Tuesday, July 18, 2006

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

அமெரிக்க பயணம் முடிவானவுடனே இந்த முறை ரொம்ப நல்லா பிளான் பண்ணி போகணும்ன்னு முடிவு பண்ணி சில காரியங்கள் செய்தேன். குறைந்த நேரம் மட்டும் ஏர்போர்ட்டில் செலவு செய்வது மாதிரியான பயண திட்டம் அமைத்துக் கொடுத்தார்கள். பெங்களூர் டூ டெல்லி கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் என்றதும் என்னையும் அறியாமல் கிங்ஃபிஷர் காலேண்டரும் F TV யும் ஞாபகத்திற்க்கு வந்தது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் 3+3 சீட். அதில் எனக்கு எயில் சீட், பக்கத்தில் ஒரு மத்திம வயது பெண் மற்றும் ஒரு பாட்டி, இந்த பக்கம் ஒரு ஹை ஃபை இளைஞன், அவனுக்கு பக்கத்தில் இரு பாட்டிகள். என் பெயர் என்னன்னு பக்கத்தில் இருந்த மத்திம வயது பெண் ஆரம்பிக்க நான் என் வாழ்க்கை வரலாற்றை சொன்னேன். அந்த மத்திம வயது பெண் உடனே என் பெயர் சவிதா, H இல்லைன்னு சொன்னாள். தென்னிந்தியர்கள் எல்லா இடதிலும் H போடுவீங்க, ஹிந்தியிலதான் சரியாக எதையும் சொல்வார்கள் என துதி பாடினாள். ஓ, அப்படியா, J I T K A என ஒவ்வொரு எழுத்தாக சொல்லி என்னுடன் வேலை செய்யும் செக்கோஸ்லோவியா பெண்ணின் பெயர், இதை எப்படி ஹிந்தியில் கூப்பிடுவீர்கள் என கேட்டேன். யோசிக்காமல் ஜிட்கா என்றாள். செக் மொழியில் அது இட்கா, ஜிட்கா இல்லை. அவரவர் மொழியில் எப்படி உச்சரிக்க வேணுமோ அப்படி சொல்லிக் கொடுங்கள், நாங்கள் சொல்லுவோமே, அதை விட்டுவிட்டு வெட்டி தனமாக பதில் சொல்லக் கூடாதுன்னு கொஞ்சம் காட்டமாக சொன்னேன்.

அதன் பிறகு என் தொழில் விவரங்கள் கேட்டறிந்தாள். அந்த பெண் ஒரு டீச்சர் என்பதால் இப்போதைய குழந்தைகள் படும் அவஸ்தைகள் மற்றும் எங்கள் காலத்தில் நாங்கள் இருந்தற்க்கும் அவர்களின் இப்பொதைய பண்புகளை சிறிது நேர்ம் அலசி ஆராய்ந்தோம். எனக்கு திடீரென மூக்கு அடைத்த மாதிரி இருந்ததால் கிங்ஃபிஷர் அழகி (ஏர் ஹோஸ்டஸ் என்பது அவர்களை அவமானப்படுத்தும் என நினைக்கிறேன்)யிடம் சொன்ன மாத்திரத்தில் கேண்டி, தண்ணீர் பாட்டில், மாத்திரை என நன்கு கவனித்தாள்.
இதையெல்லாம் கவனித்த ஹை ஃபை இளைஞன், அவனாக வந்து பெங்களூர் ஒரு வெட்டியான ஊரு, இவ்வளவு வரி குடுத்தும் டிராபிக் ஜாம், குறுகலான ரோடுகள், ரோட் சென்ஸ் இல்லாத மக்கள் என திட்டி தள்ளினான். இந்த இடத்தில் நானும் கொஞ்சம் ஒத்துப் போனதால் ஆமாம் போட்டு வைத்தேன். டெல்லிதான் சிறந்த ஊர், இங்க இல்லாததே இல்லை, டிராபிக் சுத்தமாகவே இல்லை என சொன்னான். அப்புறம் ரஜினி பற்றி பேச்சு வந்தது. அவன் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு சந்திர முகி படத்தின் முதல் சணடையை கலாய்த்துக் கொண்டிருந்தான். கிருஷ் பார்த்துட்டையான்னு கேட்டேன். பார்த்தேன், நல்ல படம்ன்னு சொன்னான். நான் சிரித்துக் கொண்டு விமானத்தை விட்டு இறங்கி லக்கேஜ் எடுக்க அவனுடன் ஒன்றாக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுதும் அவன் ரஜினி பற்றியே ஒயாமல் பேசிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வெள்ளை நிற கதர் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் , தோளில் ஒரு ஜோல்னா பை வேகமாக மின்னல் மாதிரி வந்து கொண்டிருந்தது. திரையிலேயே பார்த்து பழகிய முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த போது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். சரியாக அவர் என்னை கடக்கும் போது, சட்டென்று என் குரல் எனையும் அறியாமல் வெளி வந்தது. சிவாஜி சூட்டிங் முடிஞ்சுதா சார்? நாங்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக இருக்கோம் என்றேன். சட்டென என்னிடம் கையை நீட்டி குலுக்கிக் கொண்டே நல்லா வந்துட்டு இருக்குங்க அப்படின்னு சொன்னார். வரேன் என என் பதிலுக்கு காத்திராமல் மின்னல் மாதிரி வெளியேறினார். அடடா, கேமரா கையிலேயெ இருக்கு, பேனா இருக்கு ஒன்னும் தோணவே இல்லைன்னு என் நெற்றியில் தட்டிக் கொண்டிருந்தேன். அது ரஜினியா,இவ்வளவு சிம்பிளா இருக்காரு? என அந்த டெல்லிக்காரன் அசந்து போய் கேட்டான். ஆமாம், ரஜினி கிட்ட அப்படி என்ன இருக்குன்னு கேட்டியே, எவ்வளவு உயர்த்தில இருந்தாலும் அவரு யாருன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நமக்குத்தான் மத்தவங்க பண்ணுவது தப்பாகவே தெரிகிறது என்றேன்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் -ஷட்டில் என்பதால் எங்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி வேறு ஒரு கார் மூலம் அழைத்துச் சென்றார். டெல்லி ரோடெல்லாம் ரொம்ப அகலமாகத்தான் இருந்தது, ஆனால் 5 கிலோ மீட்ட்ர் செல்ல 45 நிமிடம் பிடித்தது. ஏர்போர்ட்டில் இறங்கும் போது ஏனோ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது ஞாபகத்துக்கு வந்தது.

6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

machi
Thalaivara parthuttu US poiruka ...
Super appu ...
Enjoy your trip happily
-arun

said...

staru staruthaan :-)

said...

you are lucky. He is so simple. He is Thalaivar . The unbeatable. India's No.1

said...

சூப்பரை பார்த்ததை இவ்வளவு சிம்புளாக சொல்லிட்டீங்க!!!
ஓ!!!நீங்க அவர் ரசிகரா!!!

பி.கு:
தலைப்பு "ரஜினி என்ன பெரிய ரஜினி"னு போட்டு இருந்தீங்கன்னா, இந்நேரம் பின்னூட்டம் சந்திரமுகி மாதிரி பிச்சுக்கிட்டு போயிருக்கும் :-).

said...

வீட்டுக்கு வீடு வாசப்படி உதய். ஆனா எல்லாருக்கும் எப்பவும் அடுத்தவங்கதான் மட்டம்.

கல்கிக்கு நேர்ந்த ஒரு அனுபவம் எனக்கும் நேர்ந்திருக்கு. பெங்காலிப் பாட்டெல்லாம் கேட்டா ஒரே பாடகர் பாடுனாப்புல இருக்கும். ஏன் அப்படீன்னு கேக்க இருந்தேன். ஆனா என்னோட நண்பர்கள்....தமிழ் பாட்டுகள் எல்லாம் ஏன் ஒரே ஆள் பாடுன மாதிரி இருக்குன்னு கேட்டுட்டாங்க. நான் விளக்கம் சொல்லீட்டு...அவங்க தப்பா நெனச்ச மாதிரிதான் நானும் நெனச்சிருப்பேன்னு நெனச்சுக்கிட்டேன்.

ரபீந்த்ரநாத்தோட ஷாந்த்தி நிக்கேதனுக்குக் கல்கி போயிருந்தப்போ...எல்லா ரொபீந்திர ஷொங்கீத்தும் ஏன் ஒரே மாதிரி இருக்குன்னு கேக்க நினைச்சாராம். ஆனா அதுக்குள்ள அங்கிருந்த ஒரு பெங்காலிப் பொண்ணு அவர் கிட்ட ஏன் தென்னிந்தியப் பாரம்பரிய இசைப்பாடல்கள் ஒரே மாதிரி இருக்குன்னு கேட்டுட்டாங்களாம். :-)))))

திரும்பவும் சொல்றேன்...பொதுவாவவே ஒலகத்துல எப்பவும் நம்மதான் சரி. அடுத்தவன் தப்புன்னு நெனைக்கிறவங்கதான் 99.99%. நூறுன்னு சொல்லீருப்பேன். ஆனா நல்லவங்க எங்காயவது இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை.

said...

ம்ம்ம்..அது தான் ரஜினி...

இது போல விவாதம் என்னோட ஆந்திர நண்பர்கள் கூட நிறைய நடக்கும்...

தமிழ் நாட்டில் தான் கறுப்பு கதாநாயகர்கள் அதிகம் அப்படின்னு ஒரு நண்பர் சொன்னார்.. எனக்கு இப்படி ஒரு பாயிண்ட் அப்ப தான் தெரிஞ்சது...

நாங்க திறமைய பார்க்கிறோம் கலரை இல்ல.. அதுக்காக நான் பெருமை படுறேன் என்று சொன்னேன்..