Monday, March 06, 2006

என்னவெல்லாம் செய்யலாம்?

நான் யாரையும் இதை செய்ய வற்புறுத்தவில்லை. ஆனால் முயன்று பாருங்களேன். உலகத்தில் அடிப்படை தேவையான அனைத்தும் எனக்கு கிடைப்பதால் ஏன் அதில் ஒரு சிறு பகுதியை தேவையானவர்களுக்கு கிடைக்கும்படி செய்யக்கூடாது என்று சில நாட்களாக நான் செய்து வந்தாலும் இப்பொழுதுதான் அதை மற்றவர்களும் செய்தால் நிறைய பேர் பயனடைவார்கள் என எனக்கு தோன்றியது. நான் வருமான வரி கட்டுகிறேன், அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அப்படி நினைப்பவர்கள் இது ஒரு காத்துவாயன் கவிதையென மறந்து விடுங்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியில் சென்று என்னவெல்லாம் தேவையோ அதை முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொடுக்கலாம். நீங்கள் அரசு பள்ளியில் படித்திருந்தால் உங்களுக்கே தெரியும் அதன் தேவைகள் என்ன என்று. மேப், டெஸ்க், விளையாட்டுக் கருவிகள் என எத்தனையோ.

ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என கேட்பார்கள். அவர்களுக்கு தினசரி சாப்பாடு கிடைக்கிறதா என்பதே முக்கியம். பெரியவர்களுக்கு அதனால் ஒரு தீங்கும் நேராது என்றாலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கலாம்.

பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் இப்பொழுதெல்லாம் காசு கேட்பதில்லை. மாறாக உங்கள் நேரத்தைத்தான் கேட்கிறார்கள். வார இறுதியில் அங்கே சென்று குழந்தைகளுக்கு பாடம் சொல்வது, விளையாடுவது என உங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாக களிக்கலாம்.

உங்களை நான் ஒன்றும் தியாகி ஆகுங்கள் என்று சொல்லவில்லை. உங்களுடைய ஆடம்பர செலவில் ஒரு பகுதியை குறைத்தால் இதை தாரளமாக செய்யலாம். அப்புறம் நீங்கள் இதை செய்வதாக இருந்தால் கூட்டத்துடன் சேர்ந்து கும்மி அடிக்காதீர்கள். இதை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.தனியாக, ஏதாவது சின்னதாக செய்து பாருங்கள். மன நிறைவு ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

9 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

Anonymous said...

Your suggestion is extremely good. Last week I gave a booklet of model question paper for 10thstudents costing Rs. 6/.only. It was well received by the students of Karanodai village school, as they never knew that it existed . so large funds are not always necessary for helping others.

யாத்ரீகன் said...

இப்போ இருக்கும் இளைஞர்கள் பலர் இது போன்ற செயல்களில் ஆர்வமாயிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது, இவை வளர்ந்து வரும் குழந்தைகள் கவனத்தையும் கவர்ந்தால் நீண்ட கால பயன் அளிக்கும்.... வாழ்த்துக்கள் உதயா..

Maayaa said...

first time here..
arumaiyaa sonneenga!!! its a wonderful post..
as u said it will be gr8 if we spend time with those people!

Udhayakumar said...

Natesan, It was a very good thing that you did. Continue this!!!

Yathreegan, all the young guys are ready to do this by paying money but not as a volunteer. Hence I am suggesting some NGO names for them.

Udhayakumar said...

பிரியா, ரொம்ப நன்றி!!! அமெரிக்க வாழ் மக்களுக்கு நான் தனியா ஒரு கோரிக்கை வைக்க போறேன். அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Anonymous said...

Machi, nice thought da. proud to knw that you are not stoping just there.

best wishes.

i wud try to spread the word around.

-- muthuganesh

Anonymous said...

//அமெரிக்க வாழ் மக்களுக்கு நான் தனியா ஒரு கோரிக்கை வைக்க போறேன். அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
//

என்னன்னு சொல்லுங்க சீக்கிரம்

அன்புடன்
கீதா

நாமக்கல் சிபி said...

நல்ல விஷயம்... மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நல்லா சவுண்ட் விட்ருக்கீங்க..

இந்த உள்ளம் அனைத்து இளைஞர்களுக்கும் வரவேண்டும்.