Wednesday, February 22, 2006

கல்யாணம் எப்போ?

25 - 30 வயதில் இருக்கும் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர்களை (சிவராஜ் சித்த வைத்திய சாலை ப்ரொக்ராம் விஜய் டிவியில் பார்த்து பார்த்து கெட்டு போயிவிட்டேன்) பார்த்தவுடன் கலாய்ப்பதற்க்காகவே இந்த கேள்வியை முக்கால்வாசி பேர் ரெடி பண்ணி வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.

என்னப்பா, 5 வருஷமா பெங்களூரில் இருக்கிற. இன்னும் ஒரு பொண்ணும் கிடைக்கிலையா? இல்லை வெளிய சொல்ல பயப்படறியா? இது மாதிரி கேள்விகள் பெண்ணை பெற்று கல்யாணம் பண்ணிக் கொடுத்த மாமாக்கள் கேட்பது.

பையன் 2 வருஷமா யு.எஸ்.ஏ. வில் இருந்திருக்கிறான். ஏதாவது வெள்ளைக்காரியை லவ் பண்ணிட்டு இருக்கப் போறான். நீ எதுக்கும் உஷாரா இரு என அம்மாவிடம் புகை போட்டால் அது கல்யாண வயதில் பெண் வைதிருக்கும் அத்தை.

பையனுக்கு ஏதோ தோஷம் இருக்கும் போல இருக்கு. அதான் ஒரு பொண்ணூகூட அமைய மாட்டேங்குது. ஜோசியம் பார்க்கலாமா? எனக்கு தெரிந்து ஒரு ஜோசியர் உள்ளது உள்ளபடி சொல்லராரு. ஏதாவது பரிகாரம் இருக்கும். அதை செஞ்சா சரியாகப் போகும் என சொன்னால் அது சித்தி.

என்னோட பழைய ஃபிரெண்டை ஈரோட்டில் பார்த்தேன். அவரு பேத்திகூட கம்ப்யூட்டரில் தான் வேலை செய்யுதாம். கேட்டுப் பார்க்கலாமா என்று சொன்னால் அது தாத்தா.

மாப்பிள்ளை எதோ ஃபிகர் கரெக்ட் பண்ணிட்டான் போலிருக்கு. வீட்டில் சொல்லி பிரச்சினை ஆயிடிச்சு. அதான் இன்னும் வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலை. இது பள்ளிக்கூட நண்பர்கள்.

டேய், நீ காலேஜில் ஒரு அட்டு ஃபிகர் கூட சுத்திட்டு இருந்தியே, கல்யாணம் ஆயிடுச்சா? அவளுக்கு ஆயிடுச்சு, எனக்கு ஆகவில்லை என பதில் சொன்னால் அது ரொம்ப நாள் பார்க்காமல் ப்ஸ் ஸ்டாப்பில் பார்த்த காலேஜ் ஃபிரெண்ட்.

Common dude, you are the most eligible bachelor in our team. Why are you not getting married? Are you waiting for your best match? எனக் கேட்டால் அது கூட வொர்க் பண்ணும் ஃபிகர். நான் ரெடி, நீங்க ரெடியான்னு கேக்குதுன்னு அர்த்தம்.

ஆனா எங்களுக்குத்தான் தெரியும் நிலைமை. பையன் இன்னும் குழந்தை, கொஞ்ச நாள் போகட்டும் என நினைக்கும் அப்பா அம்மா, ஸ்கூல் காலேஜ் எங்கும் குனிந்த தலை நிமிராமல் படிப்புதான் முக்கியம் என்று காலேஜ் ஃபிகர்களை மிஸ் பண்ணியது, பையன் பெரிய வேலையில் இருக்கிறான், அவங்க அம்மா நிறைய எதிர்பார்ப்பா என பெண்கள் வீட்டில் இருந்தும் ஜாதகம் தராத மாமாக்கள், கூட வொர்க் பண்ணும் ஃபிகர்கள் நிறைய செலவு வைக்குது நமக்கு ஒத்து வராது என நினைக்கும் நாங்கள்.

இது ஒரு பொல்லாத உலகம்!!!

11 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

Boston Bala said...

Consider adding your blog feeds to Tamil aggregators like Thenkoodu.com

இரா.ஜெகன் மோகன் said...

பதிவு நல்லா தமாஷாத்தான் இருக்கு

siva gnanamji(#18100882083107547329) said...

wat happened to karuvachi kaviyam?
why u shifted to this topic?
auto vanthucha ba?

J S Gnanasekar said...

"வரதட்சணை வேண்டாம்
என்றான் அவன்.

சாதகம் கேட்டனர்
பெண் வீட்டார்.

அற்ப ஆயுளாய்
இருபானோ என்று!"

என்று ஒரு புதுக்கவிஞன் எழுதியது எத்தனை உண்மை.

-ஞானசேகர்

பெத்தராயுடு said...

ண்ணா, பின்றீங்ளேண்ணா..
நம்மோட கவலை ஊராருக்கு எங்கே பிரியுது?

Udhayakumar said...

புரிஞ்சாக்க கூட நம்மளை நோக அடிக்கணும்னு முடிவோட இருக்காங்கள்ள, அவங்களைத்தான் என்ன பண்ணறதுன்னு தெரியல...

பெத்த ராயுடு சார், பேர் நல்லா இருக்கு... கல்யாணம் எப்போ??? :-)

Muse (# 01429798200730556938) said...

அட எனக்கு 32 வயதாகிறது. கட்டை பிரம்மச்சாரி. வாழ்க்கை வேலையும், புத்தகங்களும், சோம்பேறித்தனமான தூக்கத்தாலும் பெங்களூரின் வார விடுமுறை நாட்கள் ஜாலியாகப் போகிறது.

என்ன, இன்னுமா திருமணமாகவில்லை என கேட்பவர்களின் முக பாவனைதான் என்னவோ செய்கிறது. "நீங்கள்தான் பின் லேடனா" என்று கேட்பது போன்ற பாவனை.

பிரச்சினை பெண்களுக்குத்தான் - அங்கிள் என்று கூப்பிடுவதா, அன்பே என்று கூப்பிடுவதா என்பதில்.

>>>>>ஸ்கூல் காலேஜ் எங்கும் குனிந்த தலை நிமிராமல் படிப்புதான் முக்கியம் என்று காலேஜ் ஃபிகர்களை மிஸ் பண்ணியது,<<<<<<

"வேலை, வேலை என்று கூட வேலை செய்யும் அட்டு பிகர்களை பார்க்காமலிருப்பது" என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Muse (# 01429798200730556938) said...

அட எனக்கு 32 வயதாகிறது. கட்டை பிரம்மச்சாரி. வாழ்க்கை வேலையும், புத்தகங்களும், சோம்பேறித்தனமான தூக்கத்தாலும் பெங்களூரின் வார விடுமுறை நாட்கள் ஜாலியாகப் போகிறது.

என்ன, இன்னுமா திருமணமாகவில்லை என கேட்பவர்களின் முக பாவனைதான் என்னவோ செய்கிறது. "நீங்கள்தான் பின் லேடனா" என்று கேட்பது போன்ற பாவனை.

பிரச்சினை பெண்களுக்குத்தான் - அங்கிள் என்று கூப்பிடுவதா, அன்பே என்று கூப்பிடுவதா என்பதில்.

>>>>>ஸ்கூல் காலேஜ் எங்கும் குனிந்த தலை நிமிராமல் படிப்புதான் முக்கியம் என்று காலேஜ் ஃபிகர்களை மிஸ் பண்ணியது,<<<<<<

"வேலை, வேலை என்று கூட வேலை செய்யும் அட்டு பிகர்களை பார்க்காமலிருப்பது" என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

//பிரச்சினை பெண்களுக்குத்தான் - அங்கிள் என்று கூப்பிடுவதா, அன்பே என்று கூப்பிடுவதா என்பதில்.//

தோடா..

தோடா..

உதயகுமார், பேசாம, உங்க அம்மா கிட்ட இந்தப் பதிவ காமிங்க.. அப்புறம் எல்லாம் தன்னால நடக்கும்.. இல்லைன்னா Muse மாதிரி ஆய்டப் போகுது...

Udhayakumar said...

/உதயகுமார், பேசாம, உங்க அம்மா கிட்ட இந்தப் பதிவ காமிங்க.. அப்புறம் எல்லாம் தன்னால நடக்கும்.. இல்லைன்னா Muse மாதிரி ஆய்டப் போகுது...//

பொண்ஸ், அம்மாகிட்ட காமிச்சு பிரயோசனம் இல்லைங்க... எங்க ஆஸ்த்தான் ஜோசியனிடம்தான் காட்டனும், அவருதான் 7லுல ராகு, 10 ல சனி ஏதாவது சொல்லிட்டே இருக்காரு.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சரிப்பா புலம்பாதீங்க..

சிங்கம் எப்போதான் சாயும்னு சொல்லுங்களேன்..? :)

இல்லை வீட்டுல போட்டுக் கொடுக்கவா..