தவமாய் தவமிருந்து...
யாரோ ஒரு பெரிய தலை தெரு விளக்குல படிச்சு பெரிய ஆளானார்ன்னு புத்தகதுல படிச்சது. இவரு எப்படியும் பெரிய ஆளாகிடுவோம்னு லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடி தவமாய் தவமிருந்து படிச்சப்போ எடுத்த ஃபோட்டோ இது. இந்த கூத்துல இவரு பெரிய ஆளா ஆக முடியாம போனது மட்டும் இல்லாம லேடீஸ் ஹாஸ்டல் இருந்த ஓரு பொண்ணும் ஏறெடுத்து பார்க்காம இன்னும் தனியா சுத்திட்டு இருக்கிறார்.ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம்னு ட்ரை பண்ணி ரெண்டையும் கோட்டை விட்டுடார்ன்னு தோணுதா???
7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
நண்பரே! இந்த புகைப்படத்தில் இருப்பவர் நிச்சயம் உங்களுக்கு மிகவும் தொடர்புள்ளவராகவோ அல்லது தொடர்புகொண்டிருந்தவராகவோ தான் இருக்கும். அவரை இப்படி முச்சந்தியில் நிறுத்தி அவமானப்படுத்தலாமா?
வருகைக்கு நன்றி நாகு!!! இது வேற யாரும் இல்லை, நாந்தான்... ஹி ஹி ஹி... எல்லாம் என் ஆற்றாமைதான்...
அப்படி என்ன தான் படிச்சீங்க?? - அதப் பொறுத்து தான் நீங்க ஏன் ரெண்டையும் கோட்டை விட்டீங்கன்னு தெரியும் :)
பொன்ஸ், நான் வைத்திருந்தது தெர்மல் லேப் அப்ஸர்வேஷன் நோட்...ம்ம்ம்... இப்பொ சொல்லுங்க பார்ப்போம்.
//லேடீஸ் ஹாஸ்டல் இருந்த ஓரு பொண்ணும் ஏறெடுத்து பார்க்காம //
அந்த ஒரு பொண்ணுக்கு இந்த சப்ஜெக்ட் பாடமே இல்லயோ என்னவோ.. ரொம்ப படிப்ஸ்னு நெனைச்சிட்டு போயிருப்பாங்க..
ஒரு ரமணி சந்திரன் இல்ல, சிட்னி ஷெல்டன் எடுத்துட்டு போயிருந்தீங்கன்னா, இரவல் வாங்கவாவது .. ஆகா, வம்புல மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே.. இதோட நான் எஸ்கேப்
//ஒரு ரமணி சந்திரன் இல்ல, சிட்னி ஷெல்டன் எடுத்துட்டு போயிருந்தீங்கன்னா//
ஒன்னு அறிவாளிங்க படிக்கிறது, இன்னொன்னு பீட்டர் விடரவங்க படிக்கறது... இது ரெண்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாத காலம் அது... இதுபோக, இந்த மாதிரி ஐடியா எல்லாம் குடுக்க யாரும் இல்ல அப்போ.
சிட்னி ஷெல்டன் படிக்க நம்ம ராஜேஷ் குமார் நாவல் மாதிரி இருக்கும்ன்னு சில பேர் சொன்னதுக்கு அப்புறம் 5 வருஷத்துக்கு முன்னாடி படிக்க ஆரம்பிச்சேன். என் லெவெல் ஏறுன மாதிரியே எல்லோரும் இப்பொ அயன் ராண்ட், டான் பிரவுன் படிக்க ஆரம்பிசுட்டாங்க...எல்லாம் கலி முத்திப் போச்சு.
சிட்னி, ரமணி ரென்டும் ஒரே ரேஞ்சு தான்.. ராஜேஷ் குமார் வேற மாதிரி...நான் ராஜேஷ் குமார் கொஞ்சம் தான் படிச்சிருக்கேன்.. அதுனால கரெக்டா சொல்ல முடியலை..
Post a Comment