வெட்டுப்புலி - தமிழ்மகன்
வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்துக்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டு ஆகிறது - புத்தகத்தின் பின்னட்டை வாசகம்.
80-90 களில் கில்லி, பம்பரம், கோலிக்கு அடுத்த படியாக அதிகம் விளையாடிய விளையாட்டு தீப்பெட்டி அட்டை. தீப்பெட்டி மற்றூம் சிகரெட் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்து தட்டையான கல்லை தூர இருந்து வீசி வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும். வெட்டுப்புலி அட்டைக்கு மதிப்பு அதிகம். காரணம், அது ஊர்ப்பக்கத்தில் அதிகமாக கிடைக்காது. பெர்க்லீ சிகரெட் அட்டைக்கும் இதே கதைதான். ஈரோடு CSI ஆஸ்பத்திரி போய் திரும்பி வரும்போது வெட்டுப்புலியை ரோட்டில் பொறுக்கிய நினைவு. வெட்டுப்புலி ஒரு உண்மை சம்பவமாம். திருவள்ளூர் பூண்டி ஏரி அருகே நடந்த கதை. அதையும், தமிழ் சினிமாவையும், திராவிட இயக்கத்தையும் வளைத்துக் கட்டியதுதான் இந்த நாவல்.
தசரத ரெட்டி, லட்சுமண ரெட்டி, ருத்ரா ரெட்டி, சின்னா ரெட்டி, குணவதி - வெட்டுப்புலி கிளை. ஆறுமுக முதலி மற்றும் சிவகுரு சினிமாவுக்கான கிளை. கணேசன், மகன் நடேசன் மற்றும் தியாகராசன் திராவிடர் கிளை. ஆறுமுக முதலி சின்னா ரெட்டியிடம் மூங்கில் வாங்க பேசுவதும், லட்சுமண ரெட்டி வீட்டை விட்டு ஒடிப்போய் ஆறுமுக முதலி தியேட்டரில் வேலை செய்வதும் ஒரு முடிச்சு. ஆறுமுக முதலியும், கணேசனும் அண்ணன் தம்பிகள்.
இந்த நாவலின் பலமே நாம் அதிகம் மேலோட்டமாக கேட்ட கதையை அந்த காலகட்டத்தில் எப்படி பார்த்திருப்பார்கள் என அடுக்கிக் கொண்டே வருவதுதான். ஆசிரியர் நிறைய உழைத்திருக்கிறார். 30களில் மெதுவாக ஆரம்பிக்கும் நாவல் எடுத்த உடனே குதிரையில் பறக்கிறது. ஆசிரியர் மிக நிதானமாக பல செய்திகளை கதை மாந்தர்கள் வழியாக சொல்கிறார்.
முப்பதுகளில் இனாம் அகரத்தில் (காரணப் பெயர்) ஏழெட்டு ஐயர் வீடுகள் மட்டுமே. மீதி எல்லாம் டெல்லி, பாம்பே, கல்கத்தா என அரசாங்க வேலைகளில். நிலத்தை சமன் செய்பவன் ஒருத்தன், உழுபவன் ஒருத்தன், விளைச்சலில் பாதி ஜமீனுக்கு, இதற்கு அப்புறம் வெள்ளைக்காரன்.
30களின் உப்புமா மற்றூ காபி பற்றி ஒரு பேச்சு மிக அருமை. பீட்சா மற்றும் பர்கர் வந்த போதும் சீ இந்தப் பழம் புளிக்கும் என சொல்லாமல் லைன் கட்டி நிற்பது தலைமுறை மாற்றம். அதே மாதிரியான ஒரு துண்டு 60-70 சுயமரியாதை திருமணத்தின் போது மக்கள் எல்லம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது. எல்லோரும் சமம் என தசரத ரெட்டியும் விசாலட்சியும் பேசுவதும். 60 களில் தியாகராஜனும் ஹேமலாதாவும் பேசுவதும் வருடம்தான் வேறே ஒழிய புதிதான ஒன்றை மக்கள் ஒரே மாதிரிதான். பார்க்கிறார்கள்.
சுதந்தரம் பற்றிய 30களில் மணி ஐயர் கருத்தாக எழுதியது மிகை கிடையாது. எங்க ஏரியாவில் விடுதலைப் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைவு (0 என எழுத முடியவில்லை, இந்த ஆராய்ச்சிக்கு நிறைய உழைப்பு தேவை). கதைகள் கூட கேட்டது கிடையாது. என் அம்மாவின் பாட்டி கட்டிக் கொடுத்த பொங்கலூரிலிருந்து அவர் அப்பா ஊரான ஊத்துக்குளி ஜேடர்பாளையம் வரை நடந்து வந்தது, ராகி/கம்பு களி, பஞ்சம், பட்டினி பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும், 1930 அமெரிக்க கிரேட் டிப்ரஷன் பற்றி விலாவாரியாக படித்து வைத்திருக்கிறோம் நாம். கதையில் கூட சிறுத்தை வெட்டப்பட்டது உண்மைதான், ஆனால் திரைக்கதை ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் மாறுகிறது.
லட்சுமண ரெட்டிதான் கதையின் முதலில் குதிரையேறியவர். ஹீரோ என்றால் காதல் இல்லாமலா? இலக்கணப்படி அவருக்கும் குணவதி மேல் காதல். பூண்டி ஏரி வெட்டி கரையெழுப்பும் கூட்டத்தில் ஒரு தலைக் காதலும் வளர்கிறது. சாதியின் பெயரால் காதல் சிதைக்கப்படும் போது சாதியின் மேல் கோபம் கொண்டு அதை மாற்ற நினைக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி திகவாகவும், திக திமுகவாகவும் வளர்ந்த வராலறு நன்கு எழுதப்பட்டுள்ளது. இதை கதை, பொய் என பலரும் சொல்லலாம், ஆனால் ஒரு கோர்வையாக ஒரு சம்பவத்தின் ஒரு பக்கத்தை தொகுத்துள்ளது. பெரியார் சாக இருக்கும் நேரத்தில் சௌந்திரபாண்டிய நாடார் ‘நாடார் குல மித்ரன்’ என்ற பத்திரிக்கையை லட்சுமண ரெட்டிக்கு வாசிப்பதாக ஒரு பகுதி. பெரியார் சொன்னதெல்லாம் பார்ப்பனரை எதிர்ப்பதுதான் மற்ற சாதி எல்லாம் அப்படியே இருக்கிறதே என்பதாக ஆசிரியர் ஒரு சுழட்டு சுழட்டி விட்டுப் போகிறார்.
லட்சுமண ரெட்டி சமத்துவத்தை காப்பதாக சொல்லி செய்யும் செயல்கள், ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதை எல்லாம் அவரளவில் அதில் வெற்றி பெற்றதாக தோன்றுகிறது. 30, 40, 50, 60, 70 என விலாவரியாக போகும் நூல் ஒரு நல்ல வரலாற்று அனுபவத்தை தருகிறது. பாடப் புத்தகங்களில் உள்ள வரலாறெல்லாம் அவரவர் போக்குக்கு வளைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால் இது ஒன்றும் பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் இல்லை.
80, 90, 2000 just like that முடித்துக் கொண்டது பெரிய ஏமாற்றம். சற்று கற்பனை கூட குறைய 80, 90களை எழுதி இருந்தால் எந்த கழகம் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த புத்தகம் வெளி வந்து இருக்காதோ என்னவோ? தலைவரின் மகன் காரில் அழகான பெண்களை தூக்கிச் செல்வதாக ஒரு வரி வருகிறது. இது கற்பனையோ நிஜமோ தெரியாது, சென்னையிலிருந்து 500 கீமீ தொலைவில் நானும் கேட்டிருக்கிறேன். இது ஒன்றுதான் சர்ச்சைக்குரிய பகுதி.
கழகக் கருதுக்களில் ஈர்க்கப் படவேண்டுமானால் கழகக் கருத்துக்களில் மூழ்கி திளைத்தவர், ஒரு முன்னோடி இருக்க வேண்டும். நடேசன் மற்றூம் தியாகராசன் அவர்கள் அப்பாவையும், நடராசன் அவர் மாமா பாலுவையும் பின்பற்றி நடக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி திராவிடர் இயக்கத்தை முன்னெடுத்து வள்லர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருப்பதை இந்த நாவலும் பதிவு செய்திருக்கிறது. லட்சுமண ரெட்டியின் மகன் நடராசனுக்கும், கிருஷ்ணப்ப்ரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் திராவிட பார்ப்பனீய வேறுபாட்டுக்கு இந்த புத்தகத்தில் வரும் மற்றொரு சிறப்பான பகுதி. 99% மக்களை 1% மக்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும் என்ற கேள்வியும் பதிலும். நீ என்னவாக னைக்கிறாயோ அதுவாக இங்கே இருக்கிறது. இரண்டு பக்கத்திலும் உக்கார்ந்து ரசித்துப் படித்தேன்.
திராவிட கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய இரண்டு குடும்பங்கள் சொல்லொனா துன்பத்துக்கு ஆளான மாதிரியும், மிதமாக பின்பற்றிய ஒரு குடும்பம் கடைசி மகனால் சீரழிந்ததாகவும், இவர்கள் யார் மேல் வன்மம் கொண்டு திரிந்தார்களோ அவர்கள் சேமமாக இருப்பதாகவும் கதை முடிகிறது. தினமணியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் கொள்கைக்காக வண்ணத்திரையில் தன் மகன் ரவியை சேரச் சொன்னான் நடேசன் என திராவிட கொள்கை பிடிப்பைப் பற்றி முகத்தில் அறைந்திருக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என யாரும் சிந்திக்கும் மனநிலையிலும் கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் வழி வழியாக தொங்கிக் கொண்டு இருக்கிறோமோ என சிந்திக்க வைக்கிறார். தமிழ்மகன் தினமணியில் மூத்த உதவி ஆசிரியர்.
வரலாறு திரித்து எழுதப்படும்போது 2 -3 தலைமுறை உண்மையான நோக்கத்தை அடையாளம் கொள்ளாமல் வேறு பாதையில் செல்லும் அபாயம் இருப்பது உண்மைதான். பெரியார் காங்கிரஸை விட்டு வெளியில் வந்ததும், வவேசு ஐயரின் குருகுலக் கல்வியும் வரலாறு. இந்தமாதிரியான அனுபவம் இருக்கும் ஒவ்வொருவரும் தான் திராவிடக் கொள்கையை பின்பற்ற வேண்டுமென்றால் பெரியார் யாருக்கு எதிராக கருத்துகள் சொன்னாரோ அவர்கள் பெரியாரின் பெண் விடுதலை கருத்தை மிகச் சரியாக பின்பற்றியிருக்கிறார்கள், அரிசனங்கள் இன்னும் அறியாத சனங்களாக இருக்கும் வரை இதே காட்சி தொடரும், பெரியார் உயிரோடிருந்தால் தமிழர்களை நோக்கி சத்தம் போட்டிருப்பார் என நறுக் வசனங்கள்.
வெங்கட் சுவாமிநாதனின் வெட்டுப்புலி விமர்சனமும் அதற்கான கேள்விகள்/பதில்கள்
http://www.tamilhindu.com/2011/09/tamilmagans-vettupuli-book-review/

1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:
கதைக்கெங்கே பஞ்சம், நம்மைச்சுற்றியில்லாத கதையானு சொல்றது சும்மாயில்ல போல :-)
ஆரம்பத்தில் யார் யாருக்கு என்ன உறவு என்று பிடிபடுவதற்கு கடினமாயிருந்தாலும், காலச்சக்கரம் கொஞ்சம் பின்னோக்கி போய் வந்த மாதிரிதான் இருக்கு..
உணவு, உடை, தலையலங்காரம், கடைகள், வியாபாரம், டீவி.. அத்தனை தலைப்புகளையும் தொட்டுப்போனது கொஞ்சம் கூட உறுத்தாமல் கதையோடு இருந்தது பெரிய பலம்..
Post a Comment