Monday, July 03, 2006

இன்னா ஆறு

இன்னாருகிட்ட இன்னதுதான் பேச வேண்டும், இன்னாருகிட்ட இப்படித்தான் நடந்துக்கணும்னு வீட்டு பெருசுகள் சொல்லி சின்ன வயசுலிருந்தே நீங்கள் மனதில் உருப்போட்டிருந்தாலும் அவர்கள் செய்யாத விஷயங்களை நீங்கள் செய்து இன்னலில் மாட்டிக் கொள்வது மிக சகஜமான ஒன்றாக மாறி விட்டது. எனது கேள்வி ஞானத்தில் தலையான இன்னா ஆறை இங்கே கிறுக்கி உள்ளேன்.

1. பல ஃபிகர்களுக்கு ஒரே சமயத்தில் ரூட் போடாதீர்.

எதிர் வினை: பின்னாடி உதவும் என பழகும் பெண்களிடம் எல்லாம் நீதான் என் BF (அதாங்க, Best Friend) என சொல்லுவீர்கள். பெண்கள் இதை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்புறம், நீங்கள் அப்படி இப்படி போடும் பிட்டில் உருகி அடுத்த ஸ்டேஜ் போகும் போதுதான் கலவரம் ஆரம்பமாகும். ஏன்டீ,அவன் ரொம்ப நல்லவன் இல்லை?. எத்தனை பொண்ணுங்க பழகுனாலும் என்னை மட்டும்தான் BF ந்னு சொன்னான் அப்படின்னு மெதுவாக சொல்ல அந்த ஜிகிடியும் என்னையும்தான் சொன்னான் சொல்லி விட்டு ரெண்டு பேரும் காளியாய் மாறி பின்னி பெடலெடுத்து விடுவார்கள். அப்புறம், மாலா, நீ எனக்கு BF, கீதா, நீ எனக்கு Forever Friend, சுமா, நீ எனக்கு Dearest Friend ன்னு சொல்லிட்டு வெட்டியா பிரயோசனம் இல்லாமல் காபி ஷாப்புக்கெல்லாம் கூட்டி போகணும்.

வினை: ஒன்னே ஒன்னுன்னு டார்கெட் வெச்சு அடிச்சீங்கன்னு வைச்சுக்குங்க, ஏற்கனவே செட் ஆகியிருந்தாலும் பையன் நல்லவன்னு மத்த ஃபிகருக்கு ரெகமெண்ட் செய்யும் வாய்ப்புகள் அதிகம். இல்லைன்னா, மாலா நீதான் இல்லைன்னு ஆகிடுச்சு உன் தங்கச்சின்னு இழுத்து அப்படியே போகிட்டே இருக்கலாம்.

2. பெண்ணை பிடித்து விட்டால் சுற்றி வளைத்து பேசாதீர்.

எதிர் வினை: எனக்கு OK, அவளுக்கு OK வா? என கேட்டு சொல்லறியா என அவள் ஃபிரெண்டிடம் கெஞ்சுவீர்கள். அந்த லொள்ளு ஃபிரெண்ட் என்னை கரெக்ட் பண்ணாமால் தூது போக சொல்கிறான் என மொத்தமாக கும்பலாக இருக்கும் போது கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டே சொல்ல மற்றவர்கள் குலவையிடுவார்காள் பாருங்கள், அவ்வளவுதான். ஜென்ம ஜென்மத்துக்கும் ஹூஹூம்....

வினை: நல்ல ஒப்பன் டைப், பட்டுன்னு சொல்லிட்டான். அந்த தைரியத்துக்கெ OK சொல்லலாம் என முதலில் கோபப்பட்டாலும் மூணு மாதம் கழித்து மிஸ்ஸுடு கால் விடும் வாய்ப்புகள் அதிகம்.

3. தவறு செய்ய ஆயிரம் வாய்ப்புகள் கிடைக்கும், அதை சொந்த ஊரில் செய்யாதீர்.

எதிர் வினை: ஃபிரெண்டெல்லாம் கம்பெல் பண்ணினாங்கன்னு ரெகுலர் சரக்கு அடிக்காமல் கண்டதையும் மிக்ஸ் பண்ணி ஊத்திவிட்டு நைட்டு பதினோரு மனிக்கு மேல் வீட்டுக்கு போய் நடு வாசலில் உவ்வே என பொங்கல் வைத்தால் கொஞ்ச நஞ்ச மிச்சமிருக்கும் மரியாதையும், கோவிந்தா கோவிந்தா.....

வினை: பையன் சொக்க தங்கம், வீட்டை விட்டு அனாவசியமாக வெளிய சுத்த மாட்டான், மூணு வேளையும் வீட்டில்தான் சாப்பிடுவான் என அக்கம் பக்கத்து ஆன்டிகள் உங்களுக்காக போகும் கல்யாண வீட்டிலெல்லாம் பெண் பார்ப்பார்கள்.

4. பெரியவர்களிடம் எடக்கு மடக்காக பேசாதீர்.

எதிர் வினை: பெருசு ஒரு நல்ல ஃபிகரை மனதில் வைத்துக் கொண்டு உங்களிடம் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டால் ஏன், தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க, சுவிஸ் பேங்க் ஏதாவதுல வேலை செய்யறீங்களா என நக்கல் அடித்தால் கதை கந்தலோ கந்தல். யாரவது ஒரு பொண்ணு வீட்டில் இருந்து சம்பந்தம் வந்தால் இவர் சம்பந்தமே இல்லாமல் உங்க ஊரு காரை வீட்டுக்காரர் மருமகனின் வீட்டில் கடலை எடுப்பவரின் பேரன் நான் என போட்டுத்தாக்கி அவர் வகையில் அவர் சாந்தி தேடிக் கொள்வார். நீங்கள் அப்புறம் அட்டெணன்ஸ் ஆர்டரில் பெண் தேட வேண்டியதுதான்.

வினை: பெருந்துறையில் 12 செண்ட் நிலம் இருக்கு, வாங்கலாமா என கேட்கும் பெருசிடம் விவசாயா பூமியா கிரையம் பண்ணினா பத்திர செலவு கம்மி, 20 சென்ட்டா கேட்டு பார்க்கலாம் என போட்டுத் தாக்குங்கள். துரையன் பையன் அப்பனையே தூக்கி சாப்பிடுவான் போல, வரப்பாளையத்துக்காரங்க வம்சம்லன்னு ஊரெல்லாம் இலவச விளம்பரம் சூரியன் FMல் வருவது போல. அடுத்த அட்டாக் நீங்கள் பண்ணும் வரை தாங்கும். இந்த மாதிரி அப்பப்போ துணிக்கடை விளம்பர ஜிங்கில் மாதிரி மாத்தி மாத்தி போட்டுத்தாக்கினால் என்னைக்கும் நீங்கதான் ஹீரோ.

5. வேலை வேலை என அதை மட்டும் கட்டிக்கொண்டு(!) அழுகாதீர்கள்.

எதிர் வினை: மேனஜருடன் 7 மணிக்கு மீட்டிங், கிளயண்ட் விசிட் நான் கூடவே இருக்கணும், ஒரு வாரத்துக்கு பார்க்கவேணாமே பிளீஸ்... என்பது போன்ற வார்த்தைகள் தான் நீங்கள் அம்பேல் என்பதற்கான அறிகுறி.

வினை: எனக்கு பயங்கர வேலை, இருந்தாலும் வர்ர வழியில் இன்னைக்கு பெருமாள் கோவிலில் உனக்கு அர்ச்சனை பண்ணினேன் என துளசி குடுத்து பாருங்கள். பத்து வாரம் கழித்தும் அது எப்பவும் அவள் கூடவே சுத்தும் ஹேண்ட் பேக்கில் பத்திரமாக இருக்கும்.

6. காதல் போதையில் உளறாதீர்.

எதிர் வினை: செத்து போயிடனும் போல இருக்கு, உன் மடியில் இப்படி படுத்திருக்கும்போதே. இப்படி ஜூனூன் தமிழில் டயலாக். பர்த்டேக்கு ஒரு பெரிய பொக்கே ஆர்டர் பண்ணி நைட் 12 மணிக்கு அவள் வீட்டுக்கே கொண்டு போய் அன்பை பொழிந்தால் உங்களுக்கு 6அடி குழி அட்வான்ஸ் குடுத்து நீங்களே வெட்டிக் கொள்கிறீர்கள். அப்புறம் நீங்க முன்ன மாதிரி இல்லைன்னு உங்கள் வரலாறு அடிக்கடி புரட்டிப் பார்க்கப்படும்.

வினை: இம்பெரெஸ் பண்னனும் மண்டையை உடைத்து ஐடியாவெல்லாம் யோசிப்பதில்லை, ஆனா எனக்கு என்ன பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து பண்ணும் அந்த ஒரு குணம் போதும் என யோசிப்பது மிக அதிக சதவீதம் பேர்!!!

அப்பா ராசா, கூப்பிட்டதால இன்னா நாற்பதை இன்னா ஆறாக்கி விட்டேன். இதில் டாக்ட்ரேட் வாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்பதால் இத்துடன் இதுக்கு டாட்டா...

MLM மார்க்கெட்டிங் மாதிரி ஆயிடுச்சு எல்லொரும் ஏற்கனவே விளையாண்டு முடிச்சிட்டாங்க. ஆறு பேரை பிடிக்க முடியவில்லை, யாராவது மிச்சம் மீதி இருந்தா சொல்லுங்க, கோர்த்து விடரேன்.

13 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

ஆறு சூப்பர் ஐடியாக்கள்.

யாருக்குக் கொடுத்து வச்சுருக்கோ?:-)))

said...

//அக்கம் பக்கத்து ஆன்டிகள் உங்களுக்காக போகும் கல்யாண வீட்டிலெல்லாம் பெண் பார்ப்பார்கள்.//
அட அட அட என்ன ஒரு அட்வைஸ் கலக்கிட்டீங்க. பல பேரு பல விதமா ஆறு போட்டாங்க ஆனா இந்த மாதிரி ஆறு யாரும் போட்டதில்லீங்க. :)

said...

உதய்,

நீங்க அனுபவிச்சு சொல்லியிருக்கற விதத்தைப் பார்த்தால், இந்த இன்னா ஆறு நீங்கள் இதுவரை செய்யா ஆறு போல தோனுதுங்கங்ண்ணா! :)))

said...

நன்றி துளசி அக்கா மற்றும் அனுசுயா!

இளவஞ்சி, தெளிவாத்தான் இருக்கீங்க...
என் கேள்வி ஞானத்தில் எழுதுனது இதுன்னு சொல்லிட்டேன்...

said...

புத்தர் பிறந்துள்ளார் !!! எங்கேயோ கயானா வில் அல்ல, நம்ம ஊரில் ! ஈரோட்டிற்கு அருகில் உள்ள பட்டக்கரன்பாளயத்தில். இவர் தற்போது பெங்ளுரில், வாழ்க்கைக்கு தேவையான அரிய மற்றும் அத்தியவசிமான கருத்துக்களை பரப்பி வருகிறார். படித்து பயன்பெறுங்கள்.

-Ganesh

(ps: by the way this post is exactly Agmark Udhaya post. experience really matters, is it not Udhaya?? ;)

said...

i too agree with the comments from ganesh.

Matchi yara dabaikira nee ...
kelvi gnam nu solrathullam chumma ...

everything is his experience ... enna yellam ethirvinaya poyiruchi ... inum yarum ivanukku ponnu parkaa aarambikkala athan payan feelings a kotti theerthuttan ...

aanalum nalla manasu ... yenna seiyanumnu sollitan ...

-Arun

said...

Dei.. superb da….

It seems u have lot of experience, so that u can write even a book (“How to pick up a figure in 30 days”) similar to “learning Hindi in 30 days” …..

Keep it up…

said...

நல்லா இருக்கு. ஆனா முதல் பாயிண்ட் தான்.... அதுக்கும் ஒரு ட்ரிக் இருக்கு.........

said...

நாகை சிவா, முழுசா சொல்லிடுங்க... பசங்க முக்தி பெறட்டும்...

said...

அனுபவம் பேசுகிறது. இதானா நல்லபிள்ளை நீங்கன்னு எல்லாரும் பேசுற ரகசியம்.

said...

ஜீரா, நானெல்லாம் கொஞ்சூண்டு நல்லவன், நம்புங்க சார்...

said...

அண்ணே நீங்க ஜொள்ளுப்பாண்டிக்கு
"அண்ணன்"ங்களா அண்ணே.

சும்மா பயங்கரமா படம் காட்றீங்களே.

சும்மா கோடு போட்டா ரோடு போடறீயே அப்படிம்பாங்க.
நீங்க அண்ணாமலைக்கே பால் ஊத்தி, ஜோள்ளுப்பாண்டிக்கே
பிகர் காட்றீங்களே.

ஆகா!ஆகா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பெருசு, ஜொள்ளுப்பாண்டி எனக்கு சீனியர்... அவர் ரேஞ்ச் எங்க, நான் எங்க... நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்ன்னு அவர்கிட்டத்தான் கத்துக்கிட்டேன்.