Monday, June 19, 2006

எப்படி? எப்படி?

ரொம்ப நாளாச்சு பிளாக் பக்கம் ஒதுங்கி... எனக்குள்ள இருந்த நல்ல உதயின் குரலால் இந்த போஸ்ட்.

போன வாரம் நல்ல வெட்டித்தனமான மெயில் ஒன்னை மொத்தமா ஒரு கும்பலுக்கு அனுப்பினா அதுல ஒருத்தன் மெயில் பாக்ஸ்ல இருந்து கீழே இருக்கற மெசேஜ் வந்தது.

"I am on PTO and will be back on June 19."

நானும் மண்டையை உருட்டி பொரட்டி PTO ன்னா என்னன்னு ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை. ஒரு அறிவாளி கிட்ட கேட்டா நான் என்ன கேட்டேன் அப்படிங்கறது மறக்கர மாதிரி ஏதேதோ சொன்னான். நண்பன் ஒரு வாரம் லீவுங்கறதால ஆர்வத்தை அடக்க முடியாம அவுட்லுக்-ல ரிமைண்டர் செட் பண்ணி இன்னைக்கு மெயில் பண்ணி கேட்டா "டுபுக்கு, நீயெல்லாம் IT வேலை செய்யறியான்னு டவுட்டா இருக்கு...என்ன இது சின்ன புள்ள தனமால்ல இருக்கு…" அப்படின்னு சொல்லிட்டு PTO - Paid Time Off ன்னு சொன்னான்.

அப்புறம் acronym எதுக்கும் அர்த்தம் தெரியலைன்னா http://www.acronymfinder.com/ பார்துக்கன்னு கரிசனமா உதவியும் பண்ணினான். அங்க போயி பார்த்தா, எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்கு. விதம் விதமா வகை வகையா ஒரே acronym க்கு பல அர்த்தங்கள். (ஆமா, acronym க்கு தமிழ்ல என்ன?)

பின்குறிப்பு:- டேய், என்னைய வச்சு காமெடி எதுவும் பண்ணிடலையேன்னு வடிவேலு ஸ்டைல்ல கேட்டான் பாருங்க... 3 நாளு இத வச்சு அவனை காமெடி பண்ணி எங்களுக்கு வயிறெல்லாம் புண்ணான மேட்டர் சொன்னா முதுகில டின் கட்டிருவான்னு அப்படியே அடக்கி வாசிச்சுட்டேன்...

13 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

யாத்ரீகன் said...

இப்படி ஒரு விரிவாக்கம இதுக்கு . ஹீம்... சுருக்கச்சொல்னு சொல்லலாம ;-)

Chellamuthu Kuppusamy said...

Please Turn Over தெரிந்தது தான். நீங்கள் சொல்வது புதிது. அதாவது எந்தெந்தக் கம்பெனியில லீவும் கொடுத்து சம்பளமும் கொடுக்கறாங்களோ, அவங்களுக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்

நன்மனம் said...

இத மாதிரி தான் ஒரு வெள்ளிக்கிழமை TGIF அப்படீனு ஒரு சொல் கேள்வி பட்டு ரெண்டு நாள் தேடி அலஞ்சு திங்கட்கிழமை வந்து சாதாரணமா இது கூட தெரியலயானு கேட்டப்ப எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க உதை:-)

வவ்வால் said...

யாத்திரிகன் ,நீங்கள் சொன்ன சுருக்க சொல் "abbreviation " (eg:VIP)என்ற சொல்லுக்கு சரியாக வரும் என நினைக்கிறேன்."acronym" (eg: Very Important Person) என்ற சொல் சுருக்கத்தின் விளக்கம் அளிப்பது எனவே "சுருக்க விளக்கம்" என சொல்லலாமா?

Udhayakumar said...

abbreviation- A shortened form of a word or phrase used chiefly in writing to represent the complete form

acronym- An identifier formed from some of the letters (often
the initials) of a phrase and used as an abbreviation.

இப்போ சொல்லுங்க, இதுக்கு தமிழ்ல என்னன்னு?

Shanmu said...

Hi...I am wondering how do you blog in Tamizh.. can you please help me out...
Thanks,

TJ said...

do you know, that ACRONYM is an acronym of "A Concise Reduction of Nomenclature Yielding Meaning"

Udhayakumar said...

Swami, thanks for the info. But, acronym-க்கு தமிழ்ல என்ன?

Anonymous said...

//Please Turn Over //... But that is not fiting in the context where it is used.

Anonymous said...

test

G.Ragavan said...

acronymனா தமிழ்ல என்ன? சுருக்குப் பெயர்னு சொல்லலாம். இல்லைன்னா சுருங்கி, குறுங்கின்னு புதுக் கலைச்சொல் கண்டுபிடிக்கலாம்.

புநெபுநா, மைஎகா, ஜெமே, கிசீ, மேமா, அசி இதெல்லாம் கூட குறுங்கிகள்தான். ஆனா தமிழ்ல.

புநெபுநா - புது நெல்லு புது நாத்து
மைஎகா - மைதிலி என்னைக் காதலி
ஜெமே - ஜெண்டில்மேன்
கிசீ - கிழக்குச் சீமையிலே
மேமா - மே மாதம்
அசி - அன்பே சிவம்
(இன்னும் நெறைய இருக்கு)

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்மணத்தின் தற்போதைய சுருங்கு சொல்லிகள்: (ராகவன், சுறுங்க? சுருங்க? எதுப்பா சரி?) :)

சொ.செ.சூ.வ

பி.பி.ப.ஓ

இ.ந.வே.மே.வை.

இதெல்லாத்தையும் விரிச்சிச் சொல்லுபவருக்குப் பரிசாக...






இன்னும் நாலு சுருங்குசொல்லிகள் கொடுக்கப் படும் ;)

Anonymous said...

abbreviation - சுருக்க சொல்
acronym - விரி சொல்

இது சரியா இருக்குமா?