Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்

தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.

கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.

நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.

பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-
என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.

சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.

22 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.
//
SARIYA SONNA-BA
:)))

said...

உங்களுக்காச்சும் இந்த கவலை வந்துச்சே, அது சரி எப்படீங்க இப்படியெல்லாம்...? ):

said...

//சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும்//

:))

said...

eththana naalaikkuthaan naamalum valikkaatha maathiriye nadikirathu :)))

said...

என்னய்யா? பொண்ணு பார்த்திட்டாங்களா? அமெரிக்க மாப்பிள்ளை ஆகப் போறீயளா? அதான் கவலையா? ;)

said...

//பொன்ஸ்~~Poorna said...
என்னய்யா? பொண்ணு பார்த்திட்டாங்களா? அமெரிக்க மாப்பிள்ளை ஆகப் போறீயளா? அதான் கவலையா? ;)//

ரிப்பீட்டே...

சென்ஷி

said...

தேவை இல்லாம பொன்ஸுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்து தொலையுது சவுண்டு பார்ட்டி...:)))))

said...

பெங்களூர்ல இருந்தப்போ கடுப்பேத்தின அமெரிக்க மாப்பிள்ளைங்க இப்போ பாவமா ஆயிட்டாங்களா?

said...

உங்களுக்குக் கல்யாணம் ஆக போகுதா?:-)

@ஜி

//eththana naalaikkuthaan naamalum valikkaatha maathiriye nadikirathu :)))//

உங்களைதான் இந்தியாவுக்கு மறுபடியும் தூரத்தியாட்டாங்களே?நீங்க இந்த அமெரிக்கா மாப்பிள்ளை category இல் இருக்கமாட்டீங்க.

said...

சின்னத்தம்பி & சிபி, வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி!!!

said...

யாரோ சார், ஒரு கடையா உக்கார்ந்துட்டு, விட்டத்தை பார்த்துட்டு இருந்தா இந்த மாதிரிதான் தோணும்...

said...

ஜி, சரியா சொன்ன போ, வலிக்குதுன்னு சொன்னாவாவது நிறுத்துவாங்களா பார்க்க்கலாம்.

said...

இப்பிடி ஒரு பதிவு போட ஏன் சவுண்டு பார்ட்டியோட இதயம் துடிக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம்! எனக்குத் தெரியாம இருக்குமா? ;-) உண்மைய எல்லார் கிட்டயும் சொல்லீர வேண்டியதுதான. அந்த வெள்ளக்காரப் பொண்ணு பேருதான் வாயில சரியா நுழைய மாட்டேங்குது. அதுனால நீங்களே சொல்லீருங்க. :-)

said...

பொன்ஸ், ஷென்ஷி & ரவி, "திருவிளையாடல் ஆரம்பம்" படத்தின் கிளைமாக்ஸ் தான் இந்த பதிவுக்கு காரணம். ஏதாவது நடக்காதான்னு உக்கார்ந்துட்டு இருக்கேன், நீங்க வேற...

said...

குப்ஸ் சார், காலங்கள் மாறும் வண்ணக் கோலங்களும் மாறும் ...

said...

நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஜிராவின் கலகம்??? இப்போவே கண்ணை கட்டுதே....

said...

// Udhayakumar said...
நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஜிராவின் கலகம்??? இப்போவே கண்ணை கட்டுதே.... //

ஜிராவின் கலகம்....கல்யாணத்தில் முடியும் (இந்திய-அமெரிக்க) :-)

(அப்பாடி இன்னைக்கு வெடியக் கொளுத்தியாச்சு. இனிமே நிம்மதியா இருக்கலாம்) :-)

said...

//உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் //

அது சரி! வடிவேலு ரேஞ்சுக்குதான் போயிட்டிருக்கு இந்த பாரின் மாப்பிள்ளைகள் கதி. 'அழகிய தீயே' பிரகாஷ்ராஜ் மட்டும்தான் விதி விலக்கு-னு நினைக்கிறேன் :-)

said...

சவுண்ட் பார்ட்டி,

உங்களை அழகுச் சங்கிலியில் இணைத்துள்ளேன். உங்கள் அழகுகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்!

said...

:-) Very good sense of humour.

said...

\இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.\

Hilarious post Udhay! Enjoyed !
[ anubavam pesukiratho???]

said...

//CHINNATHAMBI said...
//பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.
//
SARIYA SONNA-BA
:)))

Tuesday, April 10, 2007 10:27:00 PM
யாரோ said...
உங்களுக்காச்சும் இந்த கவலை வந்துச்சே, அது சரி எப்படீங்க இப்படியெல்லாம்...? ):

Tuesday, April 10, 2007 11:01:00 PM
நாமக்கல் சிபி said...
//சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும்//

:))

Tuesday, April 10, 2007 11:07:00 PM
ஜி said...
eththana naalaikkuthaan naamalum valikkaatha maathiriye nadikirathu :)))

Tuesday, April 10, 2007 11:54:00 PM
பொன்ஸ்~~Poorna said...
என்னய்யா? பொண்ணு பார்த்திட்டாங்களா? அமெரிக்க மாப்பிள்ளை ஆகப் போறீயளா? அதான் கவலையா? ;)

Wednesday, April 11, 2007 12:02:00 AM
சென்ஷி said...
//பொன்ஸ்~~Poorna said...
என்னய்யா? பொண்ணு பார்த்திட்டாங்களா? அமெரிக்க மாப்பிள்ளை ஆகப் போறீயளா? அதான் கவலையா? ;)//

ரிப்பீட்டே...

சென்ஷி

Wednesday, April 11, 2007 12:20:00 AM
செந்தழல் ரவி said...
தேவை இல்லாம பொன்ஸுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்து தொலையுது சவுண்டு பார்ட்டி...:)))))

Wednesday, April 11, 2007 12:51:00 AM
Chellamuthu Kuppusamy said...
பெங்களூர்ல இருந்தப்போ கடுப்பேத்தின அமெரிக்க மாப்பிள்ளைங்க இப்போ பாவமா ஆயிட்டாங்களா?

Wednesday, April 11, 2007 8:54:00 PM
துர்கா|thurgah said...
உங்களுக்குக் கல்யாணம் ஆக போகுதா?:-)

@ஜி

//eththana naalaikkuthaan naamalum valikkaatha maathiriye nadikirathu :)))//

உங்களைதான் இந்தியாவுக்கு மறுபடியும் தூரத்தியாட்டாங்களே?நீங்க இந்த அமெரிக்கா மாப்பிள்ளை category இல் இருக்கமாட்டீங்க.

Wednesday, April 11, 2007 11:01:00 PM
Udhayakumar said...
சின்னத்தம்பி & சிபி, வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி!!!

Wednesday, April 11, 2007 11:24:00 PM
Udhayakumar said...
யாரோ சார், ஒரு கடையா உக்கார்ந்துட்டு, விட்டத்தை பார்த்துட்டு இருந்தா இந்த மாதிரிதான் தோணும்...

Wednesday, April 11, 2007 11:25:00 PM
Udhayakumar said...
ஜி, சரியா சொன்ன போ, வலிக்குதுன்னு சொன்னாவாவது நிறுத்துவாங்களா பார்க்க்கலாம்.

Wednesday, April 11, 2007 11:26:00 PM
G.Ragavan said...
இப்பிடி ஒரு பதிவு போட ஏன் சவுண்டு பார்ட்டியோட இதயம் துடிக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம்! எனக்குத் தெரியாம இருக்குமா? ;-) உண்மைய எல்லார் கிட்டயும் சொல்லீர வேண்டியதுதான. அந்த வெள்ளக்காரப் பொண்ணு பேருதான் வாயில சரியா நுழைய மாட்டேங்குது. அதுனால நீங்களே சொல்லீருங்க. :-)

Wednesday, April 11, 2007 11:31:00 PM
Udhayakumar said...
பொன்ஸ், ஷென்ஷி & ரவி, "திருவிளையாடல் ஆரம்பம்" படத்தின் கிளைமாக்ஸ் தான் இந்த பதிவுக்கு காரணம். ஏதாவது நடக்காதான்னு உக்கார்ந்துட்டு இருக்கேன், நீங்க வேற...

Thursday, April 12, 2007 12:00:00 AM
Udhayakumar said...
குப்ஸ் சார், காலங்கள் மாறும் வண்ணக் கோலங்களும் மாறும் ...

Thursday, April 12, 2007 12:01:00 AM
Udhayakumar said...
நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஜிராவின் கலகம்??? இப்போவே கண்ணை கட்டுதே....

Thursday, April 12, 2007 12:16:00 AM
G.Ragavan said...
// Udhayakumar said...
நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஜிராவின் கலகம்??? இப்போவே கண்ணை கட்டுதே.... //

ஜிராவின் கலகம்....கல்யாணத்தில் முடியும் (இந்திய-அமெரிக்க) :-)

(அப்பாடி இன்னைக்கு வெடியக் கொளுத்தியாச்சு. இனிமே நிம்மதியா இருக்கலாம்) :-)

Thursday, April 12, 2007 12:36:00 AM
Sridhar Venkat said...
//உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் //

அது சரி! வடிவேலு ரேஞ்சுக்குதான் போயிட்டிருக்கு இந்த பாரின் மாப்பிள்ளைகள் கதி. 'அழகிய தீயே' பிரகாஷ்ராஜ் மட்டும்தான் விதி விலக்கு-னு நினைக்கிறேன் :-)

Thursday, April 12, 2007 1:03:00 AM
அமிழ்து said...
சவுண்ட் பார்ட்டி,

உங்களை அழகுச் சங்கிலியில் இணைத்துள்ளேன். உங்கள் அழகுகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்!

Thursday, April 12, 2007 10:18:00 AM
Anonymous said...
:-) Very good sense of humour.

Friday, July 20, 2007 12:46:00 AM
Divya said...
\இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.\

Hilarious post Udhay! Enjoyed !
[ anubavam pesukiratho???]

Wednesday, September 26, 2007 12:43:00 AM //
ரிபீட்டே......