Thursday, June 22, 2006

செய்வன திருந்த செய்

செய்வன திருந்த செய், இது பெரியவங்க நெறைய தடவை சொல்லி இருந்தாலும் பட்டாத்தான் புத்தி வருது. பீமா படத்தோட ஃபோட்டோ என் மெயில் பாக்ஸில் பார்த்தவுடனே திரிஷாவுக்கு என் ஜொள் தீபாராதனையை முடித்துவிட்டு யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ந்னு எனக்குன்னு இருக்குற கும்பலுக்கு பார்வார்ட் செய்தேன்.

எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம் உண்டு. இந்த மாதிரி மெயில் பண்ணும் போது BCC போட்டுத்தான் அனுப்புவேன், அதே சமயம் எங்கிருந்து எனக்கு வந்தது என்பதையும் அழித்து விடுவேன். ஆனால் சுப்ஜெக்ட் லைனில் FW என்பதை வைத்திருப்பேன். இது அனைவருடைய பிரைவசிக்கும் பாதுகாப்பு என்பதால்தான்.

இன்னைக்கு இதை பண்ணும் பொழுது கடைசியா இருந்த "WITH LOVE, Rekha" அப்படிங்கறதை அழிக்க மறந்து அனுப்பிட்டேன். உடனே கிளம்பிட்டாங்கப்பா, யாரது யாரதுன்னு. பெங்களூரு BTM லே அவுட்ல கிளம்பர புழுதிய கூட அடக்கிறலாம், ஆனா இதை அடக்க முடியாதுடா சாமி...

பின்குறிப்பு: ரேகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்... ஒரிஜினல் சோர்ஸ் சொன்ன தகவல் இது...

15 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

யாத்ரீகன் said...

அதெப்படிங்க சாமி.. மறக்காம From source எல்லம் அழிச்சிட்டீங்க, மின்னஞ்சல் முகவரியெல்லாம் bcc-ல போட்டுட்டீங்க.. ஆனா salutation மட்டும் விட்டுட்டீங்க.. நம்பிட்டோம் சாமி.. நம்பிட்டோம்... இதத்தான் நாங்க எலவச வெளம்பரம்னு சொல்லுவோம் ;-) nsoy ;-)

ilavanji said...

// கடைசியா இருந்த "WITH LOVE, Rekha" அப்படிங்கறதை அழிக்க மறந்து அனுப்பிட்டேன் //

சரி விடும் ஓய்! மயக்கத்துல இதெல்லாம் நடக்கறதுதான்! :)))

அவிக யாருங்கற தகவலை தனியா அனுப்புங்...

G.Ragavan said...

ஓ அந்த ஊதாக்கலர்ல பெரிய எழுத்துல போட்டிருக்கே..அந்த ரேகாவா? கலியாணம் ஆயிருச்சா...அடடே!

Udhayakumar said...

யாத்திரீகன் சாமி, திரிஷா போட்டோவுக்கு கீழேயே salutation இருந்ததால கவனிக்க முடியலை... இது சாமி சத்தியமா இலவச விளம்பரம் இல்லை... உங்க ஜிமெயில் திறந்து பாருங்க... நீங்களாவது salutation கவனிக்கறீங்களான்னு...

Udhayakumar said...

//அவிக யாருங்கற தகவலை தனியா னுப்புங்... //

இளவஞ்சி, அதான் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டேனே... தகவல் அனுப்பற அளவுக்கு ஒன்னும் இல்லை.

Udhayakumar said...

//ஓ அந்த ஊதாக்கலர்ல பெரிய எழுத்துல போட்டிருக்கே..//

ராகவன், நாங்க நம்பிட்டோம், நீங்க திரிஷா ஃபோட்டோ பார்க்கலைன்னு...

TJ said...

avinga velai pakkara company perum, forward la irukkedaa? adhayum azhikka vittuta ;)

Udhayakumar said...

பிரபு ராஜா, நீங்கள் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க தனி மெயிலில் திரிஷா ஃபோட்டோ அனுப்பியுள்ளேன்... ensay !!!

Udhayakumar said...

//avinga velai pakkara company perum, forward la irukkedaa? adhayum azhikka vittuta ;) //

பாருங்க யாத்திரீகன், நான் எவ்வளவு நல்லவன்னு...

நன்றி TJ:-)

Pavals said...

//அதான் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டேனே..//

இருந்துட்டு போகுது.. :)

ஒரு மெயில் ஐடி தான கேட்டோம்.. அதுக்காக, அவுங்க ஜாதகத்தையே சொல்லிட்டு இருக்கீங்க..

(எந்த கம்பேனி'ங்கற வரைக்கும் அந்த மெயில்ல வந்திருச்சே.. அதை கவனிச்சீங்களா?)

Udhayakumar said...

//இருந்துட்டு போகுது.. :)

ஒரு மெயில் ஐடி தான கேட்டோம்.. அதுக்காக, அவுங்க ஜாதகத்தையே சொல்லிட்டு இருக்கீங்க..

(எந்த கம்பேனி'ங்கற வரைக்கும் அந்த மெயில்ல வந்திருச்சே.. அதை கவனிச்சீங்களா?)
//
ராசா, இந்த ஆட்டத்துக்கு நான் வரலை, escape!!!

Anonymous said...

yenakku ennavo nee blog ezhuthurathukku matter venumkirathukkagava nee ippadi pannuraiyonu thonuthu ... :-)

-arun

Unknown said...

எனக்கும் அந்த மெயில் அனுப்புனா மதி:-) நாங்களும் அந்த ஊதாக் கலர் எழுத்து எல்லாம் பாக்காம திரிஷாவை மட்டும் பாப்போம்ய்யா

Udhayakumar said...

தேவ், கழுதைப்புலி கடி வாங்கி ஒரு மார்க்கமா இருக்கீங்கன்னு தெரியும்... மெயில் ஐடி குடுக்காம எப்படியப்பு அனுப்பறது???

Chellamuthu Kuppusamy said...

எனக்கு என்னவோ இல்லாத ரேகாவை இருக்கிற மாதிரு பில்ட்-அப் குடுக்குற மாதிரி இருக்கு.. சும்மா ஒரு ஆற்றாமை தான்..