "கோட்டை விட்டுட்டேன் மக்கா...என் பர்ஸை எவனோ களவாண்டுவிட்டான்..". எவ்வளவு தான் ஆறுதல் சொல்வது நான். "நான் வங்கிக்கு எல்லாம் பேசிவிட்டு சீக்கிரம் வருகிறேன் என்றார்.". அதற்குள் திருமால் forum வந்துவிட்டதாக தெரிவித்தார். அந்த இடம் என் அலுவலகத்தில் இருந்து 5 நிமிட நடை தான். சுமார் 5.47க்கு அனைவரும் ஆஜர். அங்கு இருந்தது

உமாநாத் . (விழியன் வரவில்லை.)
சித்தார்த் (நடமாடும் நூலகம் குவைத்தில் இருந்து)
விபாகை (பர்ஸை தொலைத்தவர். ராஜ் எப்.எம் புகழ்)
திருமால் (முத்தமிழ் அன்பர்)
பாலாஜி (திருமால் நண்பர்)
பிரசன்னா (சித்தார்த்தின் பால்ய சினேகிதன். பிறவி கலைஞர். விரைவில் இவர் புகைப்படங்கள் சித்தாத்தின் வலைப்பூவில் காணலாம். மனிதத்தில் இவர் காட்டூன்களை பார்க்கலாம்)
தியாகு என்கிற ராஜா (என் உடன்பிறவா தம்பி. IIMB யில் MBA முடித்தவர். புத்தக வெறியர். சின்ன சித்தார்த்)
சரவணன் (என் முன்னாள் மேனேஜர். ஆத்ம சினேகிதர்)

சில அம்சங்கள் :

~சரவெடி சிரிப்பு வெடியாக இருந்தது. பிரசன்னா சித்தார்த்தின் காலை வாரிக்கொண்டே இருந்தார். செந்தில் கவுண்டர் தோற்று போவார்கள்..

~சித்தார்த்தும் விபாகையும் எப்போதும் ரகசியம் பேசிக்கொண்டிருந்தனர். சபையோரால் வன்மையாக கண்டிக்கபட்டனர். :-)

~ விபாகை எங்களுக்கு புத்தகங்கள் பரிசளித்தார்.வாழ்க ராஜ் எப்.எம்.

~ எப்.எம் ஆரம்பித்தை கதை, மற்றும் சிக்கல் பற்றி விபாமை கூறினார்.

~ ப்ர்ஸ் தொலைந்த கதையும் அரங்கேறியது..

~ பாப்பாவை பற்றி சின்ன அறிமுகம் செய்யபட்டது (விபாகை விரிவாக சொல்லுவார்). அன்று முழுதும் பாப்பா ஆனந்தத்தில்.

~ சாப்பாட்டை பற்றி ஒரு இழை ஆரம்பிக்கலாம் என்றேன். சித்தார்த் என்னை இழை ஆளுனராக நியமிப்பதாக கூறினார். திருமால் அது இழை ஆளுனர் இல்லை "இலை ஆளுனர்" என்று அறிவித்தார்.

~ சரவணன் என் காலை வாரிவிட்டார். நல்ல வேலை நான் கீழே விழவில்லை.

~ நான் 1/2 தோசை மட்டும் உண்டேன். சாமி சத்தியமா...(யாரும் போட்டு கொடுக்காதிங்கபா)

~ சித்தார்த் பேசும் போது குறிப்பிட்ட நூல்களை படிக்கவே எனக்கு ஒரு வருடம் ஆகும்.

~ தன் குவைத் வாழ்கை பற்றி கலந்துரையாடினார்.

~ இரவு 9.51 மணிக்கு நான், சித்தாத், பிரசன்னா, தியாகு "பட்டியல்" படம் பார்த்தோம் PVR அரங்கில். அதே காட்சிக்கு அந்த பட கதாநாயகி பத்து (paddu செல்லமாக நான் அழைப்பது) என்னும் பத்மப்ரியா வந்திருந்தார். என் பக்கது இருக்கையில் அமர்வார் என்ற கனவு வீணாகிபோனது. பட்டியல் பற்றி விமர்சனம் சித்தார் சித்தார்த் எழுதுவார்.

~ இரவு 1.23 மணிக்கு அறையை அடைந்தோம்.

இன்று மீண்டும் மாலை சந்திக்கிறோம்.யாரேனும் வருகிறீர்களா? அடுத்த சந்திப்பு பற்றி விரைவில் வெளிவரும். விட்டதை மற்றவர்கள் தொடர்வார்கள்
--
^^^^^^^^^^^^^^^^^^^
^^ விழியன் ^^
^^^^^^^^^^^^^^^^^^^