Thursday, June 01, 2006

திரும்பி பார்க்கிறேன்

இன்றோடு பிளாக் எழுத ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. என் புருஷனும் கச்சேரிக்கு போனான் அப்படின்னு ஆரம்பிச்சது இது. அப்புறம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்குச்சோ அப்படிங்கற மாதிரி ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு பெரிய விஷயம் எதுவுமே நான் எழுதலை... இருந்தாலும் நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

1. செந்தில். நான் பிளாக் ஆரம்பிப்பதற்க்கு காரணமே இவன் தான். இவன் தான் எனக்கு பிளாக் அறிமுகப்படுத்தியது.
2. சுவாமி. நிறைய பிளாக்குகளை அறிமுகப்படுத்தியது இவன் தான். அப்புறம் சில டெக்னிகல் டிப் எல்லாம் குடுத்து என் சைட்டை பார்க்கற மாதிரி மாத்தியதும் இவன் தான்.
3. கிருஷ்ணா. அங்க அங்க அடி வாங்கி நின்னா வந்து உதவி பண்ணி எழுத வைத்தவன்.
4. தமிழ்மணம். மொத்த குழுவுக்கும் நன்றி. என் பிளாக்கை நிறைய பேருக்கு கொண்டு போய் சேர்த்த பெருமை முழுவதும் தமிழ்மணத்துக்கே.
5. துளசி அக்கா. மறு மொழி மட்டுறுத்தலின் அவசியத்தை சொல்லி பின்னூட்டம் போட்டாலும் போட்டார் வருகை புரிகிறவர்களின் எண்ணிக்கையும் பின்னூட்டம் பதிபவர்களின் எண்ணிக்கையும் எகிறி விட்டது.
6. நண்பர்கள். பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தியவர்கள் நிறைய பேர். நிறைய பேர் பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து படித்து எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

நிறைய படித்து தெரிந்து கொண்டேன். கற்றது கல்லளவு கல்லாதது உலகளவு என எனக்கு திரும்ப திரும்ப நினைவூட்டுகிற பலர் இங்கே எழுதிக் கொண்டுள்ளார்கள். ஆல மர நிழலில் வளரும் புல் நான்... தொடர்ந்து எழுதுவேன்.

23 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

எதுக்குப்பா நன்றி கின்றின்னு பெரிய வார்த்தையெல்லாம்?

நல்லா எழுதி, நல்லா இருந்தாச் சரி.

இப்படிக்கு,
அதே ஆலமரத்தின் கீழ் வளரும் மற்றொரு புல்.

said...

வாழ்த்துகள் உதய். இன்னைக்கு அப்ப ஆண்டு விழாவா? என்ன கொண்டாட்டம்? எங்க கொண்டாட்டம்? இப்பன்னு பாத்து நான் பெங்களூர்ல இல்லியே...இந்தக் கொண்டாட்டத்த ஒரு பதினைஞ்சு நாளு தள்ளிப் போட முடியாதா? 16,17,18 தேதிகள்ள அங்க இருக்கேன்.

உதய் இன்னமும் சிறப்பாகச் செய்து மகிழ எனது வாழ்த்துகள்.

said...

திரும்பிப் பாக்குறேன்னு பாத்ததும் ஜோசப் சாரோட பதிவுன்னு நெனச்சேன். ஆனா உங்க பேரப் போட்டிருந்தது கொழப்பமா இருந்துச்சு. வந்து பாத்தா திரும்பிப் பாத்திருக்கீங்க...

said...

ஒரு வருஷமாயாச்சா.. சரி அப்போ இன்னைக்கு கங்கோத்ரில மீட் பண்ணலாமா?

said...

தொடர்ந்து எழுதுங்கள் உதய்.... நல்ல எழுத்துக்கு என்றைக்கும் வரவேற்புக் கிடைக்கும்

-குப்புசாமி செல்லமுத்து

said...

உதயகுமார்,
இத்தனை சீனியர் பதிவாளரா நீங்கன்னு கேட்டு உங்களைத் திரும்பிப் பார்க்க வச்ச எனக்கு நன்றி சொல்ல மறந்துட்டீங்க?!! :)

வாழ்த்துக்கள்!!!

said...

துளசி அக்கா, உங்களுக்கு தனி பதிவு போடனும்னுதான் இருந்தேன்... பொன்ஸ் ஒரு பின்னூட்டத்தில தேதி போட்டதை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

said...

madushalu, வருகைக்கு நன்றி!!!

said...

//டிபிஆரோட todays update வரலியேன்னு //

அதானே பார்த்தேன், நீங்க எல்லாம் என் பிளாக் பக்கமே ஒதுங்குனது இல்லியேன்னு...

செந்தில், வருகைக்கு நன்றி!!!

said...

//இந்தக் கொண்டாட்டத்த ஒரு பதினைஞ்சு நாளு தள்ளிப் போட முடியாதா? 16,17,18 தேதிகள்ள அங்க இருக்கேன்.
//

கட்டாயம் ராகவன், செல் நம்பர் இருக்குல்ல... மீட் பண்ணலாம்..

said...

//திரும்பிப் பாக்குறேன்னு பாத்ததும் ஜோசப் சாரோட பதிவுன்னு நெனச்சேன். //

ஜிரா, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்... ஹி ஹி ஹி...

said...

//கங்கோத்ரில மீட் பண்ணலாமா? //

ராசா, வேற ஒரு அப்பயின்மெண்ட் இருக்கே... வெள்ளிக் கிழமை மீட் பண்ணலாமா???

உங்க டிரீட் பாக்கி இருக்கு...

said...

//வேற ஒரு அப்பயின்மெண்ட// வேறயா..?? ஒம்பதரை மணிக்கு மேல 16த் க்ராஸ் சிக்னல கையில எதோ புஸ்தகத்தை வச்சுகிட்டு தனியா சிரிச்சுகிட்டே க்ராஸ் பண்றத பாக்கும் போதே டவுட் வந்துச்சு..
அப்படி எதும் இல்லையே.. ;)

said...

உங்க பிளாக்க பாக்கும் போது, இளவஞ்சி உங்கள "உதை"னு கூப்டது தானுங்க நினைவுக்கு வருது.

வாழ்த்துக்கள்.

ஒரு "ப்" அப்புறம் நம்பர் விட்டதுனால தப்பிச்சீங்க இல்லனா ஜோசப் சார் காப்பிரைட் கேஸ் போட்டிருப்பாரு. இப்ப பாருங்க அந்த தலைப்போட மகிமைய.

said...

//உங்களைத் திரும்பிப் பார்க்க வச்ச எனக்கு நன்றி சொல்ல மறந்துட்டீங்க?!! :)//

ஆற்ரலரசி பொன்ஸ் அக்கா, வாழ்க வாழ்க!!!

said...

பொன்ஸ், காலையில காப்பி மக்கோட பிளாக்கிங்கா... பிரிச்சு மேயரீங்க, என்ன பிளாக் பக்தி!!!

said...

//ஒம்பதரை மணிக்கு மேல 16த் க்ராஸ் சிக்னல கையில எதோ புஸ்தகத்தை வச்சுகிட்டு தனியா சிரிச்சுகிட்டே க்ராஸ் பண்றத பாக்கும் போதே டவுட் வந்துச்சு..
அப்படி எதும் இல்லையே.. ;) //

ராசா, அப்படி இப்படி இருந்தா நான் போயி வாத்தியார் இளவஞ்சி பதிவுல சாப பின்னூட்டம் இடுவேனா...

எனக்கில்லை... எனக்கில்லை...

said...

//ஒரு "ப்" அப்புறம் நம்பர் விட்டதுனால தப்பிச்சீங்க இல்லனா ஜோசப் சார் காப்பிரைட் கேஸ் போட்டிருப்பாரு. இப்ப பாருங்க அந்த தலைப்போட மகிமைய.//

விட்டா ஜோசப் சாருக்கு நன்றின்னு இன்னொரு போஸ்ட் போட வச்சிருவீங்க போல, நன்மணம்... வருகைக்கு நன்றி!!!

said...

வாழ்த்துக்கள்.........

said...

Very Good da
keep Going
even i also thought of starting blog ... innum yosichuttu than irukken ...enga aarambikirathu eppadi aarambikarathu nu ...
ofcourse you've to provide a tech support :-)

with luv,
arun

said...

//பொன்ஸ், காலையில காப்பி மக்கோட பிளாக்கிங்கா... பிரிச்சு மேயரீங்க, என்ன பிளாக் பக்தி!!!

//
ஹைய்யோ ஹைய்யோ.. எப்டிங்க இப்டி எல்லாம்!!! காப்பிதாங்க நல்லா இல்லை.. :(
கறுப்புக் காப்பி குடுக்கிறானுங்க!!! :)

said...

//கறுப்புக் காப்பி குடுக்கிறானுங்க!!! :) //

பொன்ஸ், கிரீமர் இல்லைன்னா மில்க் பவுடர் வாங்கி வச்சிக்க வேண்டியதுதானே??? இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டு..

said...

Vaazhthukkal. :)