Friday, February 17, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 2

அப்படி இப்படி என்று ஊரிலிருந்து 80 கிமீ தள்ளி இருக்கிற காலேஜில் சேர்ந்தாகி விட்டது. முதன் முதலில் பார்த்த அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டார்கள். அருண்,அன்பு, ஜூலிய்ஸ், பூவராகவன், கௌதம் ,வெங்கி, கார்த்தி, செந்தில், தியாகு, விஜய், மோகன், நாதன், வினோத் என பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. அசைன்மென்ட், லேப் என ஆயிரம்தான் இருந்தாலும் உலகமே அவர்களுக்காக என எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார்கள்.

என்னை பார்த்த அனைவரும் லேசாக சிரித்து வைத்தார்கள். அது நான் போடும் பூ போட்ட சட்டையை பார்த்து என நண்பர்கள் சொன்ன போது எனக்கு என் அம்மாவின் மேல் கோபமாக வந்தது. அடுத்த முறை ஊருக்கு போகும் போது அண்ணனின் சட்டையை எடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

சின்ன ராசுவான எனக்கு இங்கிலீஷில் வேகமாக மற்றவர்கள் பேசினால் பேதி வந்த மாதிரி இருந்தது. அன்று கெமிஸ்ட்ரி லேபில் ஆசிட்டை மேலும் கீழும் ஊற்றி பொங்கல் வைத்து விட்டதால் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நான் அங்கேயே மூச்சா போக வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ என் வரலாற்றைக் கேட்டு டார்ச்சர் செய்தனர். எப்போதுமே என் கூட மட்டும் தான் சனி பகவான் இருப்பதாக நான் நினைக்க ஆரம்பித்தது அன்று முதல் தான்.

என் நண்பர்கள் எல்லாம் ஹாஸ்டலுக்கு சென்று விட்டார்கள். கிளாஸிலேயெ நல்ல ஃபிகர் சிந்து. கிளாஸில் பாதி பேர் அவள் நிற்பது, நடப்பது, பேசுவது என விவஸ்தை இல்லாமல் அளவெடுக்க முடிவதை எல்லாம் எடுத்துக் கொன்டிருந்தார்கள். அவள் இதை எல்லாம் கூடவே இருந்து பார்த்து விட்டு எதுவுமே நடக்காதது போல் ஃபிசிக்ஸ் அசைன்மென்ட் கௌதம் கிட்ட கூடுக்க சொன்னாங்க. யாரு அது? என்றாள். நான் இருந்த நிலைமையில் விளக்கி வியாக்ஞானம் கொடுக்க மனம் இல்லாததால் கொடு என நானே வாங்கிக் கொண்டேன்.

முகமெல்லாம் ஃபேர் & லவ்லி போட்டுக் கொண்டு நான் சிகப்பாக இருக்கிறேனா என ஒருவன், இன்னும் கொஞ்சம் டிரை பண்ணினா அர்னால்டு மாதிரி இருப்பேன் என இன்னொருவன், ஒரு பெண்ணிடம் தான் பேசியதை ஒருவன் சொல்ல ஒரு கும்பல் பொறாமையில் வெந்து கேட்டுக் கொண்டு என்று ஹாஸ்டல் களை கட்டியிருந்தது.

எங்கள் மக்கள் எல்லாம் வழக்கம் போல் ஒன்றாக உக்கார்ந்து எதோ பேசிக் கொன்டிருந்தார்கள். நான் கௌதமிடம் சிந்துவின் அசைன்மெண்ட் கொடுத்து விட்டு உன்னை யாருன்னு தெரியாதுன்னுட்டா அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன் என்றேன். மக்கள் எல்லாம் உலகமே இடிந்து விழுவது போல சிரித்தார்கள். நான் எதாவது தப்பாக சொல்லி விட்டேனா என நான் சொன்னதையே திரும்ப சொல்லி பார்த்தேன்.

கௌதம் மட்டும் பேய் முழி முழிப்பதை பார்த்து எனக்கு ஓரளவுக்கு போன உயிர் திரும்பி வந்து விட்டது. அப்புறம்தான் தெரிந்தது, சிந்து இவனிடம் உருகி உருகி பேசிக் கொண்டு இருந்தாக நூல் விட்டுக் கொன்டு இருந்தான் என்று. அப்புறம் நடு இரவில் அவன் தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா சோக பாடல்களையும் பாடிக் கொண்டிருந்தான் என்பது தனிக்கதை.

-தொடரும்

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

ahaa .... arampichitaayaa ... arampichitaayaa ...

continue macchi ... thirumpavum enakku orae chippu chippa varuthu ..

- kaviyathil varum oru kadhpathiram ... :-)

said...

Dude,

I have already mentioned that if it is matching something with you it is pure coincidence.
Nothing else!

said...

it's not pure coincidence matchi ... because i was with you at that time and i'm with you now and ever also ...

it's yours,
arun :-)

said...

இரு அத்தியாகங்களும் படித்தேன்.
காவியத்தின் ஆரம்பம் ஓ.கே தான்.
இக்கதை தங்களைப் பற்றியது என்றால்
"கருவாயன் காவியம்" என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
நமது கதைக்கு அடுத்தவரின் பெயர்
எத்ற்கு?அடுத்த அத்தியாயத்தில்
'தலைப்பை'மாற்றிவிடுவீர்களா??!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.