Sunday, July 13, 2008

கமல் உலக நாயகனா?


http://youtube.com/watch?v=6dnyHOYeyz0

தாசவதாரத்தை எல்லோரும் இணையத்தில் துவைத்து காய வைத்த போது
அதைப் பற்றி பேசினாலே சலிப்பு வந்துவிட்டது. ஆசிப் மீரானின் இந்த பதிவைப் பார்த்து ஒரு கமல் ரசிகர் உலக நாயகனின் படம் வேறு, இந்த படம் வேறு ; இதை ஒப்பீடு செய்வதன் மூலம் அவர் வக்கிரம் வெளிப்படுவதாக சொல்லி ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு விளக்கம் கேட்டு கமெண்ட் போட்டால் அந்த பதிவின் சுவடே இப்போது இணையத்தில் எங்கும் இல்லை.

எதோச்சையாக சதிலீலாவதி படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்த போது இந்த கிளைமாக்ஸை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்த பொழுது பஞ்ச தந்திரத்தில் இதே மாதிரி இருக்கே என நகர்ந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து பின் மண்டையில் ஒரு பல்பு எரிந்தது. அவ்வை சண்முகியிலும் அதே அதே கிளைமாக்ஸ். உலக நாயகனுக்கு சரக்கு பஞ்சம் இருக்காது, இந்த இயக்குநர்கள் தான் காரணம் என சொல்லவும் முடியாது. சங்கர் "கமலுடன் பணி புரிவது காலேஜ் புரொபசருடன் வேலை செய்வது மாதிரி, எல்லாம் திருப்தியாக இருந்தால்தான் கேள்வி கேட்க மாட்டார்" என ரூம் மேட் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

கமல் உலக நாயகனா? கேள்விக்கு அப்பாற்பட்டவரா?


2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

கமல் உலக நாயகனா? - இந்த கேள்வி விவாதத்திற்கு கூட ஏற்க இயலாது. கமல் படங்களில் சில உலகத்தரமா என விவாதிக்க முடியும். ஆனால் கமல் கேள்விக்கு அப்பாற்பட்டவரா என்பது சும்மா பேச்சுக்குக்கூட எழுப்பத் தேவையற்ற கேள்வி. ஏனெனில், விமர்சனங்களை வரவேற்பவர் கமல், போத் இன் அண்ட் அவுட் ஆப் த ஸ்டுடியோ. எனினும், நீங்கள் குறிப்பிடும் சில அபத்த காட்சிகளுக்கு காரணம் குப்பை இல்லாத படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் குப்பை கொட்ட முடியாது என்ற நிதர்சனமே.

said...

//'ஒண்ணுக்கடிக்க' வரீகளா? - Warning: Adults only //

அந்த மூத்த பதிவரின் தரத்தை தெரிந்து கொள்ளவும்