Monday, July 24, 2006

யாதுமாகி நின்றாய் - 1

broken-heart-2

மண்டைக்குள் எப்பொழுதும் குதிரைக் குளம்பின் சத்தம் வந்து கொண்டிருக்கிறதா? கண்ணை மூடினால் கடைசியில் நீங்கள் விளிம்பில் தொங்கிக் கொண்டு யாரவது வந்து தூக்கி விடுவார்களா என படுக்கையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறீர்களா? இன்னைக்கு ட்ரீட் என்னுடையது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் என நண்பர்கள் யாரவது சொன்னால் என் இதயம் கவர்ந்தவளுடன் ஏரிக் கரையில், நிலவு வெளிச்சத்தில் என சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்களா? எந்த ஜோடி மரத்தை சுத்தி டூயட் பாடிக் கொண்டிருந்த்தாலும் நாயகனின் முகத்தில் உங்கள் ஃபோட்டோவையும் நாயகி முகத்தில் ஒரு கேள்விக்குறியை மாட்டி டூயட் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? ஜாதகம் வந்திருக்கு என அம்மா ஃபோனில் சொன்னால் இங்க நான் சாதிக்க (?) வேண்டியது நிறைய இருக்கு, அப்புறம்தான் கல்யாணம் என சாமாளிக்கிறீர்களா? அந்த பெண்ணிடம் ஃபோனில் பேச ஒன்றும் இல்லாமல் அப்புறம் அப்புறம் அப்புறம் ... என 100 தடவை சொல்லிக் கொண்டிருக்கீறீர்களா? அவளிடம் பேச காரணம், மெயில் அனுப்ப காரணம் தேடிக் கொண்டிருகிறீர்களா?

எதோ என்னால் முடிந்த வகையில் உங்களுக்கு உதவ (உபத்திரவம்?) முயலும் முதல் முயற்சி!!!

என் தூக்கமில்லா இரவுகளுக்காக உன்னை சபிக்கலாம் போல இருக்கிறது; உனக்கொரு மகன் பிறப்பான், அவன் என் மகள் பின்னால் பைத்தியமாக சுற்றுவான், இப்போது நான் உன் பின்னால் சுற்றுவதை போல.

ஆனால் நாம் ஏன் அந்த பிஞ்சுகளுக்கு இந்த கொடூரத்தை செய்ய வேண்டும்,
அவர்கள் அண்ணன் தங்கையாக இருந்துவிட்டு போகட்டுமே!!!

இதை யாரிடமாவது சொல்லி உயிரோடு இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த சேவையை தொடர எனக்கு அது மேலும் ஊக்கமளிக்கும் :-)

பின்குறிப்பு:- தலைப்பை தனியாக விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//என் தூக்கமில்லா இரவுகளுக்காக உன்னை சபிக்கலாம் போல இருக்கிறது;
உனக்கொரு மகன் பிறப்பான், அவன் என் மகள் பின்னால் பைத்தியமாக சுற்றுவான்,
இப்போது நான் உன் பின்னால் சுற்றுவதை போல.

ஆனால் நாம் ஏன் அந்த பிஞ்சுகளுக்கு இந்த கொடூரத்தை செய்ய வேண்டும்,
அவர்கள் அண்ணன் தங்கையாக இருந்துவிட்டு போகட்டுமே!!!
//

என்ன அருமையான சிந்தனை!!!

உயிருக்கெல்லாம் பிரச்சனை வராது. நீங்களே முயற்சி பண்ணி சொன்னீங்கன்னா இந்த தொடரை PDF Formatல் 50 பேருக்கு forward செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

said...

//உயிருக்கெல்லாம் பிரச்சனை வராது. //

வெட்டி, எனக்கு இந்த உத்தரவாதம் எல்லாம் பத்தாது. ரத்தமும் சதையுமாய் எனக்கு எடுத்துக்காட்டு வேண்டும்...

ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை :-)

said...

ரைட்டேய்.. திரும்பி வரும்போது முடிஞ்சிரும்.. கவலைப்படாதீங்க :)

said...

ராசா, நீங்கள் சொன்னபடியே ஆகக்கடவது... (மரியாத்தா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா வர்ர தை யிலயே மொட்டை போடறேன் சாமி)

said...

மொட்டை நிச்சயம்!
நானும் வாழ்த்துகிறேன்!
மறக்காம பத்திரிகை அனுப்புங்க!