Sunday, April 29, 2007

செம ரகளை!!!

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!

பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???

9 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

அட்டகாசம் !!! ஆச்சரியம் !!! அற்புதம் ம்... சூப்பர்

said...

தூள் கிளப்பிருச்சு. ஆமாம்......... பதினொரு வயசுக்கே இந்தப் போடா?

போட்டும், தமிழ் சினிமாவுக்கு புது கதாநாயகி கிடைச்சாச்சு:-)))))

said...

உண்மையிலயே இந்தத் தமிழ்ப் பாட்டுக்குத் தான் ஆடினாளா..இல்ல videoவுக்கே remixஆ???

ஆட்டம் அருமை !

வருங்காலத்துல கலக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.

said...

இந்தப் பாட்டின் குரல் பழக்கமானதாக இருக்கிறதே. எஸ்.ஜானகி? என்ன படம்?

நன்றாக ஆடுகிறார். வடக்கத்திக்காரராக இருப்பதால் தமிழ்க்கதாநாயகியாக வாய்ப்புண்டு. முதல்வர் ஆனாலும் ஆவார். சௌம்யா வாழ்க.

said...

இந்த படத்தில் இப்படி ஒரு பாட்டு இருப்பதாகவும், அதற்கு இப்படி ஒரு உபயோகம் இருப்பதும் இப்போதுதான் தெரிய வந்தது.

படம்: ராகவேந்திரா (1985)
மேல் விவரங்களுக்கு

said...

தர்ஷன், துளசி டீச்சர் மற்றும் ரவிசங்கர், தங்கள் வருகைக்கு நன்றி!!!

ஜிரா, ஆம்ஸ்டர்டாம் எப்படி இருக்கு? சொல்லவே இல்லை :-(
படமும், பாடல் விபரங்களையும் பார்த்தி கொடுத்திருக்கிறான் பாருங்கள்.

said...

ரொம்ப நல்லாருக்கு. ஜி.ராகவன் சொன்னது போல சௌமியா பிற்காலத்தில் தமிழ் சினிமாக்கு வந்தாலும் வியப்பில்லை.

ஒரு சின்னக் குறை அவங்க ஹிந்தியில் சொன்னதெல்லாம் முழுசா புரியலை. அவங்க பேசுறத மொழிபெயர்த்துப் போட்டால் நல்லா இருக்கும்.

said...

கலக்கிட்டா போங்க!!!!
சூப்பர் என்ன ஆட்டம் அது!!!!

said...

பொண்ணு ஆட்டம் சூப்பர்.பாட்டு கேட்டுதான் என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை.