Wednesday, March 15, 2006

காதல் கவிதைகள்

எனக்கு கவிதையெல்லாம் எழுத வராது. அதிலும் குறிப்பாக காதல் கவிதைகள். உருகி உருகி இந்த மாதிரி கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் வரும். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதா வாங்கி வந்தேன் என நான்காம் வகுப்பு படிக்கும் போது என் அத்தை மகளைப் பார்த்து பாடி முதுகில் அடி வாங்கிய பிறகு எனக்கும் கவிதாவுக்கும் (கவிதையும் தான்) எந்த சம்பந்தமும் இல்லாமல் போனது.

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னது என்னை உண்மையிலேயே சிந்திக்க வைத்தது. கவிதை எல்லாமே அனுபவத்தில் எழுதுவதில்லை. சில நேரங்களில் அது நடக்காதா என்ற ஏக்கம் கூட கவிதையாக மாறும். பொய்தான் கவிதை என்றார். அவர் எழுதிய இரு கவிதைகள் இங்கே:
1:
காதலே சற்றே உறங்கு!!
அன்பு தந்து அமுதூட்டிய அன்னையை மறந்தேன்

பண்பு தந்து பண்பூட்டிய தந்தையை மறந்தேன்
சிறு பொட்டிற்கும் சண்டையிட்டு விட்டுக் கொடுத்த தங்கையை மறந்தேன்
கடைத்தெருவில் பார்த்ததெல்லாம் வாங்கித்தந்த தாத்தாவை மறந்தேன்
எல்லாம் நீ வந்ததால்!!!......
கண்ணனாகிய மன்னன் ஒருவனை மணம்முடித்து வைப்பார்கள்
அது வரை காதலே சற்றே உறங்கு........
உன்னை என் புத்தகத்தினில் தாலாட்டுகிறேன்
அது வரை காதலே சற்றே உறங்கு........
2:
உன் கண்ணில் நான் என் கண்ணில் நீ
எனினும் தயங்குகிறோம்......
நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!!
உன் மனதில் நான் என் மனதில் நீ
எனினும் தயங்குகிறோம்......
நம் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள!!!
நம் கண்களால் ஆயிரம் பேசிக்கொள்கிறோம்.....
காதல் பரிமாற்றம் தவிர!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆனால் என்ன காரணத்தாலோ 2 கவிதைகளுக்கும் அவர் தலைப்பு வைக்க மறந்து விட்டார். அப்புறம் வார்த்தைகளுக்கு நடுவில் அந்த புள்ளிகள். அவர் நிறைய சிந்திப்பதாக அர்த்தமா?

8 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

Anonymous said...

சில நேரங்களில் அது நடக்காதா என்ற ஏக்கம் கூட கவிதையாக மாறும். nu sollerukenga......

y, nenga ippade thing pannala. sila nerangalil ithu nadantha eppade irrukumnu nenaikere karpanai thaan kavithainu.

Anonymous said...

//அப்புறம் வார்த்தைகளுக்கு நடுவில் அந்த புள்ளிகள். அவர் நிறைய சிந்திப்பதாக அர்த்தமா?//

ஆச்சர்ய குறிகூட இருக்கு. பயங்கர சந்தோசத்தில் இருந்திருப்பாங்களோ?

Udhayakumar said...

அனானிமஸ் 1, கற்பனைகூட ஏக்கம் தானே? இல்லையா?

அனானிமஸ் 2, நான் கவிதை எழுதினவங்களேயே கேட்டு சொல்லறேன்.

ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி!!!

Anonymous said...

Anonymous 1: ஏக்கம் veru கற்பனை veru nanba....
athu nadakathanu nenaikarathu ஏக்கம்.
ippade nadanthalnu nenaikarathu கற்பனை.

Anonymous said...

நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!!
& நம் என்னங்களை பரிமாறிக்கொள்ள!!!தயங்குகிறோம் nu sollerukanga +
காதல் பரிமாற்றம் தவிர!!!!!!!!!!!!!!!!!!!!!!! nu sollerukanga athula eppade santhosam irrukumnu nenaikerenga.

Ellamee pesurom,share panrom Anna mukeyamanatha (Kadhalai sollama) thaveranu ஆச்சர்ய குறி poderukalam.

Then எல்லாம் நீ வந்ததால்!!! Inga kadhal vanthathal elloraiyum மறந்தேன் nu ஆச்சர்ய குறி poderukalam.

Udhayakumar said...

தயவு செய்து கடைசியில் பேர போடுங்கப்பா!!! 1,2,3,4 ந்னு அனானிமஸ் கமெண்ட்டா இருக்கு...

அனானிமஸ் 1, ஏக்கத்துக்கும் கற்பனைக்கும் நல்லா வித்தியாசம் சொன்னீங்க!!! உஙககிட்ட எது நிறைய இருக்கு, ஏக்கமா, கற்பனையா?

அனானிமஸ் 3 (இல்லை 2??),

//நம் மனதினை பரிமாறிக்கொள்ள!!! & நம் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள!!!// நான் இதுதான் காதல்ன்னு நினைச்சேன், ஐ லவ் யூ ந்னு சொன்னால்தான் காதல்ங்கிறது கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கு. யாராவது லவ்விட்டு இருக்கறவங்க இது பத்தி சொன்னா நல்லா இருக்கும்...

Quester said...

நான் காதலிக்க ஒரு காதலி வேண்டாம்;
என் காதலுக்கு ஒரு காதலி வேண்டும்.

- எங்கோ, எப்பொழுதோ, படித்த ஞாபகம்.

Udhayakumar said...

ஆண் மட்டும் போதாது காதலுக்கு;பெண் மட்டும் போதாது காதலுக்கு;
அருவி வேண்டும், வானம் வேண்டும், மேகம் வேண்டும், கனவு வேண்டும்
கவிதையும் வேண்டும்
--பழனிபாரதியின் கவிதை தொகுப்பிலிருந்து