Sunday, April 01, 2007

பந்தயக் குதிரை

தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.

அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.






வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...


வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...

இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???

11 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

Theres no time to stand and stare...

எப்பவோ பள்ளிக்கொடத்துல்ல படிச்ச வரி உன் பதிவைப் படிக்கும் போது ஞாபகம் வருது உதய்

said...

நண்பரே கவிதை ஜோர்.. ஆரம்பத்தில் சொன்னதைப் போல் தமிழ்மணச் சண்டைகள், அக்கப்போரில் மாட்டிக் கொள்ளாமல் நீங்களாச்சும் தப்பிச்சுக்குங்க.. வெறும் கவிதைகளை எழுதுவதோடு இல்லாமல் நிறைய எழுதியவுடன் புத்தகமாக ஆக்கும் நல்ல பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பணச் செலவுதான். ஆனால்.. அது இன்னும் உங்களுக்குள் உக்கிரமாக கவிதைகளை எழ வைக்கும்.. வாழ்த்துக்கள்..

said...

//இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???//

இருக்கறத வெச்சு எல்லாரும் திருப்தி பட்டுட்டா அப்புறம் இத்தனை சாம்ராஜ்யங்கள் தோன்றியிருக்காது அழிஞ்சும் இருக்காது.
கவிதை நல்லாயிருக்குங்க.

//வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...//

சரியா எழுதியிருக்கீங்க.

said...

அடடே! அவ்வளவு அவசரக்காரரா நீர்! புரிகிறது புரிகிறது. புஷ்ஷூருக்குப் போகையிலேயே நெனச்சேன். இப்பிடித்தான் ஏதாவது இருக்குமுன்னு. :-))))))

தேடுதல் வாழ்க்கைக் கின்பம் அதற்கின்பம்
நாடி முயங்கப் பெறின்

இது திருவள்ளுவர் சொன்னதில்லை. நான் சொல்றது.

said...

Romba nalla solleerukkeenga udhay. Keep it up.

Kavithai romba nalla erukku.

said...

கவிதை அருமை உதய்குமார்!

said...

தேவ், உங்கள் நினைவுகளை கிளறி விட்டேன், எனக்குள் சின்ன மகிழ்ச்சி!!!

said...

தமிழரே, வருகைக்கு நன்றி!!!

said...

ஜிரா, குறள் சூப்பர்!!! பெங்களூர் எப்படி இருக்கு???

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியாகு...

said...

சிபியாரே, ரொம்ப நன்றிங்கோவ்... கோவையில் கொளுத்தும் வெயிலாமே, எப்படி சமாளிக்கிறீர்கள்?