Tuesday, November 14, 2006

தூக்கம் தொலைக்கும் இரவுகள்

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்??

40 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//நானெப்படி உறங்குவேன்??//
நல்ல கவிதை உதய். அப்போ தூங்காம எப்படு அவுங்களை கனவுல பார்க்கிறதாம்?

said...

நல்லா சவுண்ட் விட்டிருக்கிறீங்க உதயகுமார்.

தொலைந்த தூக்கத்தை
தேடித்தா
திருப்பித்தா

உன் நினைவுகளில்
உழண்டு கிடக்கையில்
இரவு முழுதும்
இதே ஜெபம்

உன் உறக்கத்தையும்
பந்தாடிவிட்டதா
உறக்கமில்லா எனதிரவு

said...

//நானெப்படி உறங்குவேன்//
rendu peg ethittu kuppure padutha thaana idellam marandurum da ;)

kavithai super da...

said...

உதய்

இப்பதான் தெரியுது ஏன் சிகாகோ அழைத்தால் வராமல் இருக்கீங்கன்னு..

சரி சரி என் ஜாய் பன்னுங்க..

கவிதை நல்லாயிருக்குங்க..

said...

உதய்

இப்பதான் தெரியுது ஏன் சிகாகோ அழைத்தால் வராமல் இருக்கீங்கன்னு..

சரி சரி என் ஜாய் பன்னுங்க..

கவிதை நல்லாயிருக்குங்க..

said...

ஹிம்... அப்ப தூங்கறதே இல்லையா?

said...

உதய், உங்க பாட்டுல ஒரேயொரு வரி மட்டும் நான் கூடச் சேத்துக்கிறேன். சரியா?

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்
நீயில்லாமல்??? :-)

said...

உறங்காதவர் ஒருவர் மட்டுமா...

said...

கவிதை நல்லா இருக்குதுங்க உதய்,

இதெல்லாம் நீங்க office ல தூங்கிறப்போ வருகிற disturbance ஆ, இல்லை இரவா???

said...

நல்ல கவிதை உதய். அது கூட நம்ம ஜிரா ஒரு வரி சேர்த்து ரொம்ப அழகாகிட்டாரு.

said...

//நல்ல கவிதை உதய். அப்போ தூங்காம எப்படு அவுங்களை கனவுல பார்க்கிறதாம்? //

இளா, எப்பவுமே கூட இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்...தூங்கறப்போவாவது சும்மா விடலாம்ல???

said...

//தொலைந்த தூக்கத்தை
தேடித்தா
திருப்பித்தா

உன் நினைவுகளில்
உழண்டு கிடக்கையில்
இரவு முழுதும்
இதே ஜெபம்

உன் உறக்கத்தையும்
பந்தாடிவிட்டதா
உறக்கமில்லா எனதிரவு //

மதுமிதா, யாருங்க சவுண்ட் விடறது? என் பக்கத்துக்கு வந்துட்டு எனக்கே கவிதை வடிச்சு குடுத்துட்டு போறீங்க... சவுண்ட் விடறது நீங்களா, நானா?

அப்படியே என் ராட்சசி சொல்ல வந்ததை சொல்லீட்டிங்கன்னு நினைக்கறேன்.

said...

//rendu peg ethittu kuppure padutha thaana idellam marandurum da ;)

kavithai super da... //

அருண், வீக் டேஸ்ல சுத்த பத்தமா இருக்கணும் :)

வருகைக்கு நன்றி!!!

said...

//இப்பதான் தெரியுது ஏன் சிகாகோ அழைத்தால் வராமல் இருக்கீங்கன்னு..//

சிவா, இந்த மாதிரி நைட் தூக்கம் வரமா காரெடுத்தோம் அப்புறம் சங்குதான்..

Thanksgiving Daykku எங்காவது போறீங்களா, அப்போ பார்க்கலாமா???

said...

//ஹிம்... அப்ப தூங்கறதே இல்லையா? //

இல்லை, நேத்துதான் முதல் தடவை :)
வார்த்தையை மடிச்சு மடிச்சு எழுதிருக்கேன், ஒண்ணுமே (ஃபிலிங்ஸ்) ஆகலையா உங்களுக்கு???

said...

//உதய், உங்க பாட்டுல ஒரேயொரு வரி மட்டும் நான் கூடச் சேத்துக்கிறேன். சரியா?//

தலை இருக்குறப்போ வால் ஆடக்கூடாதுன்னு சொன்னா எங்களுக்கெல்லாம் புரியறதே இல்லை...

அப்பன் முருகன் அருளால் வந்த கவிதை மாதிரி தெரியலையே... ஜிரா, என்ன நடக்குது???

said...

//உறங்காதவர் ஒருவர் மட்டுமா... //

சாத்வீகன், வருகைக்கும் கேள்விக்கும் நன்றி... நான் தூங்கலைங்கறது சத்தியமான உண்மை... மத்ததெல்லாம் எனக்கு தெரியாது...

said...

//நல்ல கவிதை உதய். அது கூட நம்ம ஜிரா ஒரு வரி சேர்த்து ரொம்ப அழகாகிட்டாரு. //

முதல்ல கமெண்ட் அடிச்சது நீங்கதான், ஆனாலும் கடைசியா வந்திருக்கு... நன்றிங்க...

said...

//இதெல்லாம் நீங்க office ல தூங்கிறப்போ வருகிற disturbance ஆ, இல்லை இரவா???//

ஆபீஸ் தூங்ககறப்போ C++ கோட்தான் கண்ணு முன்னாடி ஓடுது :)

வருகைக்கு நன்றி திவ்யா...

said...

//
இல்லை, நேத்துதான் முதல் தடவை :)
வார்த்தையை மடிச்சு மடிச்சு எழுதிருக்கேன், ஒண்ணுமே (ஃபிலிங்ஸ்) ஆகலையா உங்களுக்கு???//

நேத்துதான் முதல் தடவையா???

ஆஹா... அப்ப வாழைமரம், பந்தல், சத்திரம் எல்லாத்துக்கும் ரெடி பண்ணிடலாமா?

said...

//நேத்துதான் முதல் தடவையா???

ஆஹா... அப்ப வாழைமரம், பந்தல், சத்திரம் எல்லாத்துக்கும் ரெடி பண்ணிடலாமா? //

வெட்டி, என் பிரச்சினை தூக்கம்.. ஜிரா வோட பிரச்சினைய முதல்ல பாருங்க...

சிக்குன்குனியா காரங்களை முதல்ல கவனிங்க... நான் காய்ச்சல் காரந்தான் ... மெதுவா பார்த்துக்கலாம்.

said...

விசிறி தலையணை தாலாட்டு போர்வை!
ம்ம்..உறக்கத்துக்குத் தேவையான எல்லாம் கிடைத்தும் தூக்கம் வர்லேன்னுமட்டும் நீங்க சொன்னீங்க..ஜிரா உண்மையை சொன்னார். யார்மனசுல யாரு?:)
அழகிய கவிதை உதய்!
ஷைலஜா

said...

//விசிறி தலையணை தாலாட்டு போர்வை!
ம்ம்..உறக்கத்துக்குத் தேவையான எல்லாம் கிடைத்தும் தூக்கம் வர்லேன்னுமட்டும் நீங்க சொன்னீங்க..ஜிரா உண்மையை சொன்னார். யார்மனசுல யாரு?:)
அழகிய கவிதை உதய்!
ஷைலஜா //

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க சைலஜா!!! நான் வெறும் புள்ளிதான் வைச்சேன். மதுமிதாவும், ஜிராவும் கோலமே போட்டுட்டாங்க... வராதவங்க எல்லாம் வர்றிங்க, ரொம்ப நன்றிங்க...

said...

// அனுசுயா said...
நல்ல கவிதை உதய். அது கூட நம்ம ஜிரா ஒரு வரி சேர்த்து ரொம்ப அழகாகிட்டாரு. //

ஹி ஹி டேங்க்ஸு அனுசுயா

// Udhayakumar said...
தலை இருக்குறப்போ வால் ஆடக்கூடாதுன்னு சொன்னா எங்களுக்கெல்லாம் புரியறதே இல்லை... //

இதுல யாரு தலை? யாரு வாலு? தலையிருக்க வாலாடி யாரு?

// அப்பன் முருகன் அருளால் வந்த கவிதை மாதிரி தெரியலையே... ஜிரா, என்ன நடக்குது??? //

முருகா....முருகன் அருளாலதான் இதுவும் வந்தது உதய். அனேகமா அவர் வள்ளியோட பிக்னிக் போயிருந்த பொழுது அருளீருப்பாருன்னு நெனைக்கிறேன். :-)

// வெட்டி, என் பிரச்சினை தூக்கம்.. ஜிரா வோட பிரச்சினைய முதல்ல பாருங்க...//

உதய், அது உம்ம பிரச்சனை. உம்ம பிரச்சனையை விளக்கமா எடுத்துக் குடுத்தேன். "பல்லு இருக்குறவன் எப்பவும் பட்டாணி திங்கலாம்னு" நம்மளப் பத்தி இளவஞ்சியானந்தா சொல்லும் போது நீங்களுந்தான கூட இருந்தீங்க.

// ஷைலஜா said...
விசிறி தலையணை தாலாட்டு போர்வை!
ம்ம்..உறக்கத்துக்குத் தேவையான எல்லாம் கிடைத்தும் தூக்கம் வர்லேன்னுமட்டும் நீங்க சொன்னீங்க..ஜிரா உண்மையை சொன்னார். யார்மனசுல யாரு?:) //

ஆகா நீங்களும் கெளம்பீட்டீங்களா ஷைலஜா. யார் மனசுல யாருன்னு கேக்கக் கூடாது. யார் மனசுல யாராருன்னு கேக்கனும். :-)

said...

machhi,
entha ponna nenaichi ezuthinathu
intha kavithai..!!!
Next time..be specific

said...

// நான் வெறும் புள்ளிதான் வைச்சேன். மதுமிதாவும், ஜிராவும் கோலமே போட்டுட்டாங்க... வராதவங்க எல்லாம் வர்றிங்க, ரொம்ப நன்றிங்க//

வலைப்பக்கமெல்லாம் வராத கூண்டுக்கிளியா இருந்தது இப்போ கிளிக்கு ரக்கை முளைச்சிடுத்து!இனிமே அடிக்கடி இங்க பறந்து வரும்!!
ஜீராவும் மதுவும் போட்ட கோலத்தை நானும் கோஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணட்டுமா?!!(ரொம்பதேவைங்கறீங்கலா?:))

நானெப்படி உறங்வேன்
நீ இல்லாமல்?
உறக்கம்தான் வருமா
நீ வந்துவிட்டாலும்?

said...

//வெட்டி, என் பிரச்சினை தூக்கம்.. ஜிரா வோட பிரச்சினைய முதல்ல பாருங்க...

சிக்குன்குனியா காரங்களை முதல்ல கவனிங்க... நான் காய்ச்சல் காரந்தான் ... மெதுவா பார்த்துக்கலாம்.//

தலைவா,
அப்ப இந்தியாவுக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடலாமா??? ;)

எங்க மருத மலையா? இல்லை திருச்செந்தூரா?

said...

உதயகுமார் யாருங்க அந்த அழகான ராட்சசி. நல்லா இருக்கட்டும்.

எந்த நேரம் பார்த்து ஆரம்பிச்சீங்களோ
தெரியல

ம் தொடருது.
http://madhumithaa.blogspot.com/2006/11/blog-post_15.html

said...

//இதுல யாரு தலை? யாரு வாலு? தலையிருக்க வாலாடி யாரு?//

ஜிரா, ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாதுங்க...

//"பல்லு இருக்குறவன் எப்பவும் பட்டாணி திங்கலாம்னு" நம்மளப் பத்தி இளவஞ்சியானந்தா சொல்லும் போது நீங்களுந்தான கூட இருந்தீங்க.//

ஆமாங்க, வாத்தி எப்போ ரிட்டர்ன்... மெயிலும் இல்ல ஒன்னும் இல்லை. என்ன ஆனாருன்னு கூட தெரியலை.

said...

//machhi,
entha ponna nenaichi ezuthinathu
intha kavithai..!!!
Next time..be specific //

வாடா, அப்படியே ஒரு மைக் செட், இல்லைன்னா மக்கள் எல்லொருத்துக்கும் இந்த கவிதை லிங்க் குடுத்து என் மானத்தை மொத்தமா கப்பலேத்த வேண்டியதுதானே???

எல்லோரும் என்னைய நல்லவன்னு நம்பி ஃபிலிங்ஸ் ஆகி கவிதை, அதுக்கொரு கவிதைன்னு சொல்லிட்டு இருக்கறப்போ....

அது சரி, உன்னால கண்டுபிடிக்க முடியலையாடா???

said...

//நானெப்படி உறங்வேன்
நீ இல்லாமல்?
உறக்கம்தான் வருமா
நீ வந்துவிட்டாலும்? //

ஷைலஜா, என்னவோ முடிவோடதான் எல்லோரும் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கற கவியை நெட்டித் தள்ளிருக்கேன்னு நினைக்கிறப்போவே சந்தோஷமா இருக்கு....

said...

//தலைவா,
அப்ப இந்தியாவுக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடலாமா??? ;)

எங்க மருத மலையா? இல்லை திருச்செந்தூரா? //

வெட்டி, எதுக்கு மொட்டை அடிக்கவா???

said...

ஆஹா கோழி கதையெல்லாம் போய் "கவிதை-கோயில்" ரேஞ்சு போயிருக்கே இந்த பதிவு! :) ...
பார்ட்டிக்கு தெரியுமா கவிதையப் பத்தி இன்னும்?! :)

said...

வணக்கம் தலைவா..உங்கள பத்தி தெரிஞ்சுகிட்டதுல மிக்க மகிழ்ச்சி..நல்ல கவிதை நல்ல நண்பர்..உங்கள் பக்கதுக்கு என் பக்கத்தில் இருந்து உங்க அனுமதியோட லின்க் கொடுக்குறேன். நன்றி

said...

//வெட்டி, எதுக்கு மொட்டை அடிக்கவா???//

தலைவருக்கு எப்படியும் இந்த இரண்டு இடத்திலதான (இன்னும் 5 வீடு இருக்கு) மொட்டையடிப்பாங்க ;)

அதனாலத்தான்...

said...

// Udhayakumar said...
//"பல்லு இருக்குறவன் எப்பவும் பட்டாணி திங்கலாம்னு" நம்மளப் பத்தி இளவஞ்சியானந்தா சொல்லும் போது நீங்களுந்தான கூட இருந்தீங்க.//

ஆமாங்க, வாத்தி எப்போ ரிட்டர்ன்... மெயிலும் இல்ல ஒன்னும் இல்லை. என்ன ஆனாருன்னு கூட தெரியலை. // //

வாத்தி நல்லாயிருக்காரு. இன்னைக்கு ஆபீஸ் சாட்டுல பிடிச்சேன். ரொம்ப வேலையாம்.

என்ன..எப்ப வர்ராரா? என்னவோ அமெரிக்கா போனவங்கள்ளாம் வந்துட்ட மாதிரியும்....ஐரோப்பா போனவங்க மட்டும் சீக்கிரமே திரும்பீர்ர மாதிரியும்.....

said...

//என்னவோ அமெரிக்கா போனவங்கள்ளாம் வந்துட்ட மாதிரியும்....ஐரோப்பா போனவங்க மட்டும் சீக்கிரமே திரும்பீர்ர மாதிரியும்.....//

:-)

said...

//என்னவோ அமெரிக்கா போனவங்கள்ளாம் வந்துட்ட மாதிரியும்....ஐரோப்பா போனவங்க மட்டும் சீக்கிரமே திரும்பீர்ர மாதிரியும்.....
//

ஜிரா, 3 மாசத்துல வந்துடுவேன்னு சொன்னது சரிதான், அதுக்காக இப்படி சபையில...

said...

////என்னவோ அமெரிக்கா போனவங்கள்ளாம் வந்துட்ட மாதிரியும்....ஐரோப்பா போனவங்க மட்டும் சீக்கிரமே திரும்பீர்ர மாதிரியும்.....//

:-) //

சார், பிசியோன்னு நினைச்சேன். ராக்கோழி மாதிரி 12 மணிக்கு வந்துட்டு போறீங்க...

said...

//தலைவருக்கு எப்படியும் இந்த இரண்டு இடத்திலதான (இன்னும் 5 வீடு இருக்கு) மொட்டையடிப்பாங்க ;)//

தலைக்குதானே, எங்க வேணா அடிக்கலாம்...