Thursday, May 11, 2006

ஏன்? எதற்கு?? எப்படி???

சுஜாதா ரேன்ஞ்சுக்கு நினைச்சுட்டு வந்து பார்த்தீங்கன்னா இதுல ஒன்னும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன சந்தேகங்களுக்கு யாரவது விடை சொன்னா நல்லா இருக்கும்..

முதல் கேள்வி சினிமா உலகம் பற்றியது. சிங்குச்சா சிங்குச்சா சிவப்பு கலரு சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா ந்னு பாட்டுல எல்லாம் போட்டு கும்மாங்குத்து குத்தறாங்களே அந்த துணியெல்லாம் அதுக்கப்புறம் என்ன பண்னுவாங்க??

9 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

இதுவரை மஞ்சக் கலரோ / பச்சைக்கலரோ சிவப்புக்கலரையோ / கருப்புக்கலரையோ நன்கு உபயோகித்துக்கொண்டபிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். ஆனால் இனி என்ன நடக்கும் என்பது ஆண்டவருக்குத்தான் தெரியும்.
;-)))

(தலைப்பில்) ற் பக்கத்தில் க் வராதே

said...

//கும்மாங்குத்து குத்தறாங்களே அந்த துணியெல்லாம் அதுக்கப்புறம் என்ன பண்னுவாங்க??//

Over to Vaaramalar Thunukkumoottai Ponnaiya.

said...

இதே மாதிரி எனக்கும் சில சங்தேகங்கள் உண்டு.

-குப்புசாமி செல்லமுத்து

said...

//(தலைப்பில்) ற் பக்கத்தில் க் வராதே //

நன்றி லதா, திருத்திட்டேன். இப்பொ பாருங்க.

said...

சினிமா கம்பெனிகாரங்களோட சொத்து அது...அனைத்தும் கலக்ட் செய்யப்படும்..கோடம்பாக்கத்துல நிறைய டைலர் கடை உண்டு..அடுத்த படத்துக்கு ஆல்ட்ரேஷன் செய்யப்படும்...

நீங்க சீரியசா தான கேக்கறீக...நான் சீரியசா பதில் சொல்லிட்டேன்...ஆமா

said...

செந்தழல் ரவி, ரொம்ப நன்றிங்க... நான் சீரியஸாதான் கேட்டேன்.

said...

பேரு பெத்த நடிகைகள் உபயோகப்படுத்திய துணிகள் என்றால் திரும்ப வராது. ஸ்வாகா! பல நடிகைகள் இப்படி இருக்கிறார்கள்!! ஆனால் படம் முடியும்வரை காஸ்ட்யூம் கன்டினியுடிக்காக பாதுகாப்பார்கள்.
குரூப் ஆர்ட்டிஸ்ட்டுகள் அணியும் சிங்குச்சாக்கள் சினிமா கம்பெனிகளின் மெகா சைஸ் தகரப் பெட்டிகளில் தேமே எனக்கிடக்கும். அடுத்த படத்துக்கு தயாராகும்போது வெட்டி ஒட்டி ஆல்டர் செய்து பழசைப் புதுசாக்க முடியுமா என்று பார்ப்பார்கள். அல்லது கூட்டத்தோடு கூட்டமாக வரும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு அணிவித்து முன்வரிசையில் நிற்க வைத்து விடுவார்கள்.
எப்படிப் பார்த்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டக் கணக்குதான்.

ஒன்று தெரியுமா.. இப்போதெல்லாம் துணிக்குக் கூட ஸ்பான்சர்கள் வருகிறார்கள். 'எவ்வளவு வேணுமோ அவ்வளவு காஸ்ட்யூம்ஸ் நாங்க தரோம். கூடவே நீங்க கேட்கும் பணமும்! 'படத்துல எங்க ஷோரூம் வர்றமாதிரி ஒரு ஸீன் பண்ணிடுங்க. பாடல் காட்சிகள்ல அங்கங்க எங்க ஹோர்டிங்க்ஸ் தெரியணும்' என்று விளம்பரதாரர்களே அந்தச் செலவை ஏற்றுக் கொள்கிறார்கள்.

said...

கௌதம், ரொம்ப நன்றிங்க.... நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க.... இதே மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு. கூடிய விரைவில் அதையும் போடறேன்...

said...

ம்ம்ம்.....

நடிகர்,நடிகைகையெல்லாம் டங்குவாரா யுஸ் பண்ணுவங்க...