Tuesday, May 02, 2006

இரட்டுற மொழிதல்

எங்க வீட்டில் TV ரிமோட் கன்ட்ரோல் பெரியவங்ககிட்டதான் இருக்கும். எதோ சீரியலுக்கு நடுவில் கிடைக்கும் சந்தில் அப்படி இப்படி என்று எனக்கு பிடித்த சிலவற்றை பார்க்க முடியும். அப்படி நான் சேனல் மாற்றிய சமயத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருந்து மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என மோகனாங்கி பத்மினி சிக்கல் சண்முகசுந்தரம் சிவாஜி கணேசனை பார்த்து பாடிக் கொண்டிருந்தார். இவ்வளவு நான் இது ஒரு சீண்டல் வகையை சேர்ந்த பாடல் என் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சுசீலா நன்றாக பாடியிருக்கிறார், சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார், பத்மினி நன்றாக ஆடியிருக்கிறார் என்ற முறையிலேதான் பார்த்திருக்கிறேன். அதே பாட்டை நான் சிறுது நேரம் கழித்து பாடிக்கொண்டிருந்த போது கண்ணதாசன் விளையாண்டிருக்கும் விளையாட்டு எனக்கு முழுதாக விளங்கியது. இது இரட்டுற மொழிதல் என்பதற்கேற்ப எழுதிய பாடல். காளமேகப் புலவர் பாடல்களை புத்தகத்தில் படித்தது, அதுக்கப்புறம் யாரும் இந்த மாதிரி எழுதுவது இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

சாமி முன்னாடி நின்று பாடி பாருங்கள் முருகன் முழு அருள் உங்களுக்குத்தான். அதே பாட்டை சிக்கல் சண்முகசுந்தரத்தை பார்த்து மோகனாங்கி ஒரு பூங்காவில் பாடுவதாக கற்பனை செய்து பாருங்கள் இது காதலி காதலனை முழுதும் தன் பக்கம் இழுக்கப் பார்க்கும் மோகமான பாடல் என்பது புரியும். கண்ணதாசன் பிச்சு உதறியிருக்கிறார்.

எங்கிருந்தாலும் உனை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால் வேறு யாரறிவார்....

மாலவா, வேலவா, மாயவா, சண்முகா ...

இது ரெண்டும் முதல் சரணத்தில்... மோகனாம்பாள் தன் அழகின் மேலுள்ள கர்வத்தில் பாடுவது போல் வரும்.

சுவையோடு நானாட எனை நாடி இது வரை விரைவில் துணையாக நீ வருவாய்...
தூயனே, மாலவா, மாயவா, வேலவா, எனை ஆளும் சண்முகா ...

இது ரெண்டும் ரெண்டாம் சரணத்தில்... மோகனாம்பாள் அப்படியே உருகி உருகி தன் காதலை சொல்லும் கட்டம்.

இதில் யார் பெரியவர் என்ற போட்டியெல்லாம் இல்லை...சிவாஜி, பத்மினி, கண்ணதாசன் எல்லோரும் டாப் கிளாஸ் இதில்... கேட்பவர் மனநிலைக்கேற்ப மாறும் பாடல்...

இப்போ யாருக்கும் இந்த மாதிரி எழுத வருமா என தெரியவில்லை. இதையெல்லாம் வைத்துக் கொண்டாட வேண்டும். இப்போ பாடல்கள் எல்லாம் டபுள் மீனிங்கெல்லாம் கிடையாது, நேராவே சொல்லிடராங்க.

கண்ணதாசன் வாரம் அப்படின்னு போடலாம்ன்னு கூட நினைக்க வைத்தது இந்த பாட்டு.

2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//கண்ணதாசன் வாரம் அப்படின்னு போடலாம்ன்னு கூட நினைக்க வைத்தது இந்த பாட்டு.//

அப்பறம் என்ன? ஆரம்பிங்க!! :)

said...

பாஸ், பாலையா பத்தி பேச்சே இல்லை... காமெடியனை எல்லாம் மதிக்கறது இல்லியா???