Monday, July 31, 2006

மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...

nose

ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டுக் கொண்டிருந்த நேரம். எங்கிட்ட இருந்த PDA (Palm Tungsten E) வில் mp3 பாட்டு கேக்கலாம். 100 பாட்டு எப்பவும் இருக்கும் அதில். புதுசு, குத்து, சோகம், ரிலாக்ஸ்ன்னு வகை வகையா பிரிச்சு வைச்சுக்கிட்டு பஸ்ஸில் பாட்டு கேட்பேன். 1 மணி நேர பயணம் மினிமம் கியாரண்டி என்பதால் குறைந்தது 10 பாட்டு கேட்கலாம்.

அன்னைக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா யார் கூடவோ ரொம்ப நேரம் பேசினதில் சந்தோஷமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ், கோயில் என எல்லா இடத்திலுமே கடைசியில் நின்னு நின்னு அதே பழக்கத்தில் பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு போனால் ஏற்கனவே 3 பெண்கள் உக்கார்ந்து கொண்டு தமிழில் சும்மா சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, வந்தது வந்தாச்சுன்னு அதற்க்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் உக்கார்ந்து கொண்டேன். ஐடி கார்டை பெல்ட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன்.

சீட்டில் உக்கார்ந்த பிறகு வழக்கம் போல ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உக்கார்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது டிரெயினிங், யுனிக்ஸ் என பேசியதால் அதுவும் போர் அடித்தது. ரொம்ப சந்தோஷமா இருந்ததாலோ என்னவோ உலகத்தில் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக இயங்குவதாக தோன்றியது. என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.

இதை கவனித்த ஒரு பெண், "பாருடி பீட்டரை... கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை"...

"ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல"

"புதன் கிழமை பக்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். அவன் பேக் பாரேன், 3 புக் உள்ள இருக்கு, நிச்சயம் டிரெயினிங் பேட்ச்தான்"

அதுவரை பேசாமல் இருந்த ஒரு பெண், "ஏண்டி, அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்க... அவனை பார்க்காமல் கிண்டல் பண்ணுங்க. அவனை பத்தி பேசுறம்ன்னு தெரிஞ்சு எவன் கிட்டையாவது அர்த்தம் கேட்டு தொலைக்கப் போறான்"

சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க. சரி நமக்கு விதிச்சது அவ்வளவுதான்... தமிழ் பொண்ணுகளா இருக்கு, அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல வழிஞ்சா நல்லா இருக்காதுன்னு பாட்டு கேக்க என் சோனி இயர் ஃபோனை எடுத்தேன்...

"அது கால்குலேட்டர் இல்லடி, 50 ரூபாய்க்கு விக்கிற FM ரேடியோ, செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. நான் இந்த இழவையெல்லாம் கேக்கணும்னு இருக்கே,"கடவுளே, உனக்கு கண்ணே கிடையாதா??? இப்படியெல்லாம் அழும்பு பண்ணாறாங்க, நான் ஆடம் டீஸ்ன்னு கேஸ் கூட போட முடியாதே" என புலம்பினேன். இருந்த பதட்டத்தில் இயர் ஃபோனை PDA வில் சொருகினேனா என பார்க்காமல் காதில் மட்டும் மாட்டிக் கொண்டு குத்து பிளே லிஸ்ட் செலெக்ட் பண்ணினேன்.

கோடம்பாக்கம் ஏரியா, கூத்து பார்க்க வாரியா ந்னு எங்கேயோ தூரத்தில் கேக்குது. என்னடா ஆச்சு நம்ம இயர் ஃபோனுக்கு, சும்மா ஹோம் தியேட்டர் எபெக்ட் குடுக்குமே, இன்னைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா இயர் ஃபோனை சொருகவே இல்லை. அவ்வளவுதானான்னு இயர் ஃபோனை சொருகிட்டு தலையை தூக்கிப் பார்த்தா 3 பொண்ணுகளும் பேயறஞ்ச மாதிரி என்னையவே பார்த்தாங்க...

அட இதுக்கே பயந்துட்டீங்க, நீங்கெல்லாம் கண்ணகி பரம்பரைன்னு நினைச்சா இப்படி பம்முறிங்க, அய்யோ அய்யோ... ன்னு நான் பாட்டில் மூழ்கி விட்டேன். அப்புறம் அந்த 3 பெண்களும் உக்கார்ந்து இருந்த இடத்தில் இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடம் உருவானது. அவர்கள் நான் இறங்கும் வரை வாயை திறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.

48 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

பாவம்பா பொண்ணுங்க.. இப்படி ஈவ்(ஸ்) டீஸிங் பண்ணி இருக்கீங்க?!!!

said...

பார்த்தீங்களா, லொள்ளு பண்ணினது அவங்க... பழி ஓரிடம், பாவம் வேறிடம்...

said...

'வாலி'யில் அஜீத் விவரிப்பது போல் ஏ-க்ளாஸ். நாங்க எல்லாரும் சிம்ரன் மாதிரி கேட்டுக்கறோம். அடுத்த ஷாட் என்னவென்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் ;-)

said...

nee zero aaka vendiyathu... hero akittiya?

said...

நன்றி பாபா!

அனானி, வேண்டாம், விட்டுடு...

said...

:-)))))))))))

said...

துளசி அக்கா, இப்போ நான் விளையாட்டுக்கு எது சொன்னாலும் வினை ஆகிவிடுகிறது... (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்)

ஸ்மைலியை நான் நல்லவிதமாக எடுத்துக் கொள்வதா? இல்லை...???

said...

//சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க//

நீங்க எத்தனை பொண்னுகளை கிண்டல் பன்னுனீங்கள்ளோ, அதனால தான் அவங்க எல்லோரும் சேர்ந்து கிழியர அளவுக்கு ஓட்டி இருக்காங்க,

//அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க.//

அஹா இந்தப் பிளான் வேற இருந்துச்சா..?

//செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. //


செம காமெடி மச்சி,


அன்புடன்...
சரவணன்.

said...

Intha matter antha 3 ponnungaluku teryumaa??

Mansoor

said...

//Intha matter antha 3 ponnungaluku teryumaa??
//

நான் இதை பிளாக்கில் எழுதுவதா??? எங்க கம்பெனி கொஞ்சம் பெருசு. யாரும் யாரையும் அடிக்கடி கிராஸ் பண்ணிக்க மாட்டோம்...

said...

//நீங்க எத்தனை பொண்னுகளை கிண்டல் பன்னுனீங்கள்ளோ, அதனால தான் அவங்க எல்லோரும் சேர்ந்து கிழியர அளவுக்கு ஓட்டி இருக்காங்க,
//

அட, ஆமாம் :-)

//அஹா இந்தப் பிளான் வேற இருந்துச்சா..?//

சரவணன், பிளான் மட்டும்தான் இருந்தது, நம்புங்க... நாங்கெல்லாம் நினைக்க மட்டும்தான் செய்வோம்.

//செம காமெடி மச்சி,//

அதானே, மத்தவன் எல்லாம் அடுப்பு மேல உக்கார்ரது உங்களுக்கு காமெடி... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.

said...

////சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க//

இதெல்லாம் கேக்க ஆளே இல்லியா? இரட்சிக்கனும் பகவானே!
:)

said...

உதய்,
வேஸ்ட் பண்ணிட்டீங்க!!!
அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல்லிட்டு சும்மா கடலையப் போட்டுட்டு வருவீங்களா? அதை விட்டுட்டு "கோடம்பாக்கம் ஏரியா" பாட்டா முக்கியம்???

நம்மள எல்லாம் பார்த்தாலே மூஞ்சிலே தமிழ்னு தெரிஞ்சிடும் :-)

said...

ஹா ஹா ஹா நல்ல அனுபவம் உதய். கேக்கவே சந்தோசமா இருக்கு.

இங்க சென்னைக்கு வந்ததும்....எனக்குத் தமிழ் தெரியவே தெரியாதுன்னு ஆபீஸ்ல நெனச்சவங்க நெறையப் பேரு. ஒரு வாட்டி ஒரு தமிழ் டீம் மேட்டோட தமிழ்ல பேசுறத....ஒருத்தர் கேட்டுட்டாரு...அப்புறம் மெதுவா எங்கிட்ட வந்து நீங்க தமிழ் பேசுவீங்களான்னு கேட்டாரு. ஆமான்னு சொல்லீட்டேன்.

ஆனா ஒன்னு இங்க பொதுவாவே எல்லாரும் தமிழ்ல பேசுறாங்க...தமிழ் தெரியாதவன் இருக்குறானா இல்லையான்னு யோசிக்க மாட்டேங்குறாங்க. வடக்குல போனா இப்பிடித்தான் இந்தியப் பேசி உயிர வாங்குவாங்க. நான் என்னோட டீம் கிட்ட கண்டிப்பாச் சொல்லீட்டேன். team discussion எல்லாம் ஆங்கிலத்துலதான் இருக்கனும். தமிழ் தெரியாத யாரும் இருந்தா ஆங்கிலத்துலதான் பேசனும்னு சொல்லீட்டேன். அப்படிச் செய்யலைன்னா என்ன பண்ணுவேன்னும் சொல்லீட்டேன். ஹி ஹி...லேசா மெரட்டினேன். என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!

said...

//என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!
//
சாப்ட்வேர் பீல்ட்ல என்ன சொல்லி மிரட்டுவீங்கனு தெரியாதா என்ன??? ;)

நான் பெங்களூர்ல சேர்ந்த முதல் பிராஜக்ட்டில் அப்படிதான் இந்தியில் பேசினார்கள். நான் எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன், ஏன் அப்படி என்று கேட்டார்கள்.
நான் நம்ம இந்தி எதிர்ப்பு போரட்டம் எல்லாம் விளக்கி முடிப்பதற்குள் மீட்டிங் டைம் முடிந்துவிட்டது :-)))

said...

//ஹா ஹா ஹா நல்ல அனுபவம் உதய். கேக்கவே சந்தோசமா இருக்கு.//

ஜிரா, இந்த மாதிரி சம்பவங்களால எனக்கு மூக்கே இல்லாம போயிட்டு இருக்கு. உங்களுக்கு சந்தோஷமா இருக்கா... (ஆனாலும் தலைப்பு அனுபவிச்சு வைச்ச மாதிரி இல்லை)

//அப்படிச் செய்யலைன்னா என்ன பண்ணுவேன்னும் சொல்லீட்டேன். ஹி ஹி...லேசா மெரட்டினேன். என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!
//

நீங்களும் அந்த லிஸ்டில் சேர்ந்துட்டீங்களா? நான் உங்களை நல்லவருன்னு நெனெச்சேனே? :-)

நான் எப்பவுமே, ஆன்சைட் போனா என்ன பண்ணுவீங்க, அதுக்கு இங்கிருந்தே பிராக்டிஸ் பண்ணுங்கன்னு பாலீஸா சொல்லுவேன்.

said...

//உதய்,
வேஸ்ட் பண்ணிட்டீங்க!!!
அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல்லிட்டு சும்மா கடலையப் போட்டுட்டு வருவீங்களா?//

ஆஹா, எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க... உங்க பேரு (வெட்டிப் பயல்) நீங்களா வைச்சிக்கிட்டதா? இல்லை சூட்டப்பட்ட பெயரா?

said...

////உதய்,
வேஸ்ட் பண்ணிட்டீங்க!!!
அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல்லிட்டு சும்மா கடலையப் போட்டுட்டு வருவீங்களா?//

சூழ்நிலை சரியில்லாத போது அவங்களால எப்படி பேச முடியும்... சும்மா லைட்டா பார்த்து சிரித்து மட்டும் வைச்சிருந்தாங்க, இப்பொ எனக்கு பிளாக் பக்கம் ஒதுங்கவே நேரம் இருந்திருக்காது :-)

said...

//என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!//

என்ன சொல்லி மிரட்டுவாரு? ரொம்ப தமிழ் பேசினா இனியது கேட்கின்ல சொன்னதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்னா? ;)


நாங்க ஹைதராபாத்ல வேலை செஞ்சப்போ எங்க டீம் பூராவும் தமிழர்கள் - ரெண்டு தெலுகு, ஒரு ஹிந்திக்காரரைத் தவிர.. கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசி, தெலுகுவாடுகளும் தமிழில் பேசத் தொடங்கிட்டாங்க.. ஹிந்திக்கார அண்ணாச்சி தான் ரொம்ப தடவுவாரு.. அப்புறம் அவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்துட்டோம்ல..

கொஞ்ச நாள்ல டீம் பிரிஞ்சி இன்னும் ரெண்டு லக்னோ காரங்க வந்துட்டாங்க.. அதுவரை நல்லா ஜாலியா இருக்கும்..

[பெங்களூர் எனக்குப் பிடிக்காம போனதுக்கு முக்கிய காரணம் அங்க எல்லாருக்கும் தமிழ் தெரிஞ்சது தான்.. பின்ன என்னங்க, நாலு பேரை நிம்மதியா கமென்ட் அடிச்சு ஓட்ட முடியாத ஊரெல்லாம் ஒரு ஊரா?!!! ;) ]

said...

ஆளுதான் பார்மல்ஸ் போட்டிருக்கான், ஆனால் பக்கா லோக்கல்ன்னு பயந்து போயிருப்பாங்க... தலைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை :-)

Arun.

said...

// வெட்டிப்பயல் said...
//என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!
//
சாப்ட்வேர் பீல்ட்ல என்ன சொல்லி மிரட்டுவீங்கனு தெரியாதா என்ன??? ;) //

ஹி ஹி ஹி அதேதான். பொதுவா நான் அப்படியெல்லாம் மெரட்டுறதில்ல. ஆனா அந்தச் சூழ்நிலைல நம்ம இருந்தா எப்படியிருக்கும்னு நெனச்சுப் பாத்தாத்தான் அந்தக் கஷ்டம் புரியும். அதுனால கண்டிப்பாச் சொன்னேன். தனியாயிருக்கும் போது என்ன பேசுனா என்ன....தெரியாத ஆளு இருக்குறப்போ?

// நான் பெங்களூர்ல சேர்ந்த முதல் பிராஜக்ட்டில் அப்படிதான் இந்தியில் பேசினார்கள். நான் எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன், ஏன் அப்படி என்று கேட்டார்கள்.
நான் நம்ம இந்தி எதிர்ப்பு போரட்டம் எல்லாம் விளக்கி முடிப்பதற்குள் மீட்டிங் டைம் முடிந்துவிட்டது :-))) //

இந்தி தெரியாம இருக்குறதுக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு? நான் வேல செஞ்ச பழைய கம்பெனி குர்காவுலயும் இருக்கு. அங்க போனப்போ மீட்டிங்குல இந்தியில பேசுனாங்க. நான் ஸ்டாப் சொல்லி...if this continues I feel I cant add any value to the meeting and itz better me leaving this discussion-னு சொன்னேன். அப்புறம் இங்கிலீசுக்கு மாறுனாங்க. அடுத்துவங்க நமக்குச் செஞ்சா மட்டுமல்ல நாம அடுத்தவங்களுக்குச் செஞ்சாலும் தப்புதான். இல்லையா?

said...

// Udhayakumar said...
//ஹா ஹா ஹா நல்ல அனுபவம் உதய். கேக்கவே சந்தோசமா இருக்கு.//

ஜிரா, இந்த மாதிரி சம்பவங்களால எனக்கு மூக்கே இல்லாம போயிட்டு இருக்கு. உங்களுக்கு சந்தோஷமா இருக்கா... (ஆனாலும் தலைப்பு அனுபவிச்சு வைச்ச மாதிரி இல்லை) //

இந்த மாதிரி எல்லாருக்கும் நடக்காது உதய். அதுனால எஞ்சாய்.

// //அப்படிச் செய்யலைன்னா என்ன பண்ணுவேன்னும் சொல்லீட்டேன். ஹி ஹி...லேசா மெரட்டினேன். என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!
//

நீங்களும் அந்த லிஸ்டில் சேர்ந்துட்டீங்களா? நான் உங்களை நல்லவருன்னு நெனெச்சேனே? :-) //

அடக் கடவுளே...அப்படியெல்லாம் வேற நெனச்சீங்களா? ஏங்க? இனிமேலாவது அப்படி நெனைக்காதீங்க. சரியா? :-)

// நான் எப்பவுமே, ஆன்சைட் போனா என்ன பண்ணுவீங்க, அதுக்கு இங்கிருந்தே பிராக்டிஸ் பண்ணுங்கன்னு பாலீஸா சொல்லுவேன். //

பாலீஷாவா? அத மொத வாட்டி சொன்னேன். ரெண்டாவது வாட்டி பாலியா சொன்னேன். மூனாவது வாட்டிதான் கண்டிப்பாச் சொன்னேன். தண்ணியே மூனு பிழை பொறுக்குமாம். நாமெல்லாம் மனுசங்க. பாம்பு மாதிரி சீறனும் சமயத்துல. தேவையில்லாமப் போட்டுக் கடிச்சு வெக்கக் கூடாது. இப்ப அதுவே டீம்ல பழக்கம் ஆயிருச்சு. இல்லைன்னா புவனேஷ்வருக்குப் போகனுமேன்னு பயந்திருப்பாங்களோ என்னவோ! :-))))))))))))))))))))))))

said...

// பொன்ஸ் said...
//என்ன சொல்லி மெரட்டீருப்பேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!//

என்ன சொல்லி மிரட்டுவாரு? ரொம்ப தமிழ் பேசினா இனியது கேட்கின்ல சொன்னதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்னா? ;) //

ஹா ஹா ஹா...நல்ல தண்டனையா இருக்கே. இனிமே அதப் படிச்சு பசங்க டெஸ்ட் எழுதனும்னு சொல்லீரலாம்.

// நாங்க ஹைதராபாத்ல வேலை செஞ்சப்போ எங்க டீம் பூராவும் தமிழர்கள் - ரெண்டு தெலுகு, ஒரு ஹிந்திக்காரரைத் தவிர.. கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசி, தெலுகுவாடுகளும் தமிழில் பேசத் தொடங்கிட்டாங்க.. ஹிந்திக்கார அண்ணாச்சி தான் ரொம்ப தடவுவாரு.. அப்புறம் அவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்துட்டோம்ல..

கொஞ்ச நாள்ல டீம் பிரிஞ்சி இன்னும் ரெண்டு லக்னோ காரங்க வந்துட்டாங்க.. அதுவரை நல்லா ஜாலியா இருக்கும்.. //

இது வேறையா! ஐதராபாத் வரைக்கும் போனவங்க தெலுகுல ரெண்டு பேச்சு கத்தீட்டு...சீச்சீ கத்துக்கிட்டு வந்திருக்கலாம்ல!

// [பெங்களூர் எனக்குப் பிடிக்காம போனதுக்கு முக்கிய காரணம் அங்க எல்லாருக்கும் தமிழ் தெரிஞ்சது தான்.. பின்ன என்னங்க, நாலு பேரை நிம்மதியா கமென்ட் அடிச்சு ஓட்ட முடியாத ஊரெல்லாம் ஒரு ஊரா?!!! ;) ] //

ஹி ஹி ஹி....நோ கமெண்டுசு.....

said...

//ஆஹா, எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க... உங்க பேரு (வெட்டிப் பயல்) நீங்களா வைச்சிக்கிட்டதா? இல்லை சூட்டப்பட்ட பெயரா?
//
உதய்,
உங்களுக்கு சொன்ன மாதிரி நான் செய்திருந்தனா, எதுக்கு வெட்டிப் பயாலா இருந்திருப்பேன்...Busy Boyயாக இருந்திருப்பேன் :-))

said...

//இந்தி தெரியாம இருக்குறதுக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு? //

அய்யா, நாங்கெல்லாம் படிச்ச பள்ளிக்கூடத்துல தமிழ், ஆங்கிலம் அவ்வளவுதான். ஹிந்தி படிக்கணும்ன்னு தோணவும் இல்லை, சொல்லியும் தரவில்லை. எங்களுக்கு தெரிஞ்ச ஹிந்தி (இந்தி இல்லை) "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுத்தாத்தா"... இப்போ நிறைய வட இந்திய மக்கள் பழகி புரிஞ்சிக்கிற அளவுக்கு வந்திருக்கேன்.

(கருணாநிதி தான் இதற்க்கு காரணம்ன்னு யாராவது பின்னூட்டம் போட்டறாதீங்கப்பா.. அதற்கான இடம் இது இல்லை. ஏதோ நான் உண்டு என் லொள்ளு உண்டுன்னு அமைதியா இருக்கேன். வேணும்னா "உதய் மற்றும் வெட்டிப்
பயலுக்கு இழைத்த அநீதி"ன்னு ஒரு போஸ்ட் நீங்களே போட்டுக்குங்க, சரியா?)

said...

//இதெல்லாம் கேக்க ஆளே இல்லியா? இரட்சிக்கனும் பகவானே!
:) //

கைப்பு, நீங்க ஒருத்தராவது என்னுடைய உண்மையான வலியை(?) புரிஞ்சு எழுதியிருக்கீங்களே, ரெம்ப சந்தோஷம்...

said...

//ஹா ஹா ஹா...நல்ல தண்டனையா இருக்கே. இனிமே அதப் படிச்சு பசங்க டெஸ்ட் எழுதனும்னு சொல்லீரலாம்.//
ஆகா.. ராகவன்.. உங்க ப்ராஜக்ட் என்ன, கம்பனி பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேம்பா.. :)))

said...

//"உதய் மற்றும் வெட்டிப்
பயலுக்கு இழைத்த அநீதி"ன்னு ஒரு போஸ்ட் நீங்களே போட்டுக்குங்க, சரியா?//
எனக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லை :-))

said...

//அப்படியே ஆமாங்க நான் டிரெயினிங் பேட்ச்தான்னு சொல்லிட்டு சும்மா கடலையப் போட்டுட்டு வருவீங்களா?//

நானும் ஆமோதிக்கறேன்.
ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :))

said...

//அதானே, மத்தவன் எல்லாம் அடுப்பு மேல உக்கார்ரது உங்களுக்கு காமெடி... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்.//

யோவ் பதிவு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அத விடு.

இது என்னா சும்மானா யானையை வம்புக்கு இழுத்துக்கிட்டு? அப்புறம் நாங்க எல்லாம் படை திரண்டு வந்திடுவோம், ஆமா!

(என்னாது? எதுக்கா? என்னா பேச்சு இது? சும்மா வேடிக்கை பார்க்கத்தான்)

said...

//ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :)) //

vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி...

said...

இ.கொ. வருகைக்கு நன்றி!!! நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்... எறும்புக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா???

said...

////ஆனால் "beautiful girl in campus is a visitor ..." கேள்விபட்டதில்லையா :)) //

vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி...//

ஏம்ப்பா விசிட்டரா கூட வரமாட்டாங்களா? அந்த அளவு வரண்ட பூமியா? பாவமய்யா நீர்.

எதுக்கும் இந்த பதிவு உங்க கம்பெனி அம்மிணிகள் பார்வையில் படாம பார்த்துக்குங்க.

said...

இ.கொ. எல்லாம் சுத்த தங்கம்ன்னு சொல்ல வந்தேன். வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...

said...

அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு..

said...

//அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு.. //

நார்மல் விசிட்டரையே விட மாட்டாங்களா? அப்போ நீங்க போனா? (ரொம்ப குதிச்சீங்கன்னா, ஜிராவைக் கூப்பிடுவேன்)

அப்படியே உங்களை விட்டா, அப்போவாவது விசிட்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைக்குமா?

said...

//வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...//

what's the difference? :D

said...

//காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு..
//

அஹா, எம் பெண்டிரையா இகழ்கிறீர்கள்??? இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்.

said...

////வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன், அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க...//

what's the difference? :D //

இ.கொ, வந்தீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன் (1 பின்னூட்டம்), அடிச்சு ஆடவும் ஆரம்பிசிட்டீங்க (4 பின்னூட்டம்) அதைச் சொன்னேன்.

அப்புறம், யாரும் எங்க கம்பெனிக்கு வர வேண்டாம், எல்லாம் நாங்களே பார்த்துக்குவோம்.

said...

//சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க//

பாவம்தான் உதய் நீங்க ! ஆமா அப்படியே ஒரு சிம்பதி லுக் உட்டு பிக்கப்பு ட்ராப்புன்னு அடுத்த லெவல்லுக்கு போக கெடச்ச அருமையான சான்ஸை மிஸ் பன்ணீட்டீங்களே உதயகுமார்ர்!!! :(( ம்ம்ஹூம் ட்ரெய்னிங் பத்தாது

நல்லா இருக்குதுங்கோ !!! :))))))

said...

:)

said...

//vaik, இது எங்க கேம்பஸ் பொருத்த வரைக்கும் மிக மிக தவறான் முன்னுதாரணம்... ஹி ஹி ஹி... //

சரி 'beauty lies in eyes of beholder' :)

//இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்//

எனக்கு தெரிந்தவரை இதயெல்லாம் போடலாம்னு சொன்னா அதயெல்லாம் போடாம வர்றவங்கனு ... :))

said...
This comment has been removed by a blog administrator.
said...

////இதையெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டம் போட்டால் எங்கள் மனம் வருத்தப்படும் என்று விதிகளை தூக்கி வீதியில் எறிந்துவிட்டு அதையெல்லாம் போட்டு வரும் தியாகப் பெண்மணிகளையா வாருகிறீர்கள்//

எனக்கு தெரிந்தவரை இதயெல்லாம் போடலாம்னு சொன்னா அதயெல்லாம் போடாம வர்றவங்கனு ... :))

//

ரெண்டுமே ஒன்னுதான் :-))

//அட இ.கோ, அவங்க காம்பஸ்ல விசிட்டரே விட மாட்டாங்க.. அதான் அவங்க காம்பஸே ஒரு "மிக மிக தவறான் முன்னுதாரணம்"ங்கிறாரு.. //

யாருங்க இப்படியெல்லாம் சொன்னது???
சனி, ஞாயிறு வரலாம்...

ஏற்கனவே உள்ள இருக்கிற காபி டேல எல்லாம் புகைச்சல் தாங்க முடியல, இதுல விசிட்டர வேற உள்ள விட்டா கேட்கவே தேவையில்லை...
வேலை செய்ய விடுங்கப்பா :-))

said...

//பாவம்தான் உதய் நீங்க ! ஆமா அப்படியே ஒரு சிம்பதி லுக் உட்டு பிக்கப்பு ட்ராப்புன்னு அடுத்த லெவல்லுக்கு போக கெடச்ச அருமையான சான்ஸை மிஸ் பன்ணீட்டீங்களே உதயகுமார்ர்!!! :(( ம்ம்ஹூம் ட்ரெய்னிங் பத்தாது //

ஜொள்ஸ், எனக்கு சைலன்சர் மாட்ட தெரியாதே??? அதுதான் பிரச்சினையே....

said...

கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லை
அதனால் உங்களைப் போல அந்தத்துறையில் அடித்து ஆட முடியாது!

கண்ணகி என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தேன்.

ஊள்ளே வந்துவிட்டு சும்மா போகலாமா?
அதன்னால் ஒரு சிறு குறிப்பு

//ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டு//

சனி உச்சத்தில் என்பது (Exaltation - Saturn in Thula Rasi in the basic chart) நல்லது. அதற்காக யாரும் தீபம்போடுவதில்லை!

அஷ்டம்த்துச் சனி (satun in the eigth house from Moon in the transit chart)என்பதால் உங்கள் அம்மா போடச் சொல்லியிருப்பார். அடுத்தமுறை தொலைபேசியில் பேசும் போது கேட்டுப் பாருங்கள்!

said...

கணினித்துரையில் எனக்கு ஸ்நானப் ப்ரார்த்தி இல்லை
அதனால் உங்களைப் போல அந்தத்துறையில் அடித்து ஆட முடியாது!

கண்ணகி என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தேன்.

ஊள்ளே வந்துவிட்டு சும்மா போகலாமா?
அதன்னால் ஒரு சிறு குறிப்பு

//ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டு//

சனி உச்சத்தில் என்பது (Exaltation - Saturn in Thula Rasi in the basic chart) நல்லது. அதற்காக யாரும் தீபம்போடுவதில்லை!

அஷ்டம்த்துச் சனி (satun in the eigth house from Moon in the transit chart)என்பதால் உங்கள் அம்மா போடச் சொல்லியிருப்பார். அடுத்தமுறை தொலைபேசியில் பேசும் போது கேட்டுப் பாருங்கள்!

said...

:-D
(வெட்டிப்பயல் பதிவிலிருந்து இங்கே வந்தேன்!)