Monday, October 16, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006

1. காலையில் வேட்பாளரின்
ஆவேச முழக்கம்
"சாதிகள் இல்லையடா மடையா".
இரவில் பக்கத்து ஊருக்கு
கூடுதல் பணப் பட்டுவாடா
அது வேறு சாதிக்காரர்கள்
இருக்கும் ஊராம்...

2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்
"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,
பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.

3. அனைத்து வேட்பாளர்களிடமும்
பணம் வாங்கியாயிற்று
யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?
கேட்ட மனைவியிடம் சொன்னான்,
எல்லோருக்குந்தான்...
இவனுக ஜெயிச்சா
நாடு உருப்படவா போகுது.

1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

ILA (a) இளா said...

அசத்தல் தலைப்பு, அட்டகாசமான குத்து. பார்த்து ஊட்டு ஆட்டோ அனுப்பிட போறாங்க