Tuesday, July 04, 2006

கரம், சிரம் உள்ளே நீட்டாதீர்!!!

கரம், சிரம் புறம் நீட்டாதீர்ன்னு எல்லா அரசு பேருந்துகளிலும் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது ரொம்ப தப்பான கருத்து என்பதை நிருபிக்கும் நிகழ்ச்சி இன்னைக்கு காலைல நடந்தது.

பெங்களூரில் ஒசூர் ரோடு டிராபிக் பத்தி நான் தனியா சொல்ல வேண்டியதில்லை. வேண்டிய மட்டும் கேட்டிருப்பீர்கள் இல்லைன்னா அனுபவத்திருப்பீர்கள். என்னோட கைக்கணிணியில் புதுப்பேட்டையிலிருந்து "ஒரு நாளில்" பாட்டை செலக்ட் செய்துவிட்டு அப்படியே ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடலாம் என நினைத்தால் அருகில் வந்து கொண்டிருந்த ஹுண்டாய் சான்ட்ரோவில் ரெண்டு கைகள் ஒரே சமயத்தில் கியர் ராடின் மேல் இருந்தது.

இது என்னடா வித்தியாசமான விளையாட்டே இருக்கே யாருன்னு பார்த்தா ரெண்டு IT ப்ரொபசனல்ஸ் (வேற யாரு இந்த கூத்தெல்லாம் பட்ட பகலில் பண்ணுவாங்க). நகராத வண்டிக்கே சும்மா மாத்தி மாத்தி கியர் போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சு முகத்தை முகத்தை பார்த்துட்டே இருந்தாங்க ஆனா வாயை மட்டும் தொரக்கவே இல்லை. அப்படி இப்படின்னு 5 நிமிஷம் போச்சு. முன்னாடி இருந்த குப்பை லாரி எல்லா புகையையும் நேரா சான்ட்ரோ மேலே மொத்தமாக வாரி இறைத்துவிட்டு (குப்பை லாரி வாழ்க!!!) மெதுவாக 20 அடி நகர்ந்தது. சான்ட்ரோ அப்படியே ஸ்டெடியா நின்ன இடத்திலேயே நிக்க என் பஸ்ஸும் நகர ஆரம்பித்தது. சரி காலைக் காட்சி முடிந்ததன்னு பாட்டை கேக்கலாம்ன்னு போன டமார்ன்னு ஒரு சவுண்ட். சான்ட்ரோ பார்ட்டிகள் ரோட்டில் அவர்கள் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சும்மா நச்சுன்னு சான்ட்ரோவின் முன்பக்கதை குப்பை லாரியில் பார்க்கிங் செய்திருந்தார்கள்.

அப்பாடா, இனி நிம்மதியாக பாட்டுக் கேக்கலாம்ன்னு தலையை சாய்ச்சா எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் கண்ணை முழித்தேன்.

கரம், சிரம் உள்ளேயும் நீட்டாதீர்!!!!

11 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

புகை ரொம்ப ஜாஸ்த்தியோ?? :)

said...

உதய்,

// நகராத வண்டிக்கே சும்மா மாத்தி மாத்தி கியர் போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சு முகத்தை முகத்தை பார்த்துட்டே இருந்தாங்க ஆனா வாயை மட்டும் தொரக்கவே இல்லை //

சான்ட்ரோ போனா போய்தொலையுது ஓய்! இந்த மாதிரி ஒரு 'இது' எல்லாருக்கும் வாய்க்குமா?! :)))

வாழ்க சான்ட்ரோ பார்ட்டி! வளர்க அவர்தம் கியர்போடும் வெளாட்டு!!

said...

ராசா, நாங்க புகை மட்டும்தான் விட முடியும்.. நீங்கதான் காத்தோடவே பேசறீங்க....

said...

//இந்த மாதிரி ஒரு 'இது' எல்லாருக்கும் வாய்க்குமா?! :)))
//

இளவஞ்சி, அதான் "இன்னா ஆறு" போட்டிருக்கம்ல... பசங்க ஒழுங்கா நடந்து இந்த மாதிரி சான்ட்ரோ விளையாட்டுக்களை உலகமெங்கும் நடத்திக் காட்டுவார்கள்.

said...

ரெண்டு கைகள் சரி. ஒன்னு பையன்..ஒன்னு பொண்ணுதான. நல்லா விளையாண்டிருக்காங்க. குப்ப லாரியால பாத்துப் போக முடியாது...இப்பிடி விளையாட்டக் கெடுத்துட்டாங்களே!

said...

ஜீரா, எல்லாம் குப்ஸ் கதையை படிச்சுட்டு ஒரே மாதிரி நின்னைச்சுட்டு இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன்..

said...

// ஜீரா, எல்லாம் குப்ஸ் கதையை படிச்சுட்டு ஒரே மாதிரி நின்னைச்சுட்டு இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன்.. //

ஓ அப்ப ரெண்டுமே பையன்...இல்லைன்னா ரெண்டுமே பொண்ணுங்க...ம்ம்...இப்பல்லாம் அதுவும் சரிதானாம்.

said...

//வாழ்க சான்ட்ரோ பார்ட்டி! வளர்க அவர்தம் கியர்போடும் வெளாட்டு!! //வாத்தி கூட சேந்து நாமும் வாச்த்துவோம். ..

//எல்லாம் குப்ஸ் கதையை படிச்சுட்டு ஒரே மாதிரி நின்னைச்சுட்டு இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன்//
இல்லாட்டி மட்டும்? ;-)

said...

மேட்டர் படத்துக்கு போனா கிளைமேக்ஸ் முடியறக்கு முன்னாடியே கிளம்பும் பழக்கம் இன்னும் இருக்கு போல இருக்கு...

said...

//மேட்டர் படத்துக்கு போனா கிளைமேக்ஸ் முடியறக்கு முன்னாடியே கிளம்பும் பழக்கம் இன்னும் இருக்கு போல இருக்கு... //

அப்பாவி சார், நீங்க அப்பாவி இல்லை,பாவி... போற போக்குல என்னைய எதுக்கு உங்க லிஸ்ட்ல சேர்க்கறீங்க. :-(

said...

ஒரு நல்ல s(A)ntro கதை, ஆனா முடிவு மட்டும் சோகமாகிடுச்சே