Thursday, November 23, 2006

வருத்தப்படாத வாலிபர்கள்

சம்பவம் 1:

வாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.
வாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???
வாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...
வாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?
வாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...
வாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???
வாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...
வாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...
வாலிபன் 1: !#$%^&*()

சம்பவம் 2:

முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.

வாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.
வாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.
பெண்: ஓ, அப்படியா???
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
பெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...

கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.

22 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

ஆகா சொ(நொ)ந்த அனுபவம் பேசுதா?

//அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???//

அது எப்டீங்க உங்கள நீங்களே பெருமை படுத்திக்கிறீங்க. கிரேட் :)

//MBBS ன்னா??? நர்ஸா???//

:))))))))))))))

said...

கலக்கல் காமெடி! :))

said...

சரி...
உண்மைய நான் வெளிய கொண்டு வர வேணாமேனு பார்த்தேன்... நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டீங்க...

இதுக்கு மேல என்னத்த சொல்ல :-)

said...

:)))

said...

சங்கத்துல என்னையும் சேர்ப்பீங்களா?

said...

அண்ணாதே வாங்க வாங்க மெக்கானிகல் இஞ்ஜினியராங்கணா நீங்களும் ? குலப்பெருமைய இப்படி வெளியிலே சொன்னா எப்படீங்க ?? :)))))

said...

:)))

கலக்கல் உதய்!

said...

super comedy udhay! [ Congrats on your engagement]

said...

ஹி... ஹி.... பர்ஸ்ட் டைம்லயே எதுவும் வொர்க் அவுட் ஆவாது நைனா.. சும்மாவா சொன்னாங்கோ பெரியவங்கோ.. செந்தமியும் நாப்பயக்கம், சித்ரமும் கைப்பயக்கம்னு... அதே மாறி கடலயும் போட போடதான் பயகும்....

said...

//
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
//

என்ன கொடுமை உதய் இது :-)

said...

//super comedy udhay! [ Congrats on your engagement] //

அய்யோ திவ்யா, கல்யாணம் எனக்கு இல்லை.

said...

//ஆகா சொ(நொ)ந்த அனுபவம் பேசுதா?

//அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???//

அது எப்டீங்க உங்கள நீங்களே பெருமை படுத்திக்கிறீங்க. கிரேட் :)

//MBBS ன்னா??? நர்ஸா???//

:)))))))))))))) //

ஏங்க, இந்த பிளாக்ல எது எழுதுனாலும் அது என் சொந்த அனுபவமாத்தான் இருக்கணுமா???

said...

//அது எப்டீங்க உங்கள நீங்களே பெருமை படுத்திக்கிறீங்க. கிரேட் :)//

அனு, தூக்கம் இல்லாத நிலையில் துக்கமான காதல் கவிதைகளால் உங்களை கொன்றது போதும் என நான் பார்த்த நல்ல காமெடியை பகிர்ந்து கொண்டால் அதுலையும் நடுவுல என்னைய வைச்சு பார்க்கிறீங்க... என்ன கொடுமை இது..

said...

//சரி...
உண்மைய நான் வெளிய கொண்டு வர வேணாமேனு பார்த்தேன்... நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டீங்க...

இதுக்கு மேல என்னத்த சொல்ல :-) //

வெட்டி, எல்லோருக்கும் உண்மைய சொல்லுங்க... இதுல வர்ற வாலிபன் நானில்லைன்னு :-)

said...

//சங்கத்துல என்னையும் சேர்ப்பீங்களா? //

கார்மேக ராஜா, சங்கத்துல நானெல்லாம் உறுப்பினர் இல்லைங்க, இங்க தேவ், வெட்டிப்பயல் கிட்ட கேளுங்க....

said...

தம்பி, வருகைக்கு நன்றி! சிரிப்பானைப் பார்த்தா அனுபவம் மாதிரி தெரியுது, உண்மையாவா????

said...

//அண்ணாதே வாங்க வாங்க மெக்கானிகல் இஞ்ஜினியராங்கணா நீங்களும் ? குலப்பெருமைய இப்படி வெளியிலே சொன்னா எப்படீங்க ?? :))))) //

ICU எல்லாம் எப்படி இருந்தது? உண்மையத்தானே சொல்லிருக்கேன்... இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் ஜொள்ளுப்பாண்டிக்கு கடலை போடத் தெரியாது. அவர் ரொம்ப நல்லவர், வல்லவர்....

said...

:-)))))))))))))))))))))))

வருத்தப்படாதீங்க உதய். வருத்தப்படாதீங்க.

said...

நீங்களும் பக்கத்திலதான் இருக்கீங்களா?
அட. நம்மோட இன்னும் சில தமிழ்ப் பதிவர்களும் அவஸ்தைப் படுகிறார்கள் என்று கேட்க ஆனந்தம்.
வ.வா.சங்கத்து மெம்பர் எப்படி வருத்தப் படப் போயிற்று?
திருமணத்துக்கு அப்புறம் சேர்த்து
வருத்தப் படலாம்.:-))
யாருக்குக் கல்யாணம்?

said...

//நீங்களும் பக்கத்திலதான் இருக்கீங்களா?
அட. நம்மோட இன்னும் சில தமிழ்ப் பதிவர்களும் அவஸ்தைப் படுகிறார்கள் என்று கேட்க ஆனந்தம்.
வ.வா.சங்கத்து மெம்பர் எப்படி வருத்தப் படப் போயிற்று?
திருமணத்துக்கு அப்புறம் சேர்த்து
வருத்தப் படலாம்.:-))
யாருக்குக் கல்யாணம்? //

ஆமாங்க, உங்க அரோரா பதிவப் பார்த்தேன், பதிலிட நேரமில்லை... நான் வருத்தப்படாத வாலிபன் தான்... வருத்தப்பட்டது வேற ஆளு.

said...

என்ன சாரே!

அட்லஸ் அனோன்ஸ் பண்ணி ஒரு வாரம் ஆகுது, என்ன இன்னும் ஒன்னுதான் போட்டிருக்கீங்க!...

என்ன சவுண்ட் பார்ட்டி, கரண்ட் கட் ஆயிடிச்சா?

said...

:))))))))))))))
ROTFL =?? அப்டின்னா இன்னா அண்ணாத்தே?? எல்லாம் சிரிக்க சொல்லோ இப்டி எயிதிகிராங்கோ. அதனால நானும் எயிதிகீறேன். அப்பாலிக்கா நீ அதுக்கு வெளக்கம் சொல்றியா?