ஓற்றை முடி
என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.
கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...
-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!
15 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
//கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?//
அய்யோ பாவம் :(
ஹி ஹி ஹி.. நொந்த அனுபவமா? நல்லா இருக்கு
Nice one Udhay!!
EEEEEEEEEEEEEEEEEEE
யாருப்பா அங்க...
தம்பிக்கு சட்டு புட்டுன்னு ஒரு பொண்ணப் பாருங்கப்பா...
தொண தொணன்னு சிக்னல் காட்டிக்கிட்டு...
udhay dun worry. athukku thaan color naturals irukke :D ammu
//அய்யோ பாவம் :( //
அனு, இதே வேலையா போச்சு உங்களுக்கு. பையன் எப்படி மாட்டுவான், நாம எப்படி ஓட்டலாம்ன்னு...
//ஹி ஹி ஹி.. நொந்த அனுபவமா? நல்லா இருக்கு//
அகிலா, நீங்க எல்லாம் காதல் கதை எழுதறீங்க... ஏதோ எங்க ரேஞ்சுக்கு எழுய்தறோம். அட்ஜஸ்ட் மாடி...
//Nice one Udhay!!//
ரொம்ப நன்றிங்க! நீங்கதான் கவிதையை அட்டும் பார்த்துருக்கீங்க...
//EEEEEEEEEEEEEEEEEEE //
தல, இத்தனை ஈ க்கு என்ன அர்த்தம்?
//யாருப்பா அங்க...
தம்பிக்கு சட்டு புட்டுன்னு ஒரு பொண்ணப் பாருங்கப்பா...
தொண தொணன்னு சிக்னல் காட்டிக்கிட்டு... //
ஜீ, என்மேல தான் எவ்வளவு அக்கறை?
/udhay dun worry. athukku thaan color naturals irukke//
அம்மு, அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். ஆனா, பொண்ணு பார்க்க போறப்போ மட்டும் லைட்டா, அவ்வளவுதான்.
கவலைப்படாதீங்க. முதல் மரியாதை ராதா மாதிரி அந்த வெள்ளிக்கம்பி மேல ஆசை வைக்க ஒருத்தி வராமலா போயிடுவா? :-D
//கவலைப்படாதீங்க. முதல் மரியாதை ராதா மாதிரி அந்த வெள்ளிக்கம்பி மேல ஆசை வைக்க ஒருத்தி வராமலா போயிடுவா? :-D //
ரொம்ப நன்றி, சேதுக்கரசி!!! முடிவே மண்ணிட்டீங்க எனக்கு வயசாகிடுச்சுன்னு :(
வெள்ளையாவாது முடி இருக்கேன்னு சந்தோசப்பட்டுக்குங்க...
அவனவன் மண்டையில கிரவுண்ட வச்சிக்கிட்டே தைரியமா பொண்ணுத் தேடிக்கிட்டு இருக்காங்க :)))
Post a Comment